வரும் ஞாயிற்றுக்கிழமை நொய்டாவில் உள்ள செக்டார் 93A இல் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட உள்ளது. 9 நொடிகளில் எப்படி தரைமட்டம் ஆகும் என்று தெரிந்துகொள்ளுங்கள்…
கட்டிடம் உருவான கதை…
2004 ஆம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 93A இல் 'சூப்பர்டெக் எமரால்டு கோர்ட்' ஹவுசிங் சொசைட்டி கட்டப்பட உத்தேசிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஒன்பது தளங்களைக் கொண்ட 14 கோபுரங்கள் கட்டும் கட்டிடத் திட்டத்தை நொய்டா உள்ளாட்சியிடம் கொடுத்து அனுமதி பெறப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் பின்னர் திருத்தப்பட்டு. 2012 ஆம் ஆண்டு , நொய்டா அதிகாரம் புதிய திட்டத்தை மதிப்பாய்வு செய்தது, அதில் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்களின் அமைப்பு நிர்ணயிக்கப்பட்டது.
வழக்கு…
டெல்லியின் குதுப் மினாரை விட உயரமாகக் கட்டப்பட்ட இந்த இரட்டை கோபுரங்கள், நொய்டா பகுதியின் புவியியல் சார்ந்த நிலைக்கு ஏற்றதாக கட்டப்படவில்லை என்றும் , கட்டுமானம் சட்டவிரோதமானது என்று கூறி, குடியிருப்போர் நலச் சங்கம் (RWA) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 2014 ஏப்ரல் 4 இல், இரட்டை கோபுரங்களை, உத்தரவை தாக்கல் செய்த நாளிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் சொந்த செலவில் இடிக்க, அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !
பிளாட் வாங்கியவர்கள் கட்டணத்தை 14% வட்டி விகிதத்துடன் திருப்பித் தருமாறு பில்டருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது, அதன் படி ஆகஸ்ட் 21 2022 அன்று கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றம் நொய்டா ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, இடிப்பு தேதியை ஆகஸ்ட் 28 வரை நீட்டித்தது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடிப்பு நடைபெறும். தொழில்நுட்பக் காரணங்களிலோ வானிலை காரணங்களினாலோ ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எப்படி இடிக்கப்படும்?
இரட்டைக் கோபுரங்களை இடிக்கும் செயல்முறையின் விவரங்களை விளக்கிய கட்டிட இடிப்பு நிபுணர் , "இது ஒரு எளிய செயல்முறை; நாங்கள் டைனமோவிலிருந்து மின்னோட்டத்தை உருவாக்குகிறோம், பின்னர் அனைத்து அதிர்ச்சிக் குழாய்களிலும் டெட்டனேட்டர்களை நிரப்பியுள்ளோம். பற்றவைக்கும் பொத்தானை அழுத்தியதும் 9 முதல் 10 வினாடிக்குள் கட்டிடம் முழுமையாக இடிந்து விழும்" என்கிறார்.
மொத்தம் 3700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடத்தின் 9,000 இடங்களில் இந்த வெடிமருந்துகள் சங்கிலியாக வைக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தியதும் எல்லாம் வெடித்து உட்புறமாக விழும் என்று விளக்கினார்.
ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?
மேலும் , "நாங்கள் கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 50-70 மீ தொலைவில் இருப்போம், எந்த ஆபத்தும் இருக்காது, மேலும் கட்டிடம் சரியான முறையில் இடிந்து விழும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் . வெடிக்கும் பகுதி நான்கு அடுக்கு இரும்பு சுற்று வேலி மற்றும் 2 போர்வை அமைப்புகளால் மூடப்பட்டுள்ளது. அதனால் எந்த இடிபாடும் வெளியில் வராமல் தடுக்கும். தூசி மட்டுமே பறக்கும் ," என்று அவர் கூறினர். அதிர்வுகளை குறைக்கும் வகையில் தாக்க மெத்தைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அபெக்ஸ் (32 மாடிகள்) மற்றும் செயேன் (29 மாடிகள்) இடிப்புகள் சுமார் 35,000 கன மீட்டர் குப்பைகளை விட்டுச்செல்லும், அவை அகற்றப்படுவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Building collapse, Noida, Noida Twin Tower