தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன், ஃபோர்ப்ஸ் இதழ் விருது உட்பட பல்வேறு சர்வதேச அங்கீகாரங்களை இவர் பெற்றுள்ளார். இந்நிலையில், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை இவர் வெளியில் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக செபி (SEBI) விசாரணை நடத்தியது. தற்போது விசாரணை தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பங்குச்சந்தை துறையில் அவ்வளவாக யாருக்கும் தெரியாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை திட்ட ஆலோசகராக சித்ரா ராமகிருஷ்ணன் நியமனம் செய்தார். பின்னர், பல முறை அவருக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முகம் தெரியாத ஒரு சாமியாரின் உத்தரவுபடியே சித்ரா ராமகிருஷ்ணன் செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை செய்துவருகிறது.
பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அதன் பாதிப்பு பங்குச்சந்தை முதலீடு செய்திருக்கும் நம்மை பாதிக்குமா என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் சில இடைத் தரகர்கள் ஏதேனும் ஒப்பந்தங்கள் மூலம் பயன்பெற்றார்கள் என்றால் அது என்னை எப்படி பாதிக்கும்?
ஒருவேளை நீங்கள் 2010 மற்றும் 2015-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நேரடியாகவோ அல்லது நிறுவன பங்குகளில் முதலீடு மூலமோ பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் அந்த பரிவர்த்தனே என்.எஸ்.சி மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் நீங்கள் வாங்கிய பங்குகள் கொஞ்சம் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்க வாய்ப்பு உள்ளது மற்றும் நீங்கள் விற்ற பங்குகளை கொஞ்சம் குறைவான விலை விற்றிருக்க வாய்ப்பு உள்ளது.
எதனால் இப்படி நடைபெறும்?
ஏனென்றால் பங்குச்சந்தையில் இருந்த சிலர் வரிசை மீறி உங்கள் வரிசையை நீங்கள் செயல்படுத்துவதற்கு முன் அவர்களுடைய செயல்பாடு அமைந்துவிடும்.
எப்படி அவர்களால் செய்ய முடிகிறது?
வர்த்தக அமைப்பில் உள்ள சில ஓட்டைகளை கண்டுபிடித்து அவர்கள் விற்பனை செய்யும் பங்குகளையோ அல்லது வாங்கும் பங்குகளையோ தீர்மானிக்க முடியும்.
எப்படி இதனை நான் கவனிக்காமல் போயிருப்பேன்?
ஏனென்றால் உங்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு இந்த இடைவெளி பெரியது கிடையாது. இது ஒரு பங்கிற்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அல்லது பைசா அளவில் இருக்கும். இது நீங்கள் 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கும்போது, உங்களுக்கு 990 ரூபாய்க்கு தான் பெட்ரோல் கொடுக்கப்பட்டது என்று தெரிவிப்பதைப் போன்ற நிகழ்வு.
விலை மிகக் குறைந்த மதிப்பு என்றால் ஏன் இதுபோன்ற பெரிய ஒப்பந்தம் நடைபெறுகிறது?
வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதைப் போன்றதுதான். ஒரு தனிப்பட்ட வாகனஓட்டிக்கு இழப்பு 10 ரூபாய்தான். ஆனால், நூற்றுக்கணக்கான வாகனஓட்டிகள் தினமும் பண இழப்பை எதிர்கொள்கிறார்கள். அதுபோலதான், பங்குச்சந்தையில் தினமும் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் இழப்பை எதிர்கொள்கிறார்கள்.
இந்த ஊழலின் அளவு என்ன?
செபியால் இந்த ஊழலில் பாதிப்பைக் கண்டறியமுடியவில்லை. வேறுயாரும் இதுகுறித்து ஆராய்ந்துள்ளனரா என்று தெரியவில்லை.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.