Explainer: ரெனால்ட்ஸ் Wrexham AFCயில் முதலீடு செய்த டெட்பூல் படத்தின் நடிகர் ரியான் - ஏன் தெரியுமா?

நடிகர் ரியான்

பொதுவாக முதலீட்டாளர்கள் எதிலாவது முதலீடு செய்கிறார்கள் என்றால் அதற்கு தொடர்புடைய மற்றொன்றிலும் முதலீடு செய்வார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொதுவாக முதலீட்டாளர்கள் எதிலாவது முதலீடு செய்கிறார்கள் என்றால் அதற்கு தொடர்புடைய மற்றொன்றிலும் முதலீடு செய்வார்கள். பின்னர் அந்த இரண்டு முதலீட்டையும் ஒன்றிணைத்து அதில் பெரும் லாபத்தை ஈட்டுவதற்கான வேலையை தொடங்குவார்கள். அந்த நிலையில் பிரபல டெட்பூல் பட நடிகரின் சமீபத்திய செய்தி ஒன்றைத்தான் இப்போது நாம் காணப்போகிறோம்.

    உலகின் மூன்றாவது பழமையான தொழில்முறை கால்பந்து கிளப், உலகின் மிகப் பழமையான சர்வதேச கால்பந்து மைதானத்தில் விளையாட உள்ளது, தற்போது ஆங்கில தொழில்முறை கால்பந்தின் மிகக் குறைந்த லீக்கில் கிளப் இப்போது விளையாட உள்ளது. டெட்பூல் பட நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ராப் மெக்லென்னி ஆகியோரால் இந்த கிளப் வாங்கப்பட்டுள்ளது. நேஷனல் லீக்கின் ஒரு பகுதியான ரெக்ஸ்ஹாம் ஏ.எஃப்.சி, ரியான் மற்றும் ராப்பிடமிருந்து $2 மில்லியனுக்கான முதலீட்டைப் கிளப் நிர்வாகம் பெற்றுள்ளது.

    இந்த பழமையான கிளப்பின் ஆதரவாளர்களுக்கு கிளப் சில வாக்குறுதிகளை அளித்துள்ளது அவற்றில், ரேஸ்கோர்ஸ் மைதானத்தை மேம்படுத்துவது, கிளப் மறுபெயரிடப்படாது, மற்றும் இடமாற்றம் செய்யப்படாது என்பன முக்கியமானவை. Covid-19 ஆல் வேலை மற்றும் வருமானத்தை இழந்த கிளப்பின் வீரர்கள் மற்றும் வேலையாட்களுக்கு சம்பளத்தை அளிக்க கிளப்பின் புதிய உரிமையாளர்களான ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ராப் மெக்லென்னி ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.

    ரெக்ஸ்ஹாம் ஏ.எஃப்.சி ஏன்/எதற்காக?

    ரெக்ஸ்ஹாம் ஏ.எஃப்.சி என்பது ஆங்கில கால்பந்தில் ஒரு பழைய மற்றும் புகழ்பெற்ற பெயர், ஆனால் இந்த கிளப் நெடுங்காலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை, இப்போது இங்கிலாந்தில் தொழில்முறை கால்பந்தின் (தேசிய லீக்கின் முதல் அடுக்கு) மிகக் குறைந்த பிரிவில் - ரெக்ஸ்ஹாம் எஃப்சி ஒரு சிறிய முதலீடாக உள்ளது. கிளப்பிற்கு இப்போது கிடைத்த ஒரு நட்சத்திர அந்தஸ்த்தை கருத்தில் கொண்டு கிளப் வீரர்கள் உற்சாகமாக விளையாட இது ஒரு நல்ல வாய்ப்பு. ரியான் ரெனால்டின் முதலீடுகளின் கடந்தகால வரலாறு, ரெக்ஸ்ஹாமின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான தெளிவான படத்தை நமக்கு அளிக்கிறது.

    ஏன் ரியான் ரெனால்ட்ஸ்?

    நாஸ்டாக், ரெனால்ட்ஸை ஒரு "சூப்பர் முதலீட்டாளர்" என்று வகைப்படுத்துகிறது. ஏவியேஷன் ஜின் மற்றும் டிஸ்கவுண்ட் ப்ரீபெய்ட் ப்ரொவைடர் 'மின்ட் மொபைல்' போன்ற பிராண்டுகளில் பங்குகளை ரெனால்ட்ஸ் நீண்ட வருடங்களாக வைத்திருக்கிறார். இந்த பிராண்டுகளுக்கு பிரபலமும் பெரிய வருவாயும் இல்லை. தன்னிடம் இருக்கும் பிராண்ட் மதிப்பைப் இதற்கு பயன்படுத்துவதன் மூலம், ரெனால்ட்ஸ் இந்த பிராண்டுகளின் மதிப்பை திறம்பட உயர்த்தியுள்ளார். உதாரணத்திற்கு ஏவியேஷன் ஜின்னை எடுத்துக் கொள்வோம். முதல் படத்தில் நடிக்க $2 மில்லியன் டாலர் சம்பளம் பெற்ற டெட்பூல் நடிகர், ஜின் நிறுவனத்தில் ஒரு ஷேரை வாங்கிய பிறகு, அடுத்த ஆண்டே அவர்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சியைக் கண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரெனால்ட்ஸ் ஏவியேஷன் ஜின்னில் தனது பங்குகளை டியாஜியோவுக்கு $610 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளார்.

    அதில் $335 மில்லியன் டாலர் முன்பணமாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் $275 மில்லியன் டாலர் வரை கூடுதல் சம்பளமாக வருவாயை பெற முடியும் என்று டியானியோ கூறியதாக CNBC தெரிவித்துள்ளது.



    ரெக்ஸ்ஹாம் முதலீட்டின் இறுதி இலக்கு :

    ரெனால்ட்ஸ் மற்றும் மெக்லென்னியுடன் மூன்றாவது, குறைவாக அறியப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் இருக்கிறார். எழுத்தாளரும், நகைச்சுவை நடிகருமான ஹம்ப்ரி கெர் BBCயிடம் எண்ட்கேம் பற்றி ரெக்ஸ்ஹாம் போன்ற பழமையான மற்றும் பலரால் மறக்கப்பட்ட கிளப்பை பற்றி பேசினார். கெர் BBCயிடம், "என் நம்பிக்கை என்னவென்றால், லீக் ஒன்னில் நுழைந்து நல்ல செல்வாக்கை பெற வேண்டும். நாங்கள் பக்காவாக பிளான் செய்த பாதையின் உச்சத்திற்கு வந்தால், சாம்பியன்ஷிப் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும்" என்றும் நாங்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், அடுத்த கட்டமாக "£200 மில்லியன் டாலர்களை லூவிலிருந்து எடுக்க தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு கிளப்பை விற்போம்" என்றும் அவர் கூறினார்.

    அமெரிக்கர்கள் ஏன் ஐரோப்பிய கால்பந்தில் முதலீடு செய்கிறார்கள்?

    2010 களின் முற்பகுதியிலிருந்து சீன நிறுவனங்களுக்கு ஐரோப்பிய கால்பந்தில் முதலீடு செய்ய அரசு அனுமதி அளித்திருந்தது. வெளிநாடுகளில் கால்பந்தில் முதலீடு செய்வதன் மூலம் பிராண்ட் அங்கீகாரத்தைப் பெறுவதே இதன் முக்கிய நோக்கம். ஆனால், 2020ம் ஆண்டு நிலவரப்படி, கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் மேற்கத்திய பொருளாதாரங்களுக்கும் சீனாவிற்கும் இடையிலான நம்பிக்கையின் ஸ்த்திரமில்லாததன்மை போன்ற பல காரணங்கள் மற்ற நாட்டவர்களை ஐரோப்பாவில் முதலீடு செய்ய தூண்டியிருக்கலாம். இந்த சீன நிறுவனங்கள் விட்டுச்சென்ற இடைவெளியை இப்போது அமெரிக்க முதலீட்டாளர்களால் நிரப்பப்படுகிறது.

    Also read... ஒரு பூனையால் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்...!

    டெலாவேரை தளமாகக் கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான 'பியூட்டிஃபுல் கேம்' குழுமத்தின் தலைமை நிர்வாகி ஆலிவர் பின்லே 'தி அட்லாண்டிக்' பத்திரிகையுடன் பேசும்போது, "ஐரோப்பாவில், ஆயிரக்கணக்கான கிளப்புகள் உள்ளன, மிகக் குறைந்த நுழைவு புள்ளியுடன், பிளேயர் வர்த்தகத்திலும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம், இது அமெரிக்க விளையாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒன்று, இதனால் ஒரு அமெரிக்கரை பார்த்து பல அமெரிக்கர்களும் வரிசையாக முதலீடுகளுக்கு தயாராகின்றனர். அதுமட்டுமல்லாது ஐரோப்பியர்களை விட அமெரிக்கர்கள் முதலீடுகளில் சாதனை புரிய முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருப்பதாகவே இதன் மூலம் தெரிகிறது" என்று கூறினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: