மும்பையில் ஆபாச படமெடுத்த கும்பல் - சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறை!

மும்பையில் ஆபாச படமெடுத்த கும்பல் - சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறை!

மாதிரிப் படம்

மும்பையில் பங்களாக்களில் ஆபாச படமெடுத்து ஆப் வழியாக ஓடிடியில் பரப்பிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பையில் பங்களாக்களில் ஆபாச படமெடுத்து ஆப் வழியாக ஓடிடியில் பரப்பிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில் நகரங்களிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள பங்களாக்களில் ஆபாச படங்கள் பதிவு செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. படப்பிடிப்பு என்ற பெயரில் பங்களாக்களை வாடகைக்கு எடுக்கும் கும்பல், அங்கு ஆபாச படங்களை பதிவு செய்து மாதக் கட்டணத்தில் செயலிகள் மூலம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக துணை நடிகர் கெஹ்னா வசிஸித் உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், 12 செயலிகளையும் முடக்கியுள்ளனர். துணை நடிகர் கெஹ்னா வசிஸித் பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

ஆபாச செயலிகளின் வருமானம்

ஆபாச இணையதளங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததையடுத்து, செயலிகள் (App) மூலம் ஓடிடி தளத்தில் ஆபாச படங்களை இந்தக் கும்பல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த செயலிகள் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. மாத சந்தா அடிப்படையில் இந்த செயலிகளுக்கு லட்சத்துக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக இருந்துள்ளனர். இதனால், மாதம் 2 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பார்த்துள்ள இந்த கும்பல், மிக மிக சொற்ப தொகையில் இந்த படங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆபாச படங்களின் செலவு

வீடியோ கேமராக்களுக்கு பதிலாக தங்களிடம் இருக்கும் செல்போன்களின் உதவியுடன் வாரத்துக்கு 2 முதல் 3 படங்களை படங்களை பதிவு செய்துள்ளனர். இதற்காக, மும்பை நகரம் அல்லது சுற்றுப்புறங்களில் 10 ஆயிரம் ரூபாய் தொகைக்கு பங்களாக்களை வாடகைக்கு எடுக்கும் கும்பல், படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு 10 ஆயிரம் ஊதியமாக கொடுத்துள்ளனர். மிக மிக சொற்ப தொகையில் படத்தை உருவாக்கி அதனை ஆன்லைனில் வெளியிட்டு, கோடிகளை சம்பாதித்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பை நகரின் மாத் பகுதியில் அமைந்திருக்கும் பங்களா ஒன்றில் சூட்டிங் நடைபெற்றபோது, இந்த கும்பலை கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

மும்பையை தேர்வு செய்வது ஏன்?

ஆபாச படங்கள் மும்பையில் அதிக அளவு எடுக்கப்படுவது ஏன் என காவல்துறை அதிகாரியிடம் கேட்டப்போது, பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என அங்கு வருபவர்கள் ஏராளம் என தெரிவித்துள்ளார். அவ்வாறு வருபவர்களை படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி, இதுபோன்ற படங்களில் நடிக்க வைத்து ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார். சிலர் பணத்துக்காக நடிப்பதாகவும், மேலும் சிலரை இந்தக் கும்பல் வலுக்கட்டாயமாக மிரட்டி நடிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

Also read... ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி - சீனாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆபாச செயலிகள் புரோமோஷன்

ஆபாச படங்களை கொண்டிருக்கும் இந்த கும்பலின் செயலிகள் தொடர்பான விளம்பரங்கள் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர். மற்ற ஓடிடி தளங்களைப்போல் விளம்பரங்களை கொடுக்கும் இந்த கும்பல், ஆபாச படங்களை விரும்புபவர்களுக்கு அதன் மூலம் வலைவிரித்து பணம் ஈட்டியுள்ளது. கொரோனா காலத்தில் நடைபெற்ற இத்தகைய அதிர்ச்சி சம்பவம் துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அண்மையில், ஆபாச படங்களை கொண்டிருக்கும் இணைய தளங்களை முடக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனடிப்படையில், பல ஆபாச தளங்களை முடக்கிய மத்திய அரசு, பலர் மீது நடவடிக்கையும் எடுத்தது. இந்திய தண்டனைச் சட்டம் 67 ஏ பிரிவின் படி சமூகவலைதளங்களில் ஆபாச படங்களை பரப்புவர் கைது செய்யப்படுவதுடன், 5 வருடங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: