Explainer: பாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்த நெட்ஃப்ளிக்ஸ் எடுத்த சோதனை நடவடிக்கை - என்ன காரணம்?

Explainer: பாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்த நெட்ஃப்ளிக்ஸ் எடுத்த சோதனை நடவடிக்கை - என்ன காரணம்?

நெட்ஃபிலிக்ஸ்

பொழுதுபோக்கு அம்சங்கள் சார்ந்த சில டிஜிட்டல் துறைகள் இதுவரை இல்லாத அளவு வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக ஏராளமான துறைகள் பாதிக்கப்பட்டாலும், ஒரு சில துறைகள் குறிப்பாக பொழுதுபோக்கு அம்சங்கள் சார்ந்த சில டிஜிட்டல் துறைகள் இதுவரை இல்லாத அளவு வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளன. இதன்படி உலகின் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், உலகளாவிய தொற்று நோய் மற்றும் டைகர் கிங் மற்றும் மனி ஹீஸ்ட் போன்ற வெற்றி நிகழ்ச்சிகளால் கடந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 37 மில்லியன் புதிய சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது.

இதன் மூலம் சுமார் 25 பில்லியன் டாலர் வருவாய் மற்றும் சுமார் 2.8 பில்லியன் டாலர் லாபத்தையும் பெற்றுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்களுக்கான பாஸ்வேர்ட் ஷேர் செய்து கொள்வது என்பது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே மிகவும் சகஜமான ஒன்று.

ஆனால் தற்போது தங்களது வாடிக்கையாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டுகளை ஷேர் செய்வதை தடுக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. அதன்படி இனி சொந்தமாக நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வருகிறது. இதனால் முன் போல நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டை நெருக்கமானவர்களுக்கு உரிமையாளர்களால் ஷேர் செய்ய முடியாது என தெரிகிறது. இந்த மாத துவக்கத்தில் சில நெட்ஃப்ளிக்ஸ் யூசர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அதில் இந்தக் கணக்கின் உரிமையாளருடன் நீங்கள் வாழவில்லை என்றால், தொடர்ந்து நீங்கள் நெட்ஃப்ளிக்ஸை பயன்படுத்த உங்களுக்கென்று ஒரு அக்கவுண்ட் தேவை என கூறப்பட்டிருந்தது.

நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும் குறியீடு வழியாக, பயனர்கள் தங்கள் கணக்கை இரு காரணி அங்கீகாரம்(Two-factor authentication) மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், பாஸ்வேர்ட் ஷேரிங் கட்டுப்படுத்த முதல் நிலை அங்கீகாரம் பெற்ற நபர்களால் அக்கவுண்ட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதே என்றார். இந்த நடவடிக்கை தற்போது ஒரு சோதனை நிலையில் உள்ளது. உறுதியான முடிவை இன்னும் நிறுவனம் எடுக்கவில்லை.

நெட்ஃப்ளிக்ஸின் இந்த முடிவிற்கு காரணம் என்ன?

அக்கவுண்ட் பாஸ்வோர்ட்களுடன் தனிப்பட்ட மற்றும் வணிகரீதியான பயன்பாட்டிற்கானது, மேலும் இது வீட்டுக்கு அப்பாற்பட்ட நபர்களுடன் பகிரப்படாது என்று நெட்ஃப்ளிக்ஸ் விதிமுறைகள் மற்றும் சேவைகள் குறிப்பிடுகிறது. எத்தனை யூசர்கள் நிறுவனத்தின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறி தளத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக மதிப்பிடப்படவில்லை.

இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டில், நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்புத் தலைவர் கிரெக் பீட்டர்ஸ் பாஸ்வேர்ட் ஷேரிங் தொடர்பான சிக்கலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார், பெரும்பாலான யூசர்கள் பாஸ்வேர்ட்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஷேர் செய்கிறார்கள். இதனால் பாஸ்வேர்ட் ஷேரிங் மற்றும் புதிய சாதன அங்கீகாரத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிறது. மேலும் ஒரிஜினல் வாடிக்கையாளரின் தனியுரிமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கும் ஆபத்து உள்ளது என்று விளக்கம் அளித்திருந்தார். மேற்கண்ட இரு காரணி அங்கீகாரமானது யூசர்கள் கோட்களை ஷேர் செய்யவும் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் ஒரிஜினல் அக்கவுண்ட் வைத்திருப்பவர் தங்கள் அக்கவுண்ட்டை அவர்கள் அங்கீகரித்த ஒருவர் தான் பயன்படுத்துகிறாரா என்று அறிந்திருப்பதையும் உறுதி செய்கிறது. ஒரு கட்டத்தில் உரிமையாளர்கள் அல்லாதவர்கள் புதிய அக்கவுண்டை ஓபன் செய்தால் தான் நெட்ஃப்ளிக்ஸை பார்க்க முடியும் என்ற நிலை உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது புதிய முடிவு ஏன்?

பாஸ்வேர்ட் ஷேரிங் என்பது நெட்ஃப்ளிக்ஸ் அல்லது வேறு எந்த சந்தா அடிப்படையிலான வலைத்தளத்திற்கும் புதியதல்ல. ஆனால் இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஏன் நடவடிக்கை எடுக்கிறது?

தொற்று காலத்தில் பன்மடங்கு சந்தாதாரர்களை பெற்றாலும், தற்போது டிஸ்னி + மற்றும் பிரைம் போன்ற பிற ஸ்ட்ரீமிங் தளங்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொள்வதால் தொற்றுக்கு பிந்தைய காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் புதிய கட்டண சந்தாதாரர்களை ஈர்க்க போராடக்கூடும். நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் சீரிஸ்கள் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும், மார்வெல் மற்றும் ஸ்டார் ட்ரெக் போன்ற உரிமையாளர்களிடம் நிலவும் போட்டி காரணமாக அவற்றின் நிலை வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது.

Also read... Rajinikanth-Dhanush: ஒரே நாளில் விருதுகளைப் பெறும் ரஜினி - தனுஷ்!

மேலும் நெட்ஃப்ளிக்ஸ் தன் சந்தை ஆதிக்கத்தை தக்கவைக்க போராட தயாராக உள்ள நேரத்தில், அதன் சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் பாஸ்வேர்ட் ஷேரிங் உள்ளிட்ட செயல்கள் மூலம் கணிசமான வருவாயை இழந்து, அதற்கு பணம் செலுத்தாமல் இருப்பது அதன் எதிர்காலத்தில் கடும் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும். அதே போல வாடிக்கையாளர்கள் சந்தாக்களை கைவிடுவது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்குஆபத்து என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே வாடிக்கையாளர்கள் நிறுவனம் வழங்கும் சேவைகளுக்கு பணம் செலுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, சந்தையில் நிலவி வரும் கடும் போட்டியை சமாளித்து வெற்றி பெற இம்முயற்சியை சோதனை முறையில் தற்போது செய்து வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: