கொரோனவால் முன்பு பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசி போட வேண்டுமா? எத்தனை டோஸ் போடலாம்? விளக்கும் ஆய்வறிக்கை!

கொரோனவால் முன்பு பாதிக்கப்பட்டவர்களும் தடுப்பூசி போட வேண்டுமா? எத்தனை டோஸ் போடலாம்? விளக்கும் ஆய்வறிக்கை!

கொரோனா தடுப்பூசி

யுனைடெட் ஸ்டேட்ஸில் ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
யுனைடெட் ஸ்டேட்ஸில் ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் நோய்களை அறிகுறிகளை கண்டறியப்படாத நிலையில் உள்ளனர். இந்த நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா? அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்குமா? மேலும் எத்தனை டோஸ் தடுப்பூசி போட வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த புதிய ஆய்வுகளின் முடிவுகள் கடந்த சில வாரங்களாக வெளியிடப்பட்ட மற்ற இரண்டு கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகின்றன. இவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்து பார்க்கும் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போட வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆராய்ச்சி தொடர்பாக பேசிய டொராண்டோ பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு நிபுணர் ஜெனிபர் கோமர்மேன் கூறியதாவது, "முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் தடுப்பூசி பெற வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு மிகவும் வலுவான காரணங்களை கொடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன்," என்று கூறியுள்ளார். பொதுவாக இயற்கையான நோய்த்தொற்றுக்கு ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மாறுபடும். இதற்காக பெரும்பாலான மக்கள் பல மாதங்களாக நீடிக்கும் ஆன்டிபாடிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வர்.

ஆனால் கொரோனாவின் லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே இல்லாத சிலர் தங்களது உடலில் சில ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள். அவை விரைவாக கண்டறிய முடியாத அளவிற்கு வீழ்ச்சியை சந்திக்கிறது. மேலும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதால் கொரோனாவில் இருந்து மீண்ட எவரும் வைரஸிலிருந்து தங்களை பாதுகாக்க போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள்.

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இதுவரை எந்த ஒரு அறிவியல் இதழிலும் வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வில் கொரோனா ஏற்கனவே கொரோனா பாதித்து மீண்டவர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. கண்டுபிடிப்புகளின்படி, அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடான B1351 ஐத் தடுப்பதில் சிக்கலை எதிர்கொண்டதாக இருக்கும் என்று பரிந்துரைத்தன. அதுவே, ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மாடர்னா தடுப்பூசியின் ஒரு ஷாட் எடுத்துக்கொள்ளும் நபர்களில் இது தலைகீழாக மாறியது. இது அவர்களின் இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளின் அளவை ஆயிரம் மடங்கு அதிகரித்தது.

உண்மையில், ஆன்டிபாடிகள் கொரோனா பாதிக்காத நபர்கள் போட்டுக்கொண்ட இரண்டு டோஸ் தடுப்பூசிகளை காட்டிலும், கொரோனா பாதிப்பு இருந்து ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் சிறப்பாக செயல்படுவதாகத் தோன்றியது. இதுதவிர ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் கொரோனா மாறுபாட்டிற்கு எதிராக ஐந்து மடங்கு குறைவான செயல்திறன் கொண்டவை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட சியாட்டில் கோவிட் கோஹார்ட் ஆய்வில், சுமார் 10 தன்னார்வலர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் பெற்றனர். அவர்களில் கொரோனா வைரஸ் குறைந்த சில மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பங்கேற்பாளர்களில் ஏழு பேருக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி கிடைத்தது. மேலும் மூன்று பேர் மாடர்னா தடுப்பூசியைப் பெற்றனர்.

இதையடுத்து தடுப்பூசிக்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் கழித்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியை, தடுப்பூசிக்கு முன் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடும் போது ஆன்டிபாடிகளின் அளவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. இருப்பினும், ஆன்டிபாடிகளின் அதிகரித்த அளவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் அவை நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். வைரஸை நினைவில் வைத்து போராடும் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அதிகரிப்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதேபோல, மற்றொரு புதிய ஆய்வில், நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனவால் வைரஸ் பாதிப்பு உள்ளவர்களில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அதிக நன்மைகளை வழங்கவில்லை என்பதைக் கண்டறிந்தனர். இந்த நிகழ்வு மற்ற வைரஸ்களுக்கான தடுப்பூசிகளிலும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வில், எட்டு அல்லது ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு ஒரு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கும் போது அவர்களின் ஆன்டிபாடிகள் நூறு மடங்கில் இருந்து ஆயிரம் மடங்கு அதிகரித்தன. இருப்பினும், இரண்டாவது டோஸுக்குப் பிறகு, ஆன்டிபாடி அளவுகள் மேலும் அதிகரிக்கவில்லை என்பதை கண்டறிந்தனர்.

Also read... பேரனுக்காக McDonald-ல் உணவு வாங்க சென்ற முதியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

இது குறித்து, நியூயார்க்கில் உள்ள சினாய் மவுண்டில் உள்ள ஐகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நோயெதிர்ப்பு நிபுணர் ஃப்ளோரியன் கிராமர் கூறியதாவது, ஆய்வகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆன்டிபாடி அளவுகளில் ஆயிரம் மடங்கு ஸ்பைக் ஏற்பட்டது போல நிஜ வாழ்க்கை அமைப்புகளில் நிகழுமா என்பது தெளிவாக இல்லை. ஆனால் ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஆன்டிபாடிகளின் அளவை கணிசமாக அதிகரிக்க ஒற்றை ஷாட் போதுமானது என்று ஆராய்ச்சி காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இது COVID-19ஐக் கொண்டவர்கள் மற்றும் ஒரு தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றவர்கள் தடுப்பூசியிலிருந்து மிகவும் கடுமையான பக்க விளைவுகளை அனுபவித்ததாகவும், இதற்கு முன்னர் நோய்த்தொற்று இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது அதிக ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்ததாகவும் காட்டியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நான்கு ஆய்வு ஆவணங்களையும் ஒன்றாக இணைத்தால், ஏற்கனவே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போதும் என்பது பற்றிய நல்ல தகவல்களை இது வழங்குகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். அவரும் பிற ஆராய்ச்சியாளர்களும் COVID-19 இலிருந்து மீண்டவர்களுக்கு ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பரிந்துரைக்குமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) விஞ்ஞானிகளை வற்புறுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: