Explainer: சமையல் எண்ணெய்களின் விலை உயர காரணம் என்ன.? விலையை கட்டுப்படுத்த அரசு என்ன செய்யலாம்

சமையல் எண்ணெய்

கடந்த ஒரு வருடத்தில் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வனஸ்பதி, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகிய 6 சமையல் எண்ணெய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

  • Share this:
நம்முடைய உணவு முறைகளை மேலும் கூடுதல் சுவையாக்குவதில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டில் எண்ணெய் பயன்படுத்தி சமைக்காத உணவு என்பது மிக குறைவாகவே இருக்கிறது. அப்பளம் பொரிப்பதில் இருந்து காரசாரமான பொரியல், வறுவல் என நாம் சாப்பிடும் பெரும்பாலான அனைத்து உணவுகளிலும் எண்ணெயின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.

சராசரியாக ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று சமையல் எண்ணெய்காகவே மாதம் குறைந்தபட்சம் ரூ.450 முதல் ரூ.600 வரை செலவிட கூடிய சூழல் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் நிறைய சமையல் எண்ணெய்களின் விலை வரலாறு காணாத அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.

ALSO READ | ரீஃபைண்ட் ஆயிலை விட செக்கு எண்ணெய் சிறந்தது.. ஏன் தெரியுமா?

சமையல் எண்ணெய் வகைகளின் அதிரடி விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தாலும், இந்த தாக்கம் திடீரென ஏற்படவில்லை. மாறாக விலை உயர்வு என்பது கடந்த ஒரு வருடமாகவே இருந்து வருகிறது.

இந்தியர்கள் எவ்வளவு சமையல் எண்ணெயை சேர்த்து கொள்கிறார்கள், இந்த விலை உயர்வுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகள் எப்படி காரணமாகின்றன, விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசின் முன் உள்ள தேர்வுகள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ALSO READ | கற்பூரம், ஓமம் ஆகியவற்றை நுகர்வதால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா? மருத்துவர்களின் பதில்

சமையல் எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

நுகர்வோர் விவகாரங்கள் துறை (Department of Consumer Affairs) வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, கடந்த ஒரு வருடத்தில் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வனஸ்பதி, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகிய 6 சமையல் எண்ணெய்களின் விலை இந்தியளவில் சுமார் 20% முதல் 56% வரை உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் பேக்கேஜ் செய்யப்பட்ட 1 கிலோ கடுகு எண்ணெயின் ரீட்டெயில் விலை ரூ.118-ஆக இருந்த நிலையில் சுமார் 44% விலை அதிகரித்து தற்போது கிலோ ரூ.171-ஆக விற்கப்பட்டு வருகிறது. சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் விலைகளும் கடந்த ஆண்டை விட சுமார் 50% க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளன. மேற்காணும் 6 சமையல் எண்ணெய்களின் மாத சராசரி விலைகள், 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது உயர்ந்து காணப்படுகிறது.

கோவிட் -19 காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனால் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

ALSO READ |  ஜாமீன் என்றால் என்ன? எப்படி வாங்குவது? - முழு விவரம்

சமையல் எண்ணெய் இந்தியாவில் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது.?

மக்களின் உணவுப்பழக்கங்கள் முன்பை போல இல்லாதது ஒருபுறம், உயர் வருமானங்களை கொண்ட வேலை பார்க்கும் மக்களின் உணவு ஈடுபாடு ஒருபுறம் என கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டில் சமையல் எண்ணெய்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வரும் அதே நேரத்தில் , சன்ஃப்ளவர் ஆயில் மற்றும் சோயாபீன் ஆயில் உள்ளிட்ட ரீஃபைண்ட் ஆயில்களின் பங்கு நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளது.

1993-94 மற்றும் 2004-05 ஆண்டுகளுக்கு இடையில், சமையல் எண்ணெய்களின் மாதாந்திர தனிநபர் நுகர்வு கிராமப்புறங்களில் 0.37 கிலோவிலிருந்து 0.48 கிலோவாகவும், நகர்ப்புறங்களில் 0.56 கிலோவிலிருந்து 0.66 கிலோவாகவும் அதிகரித்தது. 2011-12-ஆம் ஆண்டுகளின் வாக்கில், சமையல் எண்ணெய்களின் மாதாந்திர தனிநபர் நுகர்வு கிராமப்புறங்களில் 0.67 கிலோவாகவும், நகர்ப்புறங்களில் 0.85 கிலோவாகவும் உயர்ந்தது.

வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் ஆண்டுக்கு தனிநபர் எடுத்து கொள்ளும் காய்கறி எண்ணெய்களின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் 19.10 கிலோ முதல் 19.80 கிலோ வரை உள்ளது.

ALSO READ |  யாரெல்லாம் உங்கள் Facebook -ஐ பார்த்தவர்கள்? இதோ டிப்ஸ்!

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி எவ்வளவு.? இறக்குமதி எவ்வளவு.?

2015-16 முதல் 2019-20 வரை காய்கறி எண்ணெய்களுக்கான தேவை 23.48–25.92 மில்லியன் டன் வரம்பில் உள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மூலங்களில் இருந்து இந்தியா வெறும் 10.65 மில்லியன் டன் எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

ஆனால் அந்த ஆண்டின் எண்ணெய் தேவை சுமார் 24 மில்லயன் டன். இந்த இடைவெளியை குறைக்க தனது தேவையை பூர்த்தி செய்ய இந்தியா இறக்குமதியை நம்பி உள்ளது. 2019-20 ஆம் ஆண்டில், இந்தியா ரூ .61,559 கோடி மதிப்புள்ள 13.35 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்தது.

பாமாயில் (7 மில்லியன் டன்), சோயாபீன் (3.5 மில்லன் டன்) மற்றும் சூரியகாந்தி (2.5 மில்லியன் டன்) இதில் அடக்கம். சோயாபீன் எண்ணெய் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்தும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயில், உக்ரைன் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

ALSO READ |  இன்ட்ரா டே டிரேடிங் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!

விலையேற்றம் ஏன்.?

சர்வதேச சந்தையில், பல்வேறு காரணிகளால் சமையல் எண்ணெய்களின் விலை சமீப மாதங்களாக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவோ எண்ணெய்கான அதன் உள்நாட்டு தேவையில் சுமார் 56% இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்கிறது. கச்சா பாமாயிலின் விலை மே 25 அன்று ஒரு டன்னுக்கு 3,890 ரிங்கிட் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 2,281 ரிங்கிட்டாக இருந்தது.

அதே போல சிகாகோ வர்த்தக வாரியத்தில் (CBOT), ஜூலை விநியோகத்திற்கான சோயாபீனின் இறுதி விலை மே 24 அன்று டன்னுக்கு 559.51 டாலராக இருந்தது, கடந்த ஆண்டு இதே நேரத்தில் 306.16 டாலராக இருந்தது. மேலும் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலைகளின் இயக்கத்தின் குறிகாட்டியான, காய்கறி எண்ணெய்களுக்கான உணவு மற்றும் வேளாண் அமைப்பு விலை குறியீடு (Food and Agriculture Organization price index ) நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 162-ஆக உயர்ந்தது.

ALSO READ | வாட்ஸ்அப் மெசேஜ்களை வேவு பார்க்கிறதா மத்திய அரசு? மூன்று  ‘ப்ளூ டிக்’ உண்மையா?

இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 81-ஆக இருந்தது. கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களுக்கான உலகளாவிய தேவை அதிகமாக இருப்பதால் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. சீனாவின் கொள்முதல், மலேசியாவில் தொழிலாளர் பிரச்சினைகள், பனை மற்றும் சோயா உற்பத்தி செய்யும் பகுதிகளில் லா நினாவின் தாக்கம் மற்றும் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் கச்சா பாமாயில் மீதான ஏற்றுமதி வரிகள் ஆகியவை பிற காரணங்களாகும்.

அரசு என்ன செய்யலாம்.?

சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்கான குறுகிய கால நடவடிக்கைகளில் ஒன்று இறக்குமதி வரிகளை குறைப்பதாகும். வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் மற்றும் சமூக நலன்புரி செஸ் உள்ளிட்ட இறக்குமதி வரிகளின் விகிதம் 35.75% ஆகும். சுத்திகரிக்கப்பட்ட மற்றும் டியோடரைஸ் செய்யப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி 59.40% ஆக உள்ளது.

ALSO READ | கருப்பு பூஞ்சை குழந்தைகளை பாதிக்குமா.? 3வது அலையால் ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?

கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளின் விகிதம் 38.50% முதல் 49.50% என்ற வரம்பில் உள்ளது. கச்சா பாமாயிலை இறக்குமதி செய்வதற்கான பாலிஸி "இலவசம்", அதே நேரத்தில் ஆர்.பி.டி பாமாயிலுக்கு இது "தடைசெய்யப்பட்டுள்ளது". எனவே ரீஃபைண்ட் பாமாயில் மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்தால், சமையல் எண்ணெய்களின் விலைகள் உடனடியாக குறையும் என்று அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இருப்பினும் சமையல் எண்ணெய் இன்டஸ்ட்ரி வரிகளை குறைக்க தயாராக இல்லை. ஏனென்றால் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டால், சர்வதேச விலைகள் உயரும், அரசிற்கு வருவாய் கிடைக்காது. எனவே மற்றொரு யோசனையான் சமையல் எண்ணெய்களுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் மற்றும் பொது விநியோக முறையின் கீழ் ஏழைகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: