Home /News /explainers /

Explainer: நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்றால் என்ன? காலநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன?

Explainer: நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்றால் என்ன? காலநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா தெரிவிக்கும் ஆட்சேபனைகள் என்ன?

ஜோ பைடன் மற்றும் மோடி

ஜோ பைடன் மற்றும் மோடி

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், பூமியின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.

  • News18
  • 5 minute read
  • Last Updated :
பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று தேர்தலுக்கு முன்னதாக ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தது போலவே, அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் இத்திட்டத்தை நிறைவேற்ற கையெழுத்திட்டுள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், பூமியின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நான்கு ஆண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காலநிலை மாற்ற கூட்டாட்சியை தற்போது மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை தொடர்பான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார்.

இந்த பயணத்தின் நோக்கம் என்னவென்றால், ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் தலைமையில் விர்ச்சுவல் முறையில் நடக்கவிருக்கும் காலநிலை தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சில குறிப்புகளை பரிமாறிக்கொள்வதாகும். அந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் அடங்குவார். மேலும், காலநிலை மாற்றத்தில் ஜோ பைடனின் முதல் பெரிய சர்வதேச தலையீடு இதுவாகும். மேலும் அதிலிருந்து கணிசமான விளைவை உறுதிப்படுத்த அவரது நிர்வாகம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில், வருகிற உச்சிமாநாட்டில் 2050 ஆம் ஆண்டிற்கான நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குக்கு அமெரிக்கா தன்னை ஈடுபடுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட பல நாடுகள் ஏற்கனவே நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதாக உறுதியளிக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா முழுவதும் இது தொடர்பான ஒரு சட்டத்தை செய்லபடுத்தி வருகிறது. அதே நேரத்தில் கனடா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கு எதிர்காலத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. சீனா கூட 2060-க்குள் நிகர பூஜ்ஜியத்திற்கு செல்வதாக உறுதியளித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடு இந்தியா தான். இந்த நிலையில், அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரியின் இந்திய வருகைக்கான நோக்கங்களில் ஒன்று, இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் கடுமையான எதிர்ப்பைக் கைவிட முடியுமா என்பதை தெரிந்துகொள்வதாகும். மேலும் 2050 நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் ஆகும்.

நிகர பூஜ்ஜியத்தின் இலக்கு என்ன?

நிகர-பூஜ்ஜியம் என்பது கார்பன்-நடுநிலைமை என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒரு நாடு அதன் உமிழ்வை பூஜ்ஜியத்திற்குக் குறைக்கும் என்பது இதன் அர்த்தமல்ல. மாறாக, நிகர பூஜ்ஜியம் என்பது வளிமண்டலத்திலிருந்து கிரீன்ஹவுஸ் வாயுக்களை உறிஞ்சி அகற்றுவதன் மூலம் ஒரு நாட்டின் உமிழ்வை கட்டுப்படுத்தும் ஒரு நிலை ஆகும். இதற்கு காடுகள் போன்ற அதிக கார்பன் மூழ்கிகளை உருவாக்குவதன் மூலம் உமிழ்வை உறிஞ்சுவதை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில் வளிமண்டலத்திலிருந்து வாயுக்களை அகற்ற கார்பன் கேப்ச்சர் மற்றும் சேமிப்பு போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன.

இந்த உறிஞ்சுதல் மற்றும் நீக்கும் முறை உண்மையான வாயு உமிழ்வை விட அதிகமாக இருந்தால், ஒரு நாட்டிற்கு எதிர்மறை உமிழ்வுகள் அதாவது வாயு உமிழ்வுகளே இல்லாமல் இருப்பது கூட சாத்தியமாகும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக பூட்டானை சொல்லலாம். இது பெரும்பாலும் கார்பன்-எதிர்மறை என்று விவரிக்கப்படுகிறது. ஏனெனில் அது வாயுக்களை வெளியிடுவதை விட அதிகமாக உறிஞ்சுகிறது.

2050 ஆம் ஆண்டிற்கான நிகர பூஜ்ஜிய இலக்கில் கையெழுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் சுறுசுறுப்பான பிரச்சாரம் நடந்து வருகிறது. 2050 ஆம் ஆண்டளவில் உலகளாவிய கார்பன் நடுநிலைமை தான் பாரிஸ் ஒப்பந்த இலக்கை அடைய ஒரே வழி என்றும் வாதிடப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் தொழில்துறைக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது கிரகத்தின் வெப்பநிலை 2°C க்கு அப்பால் உயராமல் இருப்பதை இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய கொள்கைகள் மற்றும் உமிழ்வைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் நூற்றாண்டின் தொடக்கத்தில் 3-4°C உயர்வைக் கூட தடுக்க முடியாது என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்பன் நடுநிலைமையின் குறிக்கோளானது ஒரு நீண்ட கால இலக்கைக் கருத்தில் கொண்டு செயப்படுத்தப்பட வேண்டியது. ஆனால் பல தசாப்தங்களாக இது குறித்து விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. நீண்டகால இலக்குகள் நாடுகளின் கொள்கைகள் மற்றும் செயல்களில் முன்கணிப்பு மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்கின்றன. ஆனால் இந்த இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதில் இதுவரை எந்த ஒருமித்த கருத்துக்களும் இருந்ததில்லை.

முன்னதாக, 2050 அல்லது 2070 ஆம் ஆண்டுகளில், பணக்கார மற்றும் வளர்ந்த நாடுகளுக்கான உமிழ்வு-குறைப்பு இலக்குகளில் விவாதங்கள் நடைபெற்றன. அதில், பல தசாப்தங்களாக ஒழுங்குபடுத்தப்படாத உமிழ்வுகள் புவி வெப்பமடைதலுக்கும் அதன் விளைவாக ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கும் முக்கிய காரணமாகின்றன என்று கூறப்பட்டது. இருப்பினும், நிகர-பூஜ்ஜிய உருவாக்கம் எந்தவொரு நாட்டிலும் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைய முடிவுகளையும் ஒதுக்கவில்லை.

கோட்பாட்டளவில், ஒரு நாட்டின் தற்போதைய உமிழ் மட்டத்தை அல்லது அதிகரித்த உமிழ்வு மட்டத்தை உறிஞ்சவோ, அகற்றவோ முடிந்தால், அந்த குறிப்பிட்ட நாடு கார்பன்-நடுநிலையாக மாறலாம். இது வளர்ந்த நாடுகளின் கண்ணோட்டத்தில், இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஏனென்றால் இப்போது வாயு உமிழ்வுகளின் சுமை அனைத்து நாட்டினராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே பழி ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது மட்டும் விழாது.

இந்தியாவின் ஆட்சேபனைகள்

இந்த இலக்கை இந்தியா மட்டுமே எதிர்த்து வருகிறது. ஏனெனில் இந்த திட்டத்தால் இந்தியா மிகவும் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில், இந்தியாவின் உமிழ்வு உலகின் மற்ற நாடுகளை விட வேகமாக வளர வாய்ப்புள்ளது. ஏனெனில் இது நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை வறுமையிலிருந்து வெளியேற்ற அதிக வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், அதிகரித்த உமிழ்வுகளுக்கு காடு வளர்ப்பு அல்லது மறு காடு வளர்ப்பு ஈடுசெய்ய முடியாது என்றும் இப்போது பெரும்பாலான கார்பன் அகற்றும் தொழில்நுட்பங்கள் நம்பமுடியாதவை அல்லது மிகவும் விலை உயர்ந்தவை என்றும் இந்தியா கூறிவருகிறது.

ஆனால் கொள்கை மற்றும் நடைமுறையில், இந்தியாவின் வாதங்களை நிராகரிப்பது என்பது எளிதல்ல. நிகர பூஜ்ஜிய இலக்கு 2015 பாரிஸ் ஒப்பந்தம், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய உலகளாவிய கட்டமைப்பில் இல்லை என்றும் இந்தியா கூறிவருகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒவ்வொரு கையொப்பமிட்டவரும் தன்னால் முடிந்த சிறந்த காலநிலை நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாடுகள் தங்களுக்கு ஐந்து அல்லது பத்து ஆண்டு காலநிலை இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அவை அவற்றை அடைந்துவிட்டன என்பதை நிரூபிக்க வேண்டும். மற்ற தேவை என்னவென்றால், ஒவ்வொரு அடுத்தடுத்த கால அளவிற்கான இலக்குகள் முந்தையதை விட உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.

அதேசமயம், பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது இந்த ஆண்டு மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் 2025 அல்லது 2030 காலத்திற்கான இலக்குகளை சமர்ப்பித்துள்ளன. பாரிஸ் ஒப்பந்த கட்டமைப்பிற்கு வெளியே நிகர பூஜ்ஜிய இலக்குகள் குறித்து ஒரு இணையான விவாதத்தைத் திறப்பதற்கு பதிலாக, நாடுகள் தாங்கள் ஏற்கனவே உறுதியளித்ததை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வாதிடுகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அதன் மூன்று இலக்குகளை அடைவதற்கான பாதையில் இந்தியா நன்றாக செயல்பட்டு வருவதாகவும், மேலும் அவற்றை மாநாட்டில் மிகைப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Also read... கார், பைக்கை விட சைக்கிள் பெஸ்ட் - ஏன் தெரியுமா?

உலகளாவிய வெப்பநிலை 2°Cக்கு மேல் உயராமல் இருக்க வைக்கும் பாரிஸ் ஒப்பந்த இலக்கிற்கு இணங்கக்கூடிய ஒரே G-20 நாடு இந்தியா மட்டுமே என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தில் மிகவும் முற்போக்கானதாகக் கருதப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க நாடுகள் கூட காலநிலை உயராமல் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மதிப்பிடப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியா ஏற்கனவே பல நாடுகளை விட காலநிலை குறித்த நடவடிக்கைகளை தொடர்பாக பல விஷயங்களை செய்து வருவதாக கூறியுள்ளது.

மேலும், வளர்ந்த நாடுகள் தங்களது கடந்தகால வாக்குறுதிகள் மற்றும் கடமைகளை ஒருபோதும் வழங்கவில்லை என்பதையும் மத்திய அரசு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. பாரிஸ் உடன்படிக்கைக்கு முன்பு இருந்த காலநிலை ஆட்சியான கியோட்டோ உடன்படிக்கையின் கீழ் மற்ற நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட உமிழ்வு வெட்டு இலக்குகளை எந்த ஒரு பெரிய நாடும் அடையவில்லை. சிலர் எந்தவிதமான விளைவுகளும் இல்லாமல் கியோட்டோ நெறிமுறையிலிருந்து வெளிப்படையாக வெளியேறினர்.

2020 ஆம் ஆண்டுக்குள் உமிழ்வை குறைப்பதாக வாக்குறுதிகளை அளித்த எந்த நாடுகளும் இதுதொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. 2050 கார்பன்-நடுநிலை வாக்குறுதியும் இதேபோன்ற தலைவிதியை சந்திக்கக்கூடும் என்று இந்தியா வாதிட்டது. அதே நேரத்தில், 2050 அல்லது 2060 க்குள் கார்பன்-நடுநிலைமையை அடைவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை என்றும் ஆனால் ஒரு சர்வதேச உறுதிப்பாட்டை முன்கூட்டியே அமைக்க விரும்பவில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Joe biden, Prime Minister Narendra Modi

அடுத்த செய்தி