ஹோம் /நியூஸ் /Explainers /

Explainer: வெளிநாடுகளிலிருந்து வேலையிழந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு SWADES ஸ்கில் கார்டு எவ்வாறு உதவும்?

Explainer: வெளிநாடுகளிலிருந்து வேலையிழந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு SWADES ஸ்கில் கார்டு எவ்வாறு உதவும்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

வேலையின்றி தாயகம் திரும்பிய குடிமக்களின் திறன்களை சேகரிக்க இந்திய அரசு ஒரு முயற்சியை தொடங்கியது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக, கைநிறைய சம்பளத்தில் பெரிய பதவிகளில் வேலை பார்த்து வந்த இந்தியர்கள் பலர் வேலை இழந்தனர். சர்வதேச பயண கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் நிதி ஆதாரமின்றி வேலைகளையும் இழந்து தவித்த லட்சக்கணக்கான இந்தியர்கள் வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் மீண்டும் தாயகம் திரும்பினர். வேலையின்றி தாயகம் திரும்பிய குடிமக்களின் திறன்களை சேகரிக்க இந்திய அரசு ஒரு முயற்சியை தொடங்கியது.

நாடு திரும்பியுள்ள தகுதி வாய்ந்த குடிமக்களின் பணி திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சியில் தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்பு ஆதரவுக்கான திறமையான தொழிலாளர்கள் வருகை தரவுத்தளம் (SWADES) என்று குறிப்பிடப்படுகிறது. இதன் நோக்கம் வேலையிழந்து நாடு திரும்பியுள்ள தொழிலாளர்களை, தொழிலாளர் சந்தையில் மீண்டும் ஒன்றிணைக்க வசதி செய்து தருவது ஆகும்.

வெளிநாடுகளில் வேலைகளை இழந்து நாடு திரும்பி வருபவர்களால் வழங்கப்படும் பணி அனுபவம் குறித்த தகவல்கள் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் ஷேர் செய்யப்படுகின்றன. தனிப்பட்ட வேலை விளக்கங்களுடன் தேவையான நபர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க, மேலும் வேலை வாய்ப்புகளை எளிதாக்க SWADES பதிவுகளின் விவரங்கள் ASEEM (Aatmanirbhar Skilled Employee Employer Mapping) போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஆகியவற்றின் இந்த கூட்டு முயற்சியின் கீழ் இதுவரை 30,700 பேர் பதிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த முயற்சியின் அடுத்த கட்டம் ஸ்வேட்ஸ் திறன் அட்டைகள் (SWADES Skill Cards) உள்ளவர்களுக்கு இனி வரவிருக்கும் வேலைவாய்ப்புகள் தொடர்பான கண்காட்சிகளில் பங்கேற்க உதவுவது, கூட்டாளர் நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அடையாளம் காண உதவுவது மற்றும் ஸ்கில் இந்தியாவின் வேலைவாய்ப்பு முயற்சிகள் மூலம் வேலைகளை அளிப்பது ஆகும்.

Also read... கொரோனா காலத்திலும் முன்னேற்றம் கண்ட இன்சூரன்ஸ் தொழில் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ் பாலிசிகள்!

முயற்சி என்ன?

கொரோனா தாக்கத்தால் பிற நாடுகளில் உள்ள வேலைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா திரும்பியுள்ளவர்கள் SWADES கார்டுக்கு பதிவு செய்யலாம். வெளிநாட்டு வேலைகளை இழந்த நபர்களின் திறன் தொகுப்புகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தரவுத்தளம் உருவாக்கப்பட்டு அதில் விவரங்கள் நிரப்பப்பட்டதும், அவர்களுக்கு ஒரு SWADES கார்டு வழங்கப்படுகிறது. இதுவரை SWADES கார்டு பதிவு செய்துள்ளவர்களில் சுமார் 80 சதவீத குடிமக்கள் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), சவுதி அரேபியா, ஓமான், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பி வந்துள்ளனர்.

இதில் அமீரகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. SWADES கார்டு வைத்திருப்பவர்களின் விவரங்களை ஸ்கில் இந்தியாவின் போர்டல் ASEEM உடன் ஒருங்கிணைக்கும் பணியை திறன் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. சந்தை தேவைக்கு பொருந்தக்கூடிய திறமையான தொழிலாளர் தொகுப்பு அடங்கிய தளத்தை வழங்குவதும், இதன் மூலம் சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதும் ASEEM-ன் நோக்கமாகும். தற்போதைய நிலவரப்படி ASEEM போர்ட்டலில் சுமார் 810 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கிடையில்,இந்தியாவில் சுமார் 5,10,000 வேலைகள் குறித்து ஒருங்கிணைந்த கோரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறு பயனளிக்கிறது?

விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு SWADES ஸ்கில் கார்டு வழங்கப்பட்டதும், குடிமக்களின் வேலை கோரிக்கைகள் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பகிரப்படுகின்றன. பணி அனுபவம் மற்றும் துறை நிபுணத்துவத்தைப் பொறுத்து, வேலை தேடுபவரின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளில் வேலை வாய்ப்புகள் குறித்து தகவல் அனுப்பப்படும். இந்த வகையில் நாடு திரும்பிய 5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் வேலைகள் கிடைத்துள்ளன. 9 மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் ஜி.சி.சி நாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் விருந்தோம்பல், கட்டுமானம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களில் பணியாற்றுகின்றனர்.

மருத்துவம் அல்லது தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிகவும் திறமையான இந்தியர்கள் மட்டுமே கடந்த 1 வருடத்தில் துபாய் போன்ற சந்தைகளில் வேலை தேட முடிகிறது. அதே போல் வேலையின் அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட ஓரளவு திறன் கொண்டு வேளைகளில் உள்ளோரும் பணிநீக்கம் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர். எனவே SWADES ஸ்கில் கார்டு போன்ற முயற்சிகள் இவர்களுக்கு நன்மை அளிக்கும். இந்நிலையில் மதிப்புமிக்க வளங்களாகக் கருதப்படும் சர்வதேச பணி அனுபவம் உள்ளவர்களை இந்திய நிறுவனங்கள் பணியமர்த்த விரும்புகின்றன என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Job