ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இந்தியாவில் ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு விகிதம் அதிகம்... இதற்கான காரணம் என்ன?

இந்தியாவில் ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு விகிதம் அதிகம்... இதற்கான காரணம் என்ன?

இந்தியாவில் ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வு விகிதம் அதிகம்

இந்தியாவில் ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வு விகிதம் அதிகம்

இந்தியாவில் வயது வந்தோரின் சராசரி ஆண்டு தேசிய வருமானம் 2021 ஆம் ஆண்டில் ரூ. 2,04,200 ஆக உள்ளது. கீழ்த்தட்டு மக்கள் 50% பேர் ரூ. 53,610 சம்பாதித்துள்ளனர்,

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏழை - பணக்காரர்களின் விகிதம் அதிகமாகி வருவதாக சமீபத்தில் வெளியான உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 மூலம் தெரிய வந்துள்ளது. இதன்படி இந்தியாவில் சுமார் 10% பணக்காரர்கள் தேசத்தின் 57% வருவாயை வைத்துள்ளனர். மேலும் இவற்றில் 22% பணத்தை 1% உள்ள டாப் பணக்காரர்கள் வைத்துள்ளனர். இந்த புதிய அறிக்கையின் மூலம் உலக அளவில் 2020 ஆம் ஆண்டில் பெரும்பாலான மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளனர். அதாவது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் உள்ள நாடுகளில் அதிக அளவிற்கு பாதிப்பு உண்டாகியுள்ளது.

அறிக்கையில் கூறுவது...

உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் பொருளாதார நிபுணரும் இணை இயக்குநருமான லூகாஸ் சான்சல், பொருளாதார நிபுணர்களான தாமஸ் பிகெட்டி, இம்மானுவேல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜூக்மான் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையின் படி இந்தியா அதிக ஏழைகள் கொண்ட நாடாகவும் மற்றும் சமத்துவமற்ற நாடாகவும் உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 65% (ரூ. 63,54,070) மற்றும் 33% (ரூ. 3,24,49,360) வைத்திருக்கும் முதல் 10% பணக்காரர்கள் மற்றும் 1% (1%) டாப் பணக்காரர்கள் ஆகியோருடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் ஒப்பீட்டளவில் ஏழ்மையானவர்களாக உள்ளனர். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7,23,930 அல்லது மொத்த தேசிய வருமானத்தில் 29.5% என்று கூறுப்படுகிறது.

இந்தியாவின் நிலை...

இந்தியாவில் வயது வந்தோரின் சராசரி ஆண்டு தேசிய வருமானம் 2021 ஆம் ஆண்டில் ரூ. 2,04,200 ஆக உள்ளது. கீழ்த்தட்டு மக்கள் 50% பேர் ரூ. 53,610 சம்பாதித்துள்ளனர், அதே சமயம் 10% பணக்காரர்கள் 20 மடங்கு அதிகமாக (ரூ. 11,66,520) சம்பாதித்துள்ளனர் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 9,83,010 ஆகும், இதில் கீழ்தட்டு மக்களின் (50% பேர்) சராசரி சொத்து மதிப்பு ரூ.66,280, அதாவது வெறும் 6% மட்டுமே.

வரிக்கு முந்தைய தேசிய வருமானத்தில் பணக்காரர்களின் 10% மற்றும் கீழ்தட்டு மக்களின் 50% பங்கு 2014 முதல் பரவலாக மாறாமல் இருந்துள்ளது. நிதி ஆயோக் சமீபத்தில் தயாரித்த பல பரிமாண வறுமைக் குறியீட்டின் அறிக்கைபடி, இந்தியாவில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் ஏழைகளாக உள்ளனர். பீகாரில் இதுபோன்ற விகிதங்கள் அதிகம் (51.91%), அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் (42.16%) மற்றும் உத்தரப் பிரதேசம் (37.79%) மாநிலங்களில் ஏழைகள் அதிகம் உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று :

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வில் இருந்து, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய 50 சதவீத வருமானப் பங்கு உண்மையில் இந்தியாவில் சற்று அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இதன் அர்த்தம் அதிக வருவாயானது தனியார் நிறுவனங்களின் கையில் உள்ளது. பணக்காரார்கள் மேலும் மேலும் பணக்காரர்களாக ஆவதால் ஏழைகள் இன்னமும் அடித்தட்டு ஏழைகளாக மாறி வருகின்றனர் என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெளிவாக தெரிகிறது.

உலகின் நிலை :

உலக அளவில் பல நாடுகளிலும் இதே நிலை தான் நிலவி வருகிறது. உலக மக்கள்தொகையில் ஏழ்மையான மக்கள் "எந்தவொரு செல்வத்தையும் சொந்தமாக வைத்திருக்கவில்லை". மொத்தத்தில் 10% பணக்காரர்கள் தற்போது உலக வருமானத்தில் 52% எடுத்துக்கொள்கிறார்கள், ஏழைகள் வெறும் 8% சம்பாதிக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் உச்சத்தில் இருந்ததைப் போலவே இன்றும் உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Also read... INSAS துப்பாக்கி வகைக்கு பதிலாக புதிய ரக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்த மத்திய அரசு முடிவு

பெண்களின் நிலை :

1990 ஆம் ஆண்டில், மொத்த வருமானத்தில் பெண்களின் பங்கு 30% ஆக இருந்தது, இப்போது 35%-க்கும் குறைவாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை விட இப்போது நாடுகளுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளன. நாட்டில் 10% பணக்காரர்கள் மற்றும் 50% கீழ்த்தட்டு மக்களில் சராசரி வருமானங்களுக்கு இடையே உள்ள இடைவெளி 1820 ஆம் ஆண்டில் 18 மடங்காக இருந்து, பிறகு 1910 ஆண்டில் 41 மடங்காக இருந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இது 38 மடங்காக உயர்ந்துள்ளது என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Explainer