• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Explainer: மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் சலான் பெற்றால் அதனை எப்படி கையாளலாம்?

Explainer: மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ் சலான் பெற்றால் அதனை எப்படி கையாளலாம்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

சலான் என்பது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சலான் என்றால் என்ன?

சலான் என்பது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இது அபராதங்களை ஈர்க்கும் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் மோட்டார் வாகன ஓட்டுனருக்கு வழங்கப்படும் ஒரு அபராத ரசீது ஆகும்.

சாலன் (ரசீது) வழங்கும் முறைகள்:

வாகன ஓட்டுநர் மீறும் விதிமுறைகளுக்கு ஏற்ப இரண்டு வகையான சாலன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று,

ஸ்பாட் சலான்: சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு வழங்குவது. மற்றொன்று,

இ-சலான்: விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மின்னணு முறையில் சலான் வழங்கப்படும். உதாரணத்திற்கு, தவறான பார்க்கிங், டிஜிட்டல் கேமராவால் கண்டுபிடிக்கப்பட்ட அதிவேக வாகனங்கள், சிக்னலை சரிவர கவனிக்காமல் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து இ-சலான் என்றால் என்ன?

போக்குவரத்து மீறல்களுக்காக வழங்கப்படும் வழக்கமான சலானின் மின்னணு வடிவம் தான் இ-சலான். இந்த சாலன் மூலம் பெறும் அபாரதத் தொகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் நீங்கள் செலுத்தலாம்.

போக்குவரத்து சலானை வழங்குவது யார்?

தலைமை கான்ஸ்டபிள்களின் தரவரிசை அதிகாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் இ-சலானை வழங்க முடியும், சாதாரண போலீஸ் ஊழியர்கள் இதனை வழங்க முடியாது.

ஆன்லைனில் சலானுக்கான அபராதத் தொகையை செலுத்துவது எப்படி?

உங்கள் போக்குவரத்து இ-சலானை ஆன்லைனில் செலுத்த ஒவ்வொரு மாநிலங்களும் அதெற்கென ஒவ்வொரு வலைத்தளங்களை உருவாகியுள்ளன. மத்திய அரசு தனது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் போக்குவரத்து சவால்களின் ஆன்லைன் கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-ஆளுமை முயற்சியின் கீழ், நீங்கள் போக்குவரத்து இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:

1. https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற லிங்கை பார்வையிடவும்.

2. அதன் முகப்பு பக்கத்தில், சலான் எண் / வாகன எண் / டி.எல் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ‘விவரங்களைப் பெறு’ (Get Details) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. ஒரு புதிய திரை தோன்றும் அதில், போக்குவரத்துக் குற்றம் மற்றும் அதற்கான சலான் பற்றிய விவரங்களைச் சரிபார்த்து, பின்னர் போக்குவரத்து அபராதத்திற்கான கட்டணத்தைச் செயல்படுத்த தொடர வேண்டும். பின்னர் நெட் பேங்க்கிங் அல்லது டெபிட் கார்டு உதவியுடன் பணத்தை செலுத்தலாம்.

எத்தனை நாட்களுக்குள் ஒருவர் இ-சலானுக்கான அபராத கட்டணத்தை செலுத்த வேண்டும்?

குற்றம் நடந்த நாளிலிருந்து உங்கள் இ-சலானை செலுத்த அதிகபட்சம் 60 நாட்கள் வழங்கப்படுகின்றன. அது தோல்வியுற்றால் அது நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். கட்டணம் மற்றும் வழக்கிற்கான தீர்வு நீதிமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் என்ன செய்யவேண்டும்?

ஆன்-ஸ்பாட் சலான் வழங்கப்பட்டால், மீறுபவரின் மொபைல் எண்ணுக்கு செய்தி அனுப்பப்படும். அதே சமயம் இ-சலான் விஷயத்தில் அத்தகைய செய்தி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அந்த செய்தியில், விதிகளை மீறியவர் நீதிமன்ற முகவரி, தேதி மற்றும் நேரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி தேவையான அபராதத்தை கட்டிவிட்டு வண்டியை எடுத்துச் செல்லலாம்.

அதுவே வாகங்களுக்கான ஆவணங்கள் இல்லாததால் உங்களுக்கு சாலன் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், சாலன் பெற்ற 15 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை நீங்கள் புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் சரியான ஆவணத்தை தயாரித்த பிறகு அதற்கு மட்டும் ரூ.100 அபராதம் கட்டி விட்டு சலானை ரத்து செய்துக்கொள்ளலாம்.

உங்கள் அபராதத்தை எவ்வாறு குறைப்பது?

லோக் அதாலத்தில், குற்றத்தைத் தீர்ப்பதற்கான நோக்கத்துடன், விதிகளை மீறியவர் அபராத தொகையை குறைக்க கோரிக்கை வைக்கலாம்.

தவறான இ-சல்லானைப் பெற்றீர்களா?

ஏதேனும் பிழை காரணமாக செய்யாத தவறுக்கு இ-சலான் உங்களுக்கு அனுப்பப்பட்டால், வாகன உரிமையாளர்கள் தங்களது சலான் எண்ணை குறிப்பிட்ட மாநில போக்குவரத்து போலீசாருக்கு அஞ்சல் மூலம் அனுப்பி சரிபார்த்துக் கொள்ளலாம்.

Also read... மார்ச் மாதத்தில் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ நீங்கள் வாங்கவேண்டிய நல்ல நாட்கள், நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அபராதம் செலுத்துவதற்காக யாராவது என்னை சாலையில் நிறுத்த முடியுமா?

காட்டாயம் இல்லை, உங்களிடமிருந்து அபராதத்தை வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு உரிமை இல்லை. நீங்கள் அவர்களிடம் பணம் செலுத்தலாம். ஆனால் உடனடியாக பணம் செலுத்துமாறு வாகன ஓட்டிகளை கட்டாயப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை.

சரியான நேரத்தில் சலான் செலுத்தாததன் விளைவுகள் என்ன?

நீங்கள் சரியான நேரத்தில் இ-சலானை சமர்ப்பிக்கவில்லை என்றால், உங்கள் சலான் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து வாகன உரிமையாளர் அபராதம் செலுத்த நீதிமன்றம் செல்ல வேண்டும். பணம் செலுத்தாவிட்டால், 60 நாட்களுக்குப் பிறகு, ஆன் ஸ்பாட் சலான் கூட போக்குவரத்து போலீசாரால் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: