ஹோம் /நியூஸ் /Explainers /

Explainer: தாமதமாக வந்த ரயில்... ரயில்வேக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - காரணமும் விளக்கமும்!

Explainer: தாமதமாக வந்த ரயில்... ரயில்வேக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - காரணமும் விளக்கமும்!

railways

railways

2019 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் பாராளுமன்றத்திற்கு அளித்த பதிலில், அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சராசரியாக 389 ரயில்கள் தினசரி தாமதமாக வருவதாக கூறியிருந்தது.

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :

ரயில் சேவை தாமதத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான ஒரு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு வடமேற்கு ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. ஒரு ரயில் ஏன் குறிப்பிட்ட நேரத்திற்கு உரிய இடத்திற்கு வரவில்லை என்பதை ரயில்வே துறையால் விளக்க முடியாமல் போனதால் மனு கொடுத்த நபருக்கு சாதகமாக தீர்ப்பு முடிந்தது. இந்திய ரயில்வே நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு, தாமதங்கள் என்பது ரயில்களின் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் ரயில்வே நெட்வொர்க்கைப் போலவே சிக்கலானதாக இருக்கலாம். இருப்பினும் ஏன் நீதிமன்றம் ரயில்வேக்கு அபராதம் விதித்தது என்பதை பின்வருமாறு விரிவாக காணலாம்.

ரயில்வேத்துறைக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது?

இந்த விவகாரம் கடந்த 2016ம் ஆண்டு நடந்துள்ளது. அப்போது வடமேற்கு ரயில்வேயால் இயக்கப்படும் அஜ்மீர்-ஜம்மு எக்ஸ்பிரஸ் தாமதமானதால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவானது. அதாவது இந்த சம்பவம் நடந்த அன்று அஜ்மீர்-ஜம்மு எக்ஸ்பிரஸ் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஜம்முவை வந்ததடைந்தது.

அந்த சமயத்தில் குடும்பம் ஒன்று ஜம்மு நகரிலிருந்து ஸ்ரீநகருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ளவிருந்தனர். ஆனால், சுமார் 4 மணி நேரம் ரயில் தாமதமானதால் அவர்கள் அதிக விலைக்கு கார் பிடித்து சென்றனர். இதனால், ஸ்ரீநகரில் இருந்து அவர்கள் ஏற வேண்டிய விமானத்தையும் தவற விட்டனர். மேலும் ஸ்ரீநகர் தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்கான முன்பதிவும் ரத்தானது.

Also Read:  குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம்.. சீனாவில் இது தான் இப்ப ட்ரெண்டிங்! – எதுக்குனு தெரியுமா?

இதையடுத்து, ரயில்வே துறையின் தேவையற்ற தாமதம், சேவைக் குறைபாடு போன்றவற்றால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வழக்குப்பதிவு செய்தார். வழக்கு விசாரணையில் ரயில் தாமதம் காரணமாக விமானம் தவறவிட்ட பயணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடு செய்ய வடமேற்கு ரயில்வேக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ரயில்வே சார்பில் மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ரயில்வேயின் கோரிக்கைகள் தேசிய நுகர்வோர் சர்ச்சை தீர்வு ஆணையம் உட்பட பல மன்றங்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும் கீழமை நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டுமாறு உத்தரவிட்டது. ஏமாற்றமடைந்த ரயில்வேத்துறை இந்த தீர்ப்புக்கு எதிராக இறுதியில் உச்சநீதிமன்றத்தை நாடியது.

Also read: WFH-ல் இருந்து மீண்டும் அலுவலக வேலைக்கு திரும்பும் ஐடி நிறுவனங்கள்!

இந்த வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளபட்டு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமதத்திற்கு ஒரு நியாயத்தை அல்லது சரியான காரணத்தை வழங்க தவறினால் அதற்கு எதிராக உரிமை கோரும் எந்தவொரு பயணிக்கும் இழப்பீடு வழங்க ரயில்வே பொறுப்பேற்க வேண்டும் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.

இதையடுத்து ரயில்வே சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ரயில்கள் தாமதமாக ஓடுவதற்கு அபராதம் விதிக்க முடியாது என்றும், ஒரு ரயிலை இயக்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டிய அவசியம் ரயில்வே-க்கு இல்லை என்பன உள்ளிட்ட விதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், தாமதத்தை விளக்க முடியாத வழக்கில் இழப்பீடு வழங்காமல் இரயில்வே தப்பிக்க முடியாது என்று இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தெரிவித்தனர்.

Also read:     மினி ஷார்ட்ஸ் அணிந்து நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு!

அறிக்கைகளின்படி, ரயில்வே விதிகளின்படி, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் தாமதமாக வரும் எந்த ரயிலும் தாமதமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல, "ஒவ்வொரு பயணியின் நேரமும் விலைமதிப்பற்றது. அவர்கள் ரயில் பயண நேரத்தை கருத்தில் கொண்டு வேறு பயணங்களுக்கு கூட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கலாம். எனவே, தாமதத்திற்கான காரணங்களை விளக்கும் வரை மற்றும் ரயில் தாமதத்திற்கு சில நியாயங்கள் இருந்தன என்பதை நிறுவி நிரூபிக்கப்படும் வரை, ரயில்வேதுறை இதுபோன்ற தாமதத்திற்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும்", என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தனை ரயில்கள் இதுவரை தாமதமானது?

2018ம் ஆண்டில் ரயில் தாமதம் குறித்து ஆய்வு நடத்திய கன்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலின் (CAG) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, இந்திய ரயில்வே "உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டிருந்தது. சுமார் 1.2 லட்ச கி.மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள தண்டவாள நெட்வொர்க்கில் தினமும் 13,000 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகின்றன.

CAG எடுத்த தணிக்கை, 10 மண்டல ரயில்வேக்களில் 15 முக்கிய நிலையங்களை உள்ளடக்கியது. மேலும் இந்த அமைப்பு ஒரு மாத செயல்பாட்டிற்கான தரவை பகுப்பாய்வு செய்தது. அதில் "ஹவுரா, இடார்சி மற்றும் அகமதாபாத் தவிர அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களிலும் பயணிகள் ரயில்கள் 15 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" தெரிய வந்தது. மேலும் மேற்கணட அந்த மூன்று நிலையங்களிலும், ஒரு ரயிலுக்கு 15 முதல் 25 நிமிடங்கள் தாமதமாகின. இதுதவிர "சரக்கு ரயில்கள் பயணிகள் ரயில்களை விட கணிசமாக அதிக நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. டெல்லி, ஹவுரா மற்றும் சென்னை சென்ட்ரல் தவிர அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களிலும் சரக்கு ரயிலுக்கு 21 முதல் 100 நிமிடங்கள் வரை தாமதமானது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read:   10 ஆண்டுகள் ஒரே அறையில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்த காதல் ஜோடி முறைப்படி திருமணம்!

இதுதொடர்பாக 2019 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் பாராளுமன்றத்திற்கு அளித்த பதிலில், அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சராசரியாக 389 ரயில்கள் தினசரி தாமதமாக வருவதாக கூறியிருந்தது. இந்த எண்ணிக்கை அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 628 ஆகவும், மே மாதத்தில் 517 ஆகவும் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தது. அதேசமயம் அதற்கு அமைச்சகம் பதிலளித்ததாவது, தாமதங்களைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, “ கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் தாமத நிமிடங்கள் 36,72,043 மற்றும் 27,30,830 ஆக இருந்தது. அதுவே கடந்த மார்ச் 2019ம் ஆண்டில் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் தாமத நிமிடங்கள் 25,04,263 மற்றும் 13,45,067 ஆக குறைந்திருக்கிறது" என தெரிவித்துள்ளது.

ரயில்கள் தாமதமாவதற்கான காரணங்கள் என்ன?

ரயில்கள் தங்கள் இயக்க அட்டவணையை கடைப்பிடிக்க போராடுவதற்கான காரணங்களை எடுத்துக்காட்டி, ரயில்வே அமைச்சகம் கூறியதாவது, தாமதங்கள், அதன் உள் வேலை தொடர்பான காரணிகளால் மட்டுமல்ல, வெளிப்புறக் காரணிகளாலும் ஏற்படலாம். இது ரயில்வே கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இதுதவிர அமைச்சகம் பட்டியலிடப்பட்ட காரணிகளில், "ரயில் பாகங்களில் பழுது, லைன் கொள்ளளவு, முனைய திறன், போதிய உள்கட்டமைப்பு" போன்ற உள்கட்டமைப்பு சிக்கல்களும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் அதிகரிப்பும் கூட தாமதத்திற்கு காரணமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, மூடுபனி, மழை போன்ற பாதகமான வானிலை, வெள்ளம், சூறாவளி, கனமழை போன்ற இடையூறு விளைவிக்கும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களும் தாமதத்திற்கு வழிவகுக்கும். அதே சமயம் லெவல் கிராசிங் வாயில்களில் கனரக சாலை போக்குவரத்தும் தாமதத்திற்கு காரணமாகும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், ரயில்வே சொத்துக்களை திருடுதல், கால்நடைகள் மற்றும் மனிதர்கள் மீது ரயில்கள் மோதுவது போன்ற வழக்குகள் கூட தாமதத்திற்கு வழிவகுக்கும் என்று அமைச்சகத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Arun
First published:

Tags: Indian Railways, News On Instagram, Supreme court