ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

INSAS துப்பாக்கி வகைக்கு பதிலாக புதிய ரக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்த மத்திய அரசு முடிவு

INSAS துப்பாக்கி வகைக்கு பதிலாக புதிய ரக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்த மத்திய அரசு முடிவு

AK-203 துப்பாக்கி

AK-203 துப்பாக்கி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவசரகால விதிகளின் கீழ், 70000 AK-203 துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

எல்லை பாதுகாப்பிற்காக பழைய ஆயுதங்களை அவ்வப்போது இந்தியா மாற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்ற INSAS துப்பாக்கிக்கு பதிலாக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய இராணுவம் முடிவெடுத்துள்ளது. இது சம்பந்தமான முதல் அறிவிப்பை 2018 ஆம் ஆண்டில் இந்தியா வெளியிட்டது. ஆனால் AK-203 துப்பாக்கிகளின் விலையினாலும், தொழில்நுட்ப பரிமாற்றத்தினாலும் இந்த ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது.

அதன் பிறகு ரஷ்யா இதன் விலையை சிறிதளவு குறைத்ததன் காரணமாக உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் AK-203 துப்பாக்கிகளை தயாரிப்புதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. சுமார் 6 லட்சம் AK-203 துப்பாக்கிகளை தயாரிக்க 5,000 கோடி செலவாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவசரகால விதிகளின் கீழ், 70,000 AK-203 துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏன் புது ரக துப்பாக்கி?

1990 ஆம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த, INSAS வகை துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால், 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ரக துப்பாக்கிகள் பழுதடைய தொடங்கிவிட்டன. குறிப்பாக உறைபனி காலங்களில் இவை சரியாக செயல்படுவதில்லை. எனவே இவற்றை மாற்ற வேண்டிய நிலைக்கு இந்திய இராணுவம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த INSAS துப்பாக்கிகள் 5.56×45mm காலிபர் புல்லட்கள் கொண்டவை. மிக துல்லியமான முறையில் இலக்கை குறி வைப்பதற்கும், அதிக அளவிலான தீவிரவாத தாக்குதல்களை சமாளிப்பதற்கும் AK-203 துப்பாக்கிகளை இந்திய இராணுவம் தேர்ந்தெடுத்துள்ளது. இது நீண்ட நாள் சிறப்பாக செயல்படும் அளவிற்கு தயாரிக்கப்படுகிறது மற்றும் இதை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு டிசைன் செய்துள்ளனர். அட்ஜஸ்டபிள் பட்ஸ்டோக், சிறந்த பிடிப்பு மற்றும் மிக துல்லியமாக இலக்கை குறி வைக்கும் திறன் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது என்று ரஷ்யாவின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

AK-203 துப்பாக்கிகள்

இந்த புதிய ரக AK-203 துப்பாக்கிகள் INSAS துப்பாக்கிகளை விடவும் எடை குறைவானவை, தோற்றத்தில் சிறியது. மேகசின் மற்றும் பயோனெட் இல்லாமல் இந்த INSAS துப்பாக்கியின் எடை 4.15 கிலோ ஆகும். ஆனால் AK-203 துப்பாக்கிகள் புல்லட் இல்லாமல் காலியாக இருக்கும் போதே 3.8 கிலோ மட்டுமே. INSAS துப்பாக்கியின் நீளம் 960 மி.மி ஆகும். ஆனால் AK-203 துப்பாக்கியின் நீளம் வெறும் 705 மி.மி தான். INSAS துப்பாக்கியில் 5.56×45மி.மி வகை புல்லட் பயன்படுத்தப்படுகிறது. இந்த புது ரக AK-203 துப்பாக்கியில் 7.62x39 மி.மி வகை புல்லட்கள் பயன்படுத்தப்படுகிறது.

Also read... பல நாள் கேள்விக்கான பதில்...18 வயதுக்கு முன்பே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

இந்த INSAS துப்பாக்கியின் குறி வைக்கும் தொலைவு 400 மி மட்டுமே. ஆனால் AK-203 துப்பாக்கியில் 800மி தொலைவில் உள்ள இலக்கையும் குறி வைக்கலாம். INSAS துப்பாக்கியில் 20 புல்லட்கள் பயன்படுத்த முடியும். இதுவே AK-203 துப்பாக்கியில் 30 புல்லட்கள் பயன்படுத்தலாம். இப்படி பல வகையான சிறப்பம்சங்கள் இந்த AK-203 துப்பாக்கியில் உள்ளது.

மேக் இன் இந்தியா

இந்த AK-203 துப்பாக்கியின் தயாரிப்பு பணிகளை இந்தோ-ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Indo-Russia Rifles Pvt Ltd) எடுத்துள்ளது. அதாவது இதன் முழு தயாரிப்பு பணிகளை ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரீஸ் போர்டு (OFB) மற்றும் ரஷ்ய நிறுவனங்களான ரோசோபோரான் எக்ஸ்பெர்ட் மற்றும் கலாஷ்னிகோவ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்படும். மேலும் இதன் 50.5% பங்கை ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரீஸ் போர்டு நிறுவனமும், 49.5% பங்கை ரஷ்ய நிறுவனங்களும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Explainer