Explainer: ட்விட்டரை தொடர்ந்து தவறான தகவல்களை flag செய்ய பேஸ்புக் வெளியிட்ட புதிய அம்சம்!!

பேஸ்புக்

பேஸ்புக்கில் ஒரு நபர் அதன் உண்மைச் சரிபார்ப்பு கூட்டாளர்களில் (fact-checking partners) ஒருவரால் மதிப்பிடப்பட்ட பதிவுகளை மீண்டும் மீண்டும் பகி?

  • Share this:
தவறான தகவல்களுடன் பதிவுகளை falg செய்வதற்கான ட்விட்டரின் டூல் வரிசையில், சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக்கும் தங்களது ஒரு உண்மைச் சரிபார்ப்பாளரால் (fact-checkers) மதிப்பிடப்பட்ட பதிவுகளுடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதைத் தெரிவிக்க ஒரு புதிய வழியைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து பேஸ்புக் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "இது COVID-19 மற்றும் தடுப்பூசிகள், காலநிலை மாற்றம், தேர்தல்கள் அல்லது பிற தலைப்புகள் பற்றிய தவறான அல்லது அவதூறு உள்ளடக்கமாக இருந்தாலும், எங்கள் பயன்பாடுகளில் குறைவான நபர்கள் தவறான தகவல்களைப் பார்ப்பதை உறுதி செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக் என்ன மாற்றங்களை செய்துள்ளது?

பேஸ்புக் முக்கியமாக மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலாவதாக, உண்மைச் சரிபார்ப்பவர்களால் (fact-checkers) flag செய்யப்பட்ட தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிரும் ஒரு பக்கத்தை இது டேக் செய்யும்.

ALSO READ | ஜெருசலேம் பகுதியை புனிதத்தன்மை உடையதாக வைத்திருப்பது எது?

இரண்டாவதாக, வைரலாகும் தவறான தகவலைக் குறைக்க பேஸ்புக் தனிப்பட்ட கணக்குகளுக்கான அபராதங்களை விரிவுபடுத்துகிறது. கடைசியாக, உண்மைச் சரிபார்ப்பவர்களால் (fact-checkers) flag செய்யப்பட்ட பதிவுகளை பகிரும்போது மக்கள் பெறும் அறிவிப்புகளை இது மறுவடிவமைப்பு செய்துள்ளது.

தவறான தகவல்களைப் பகிரும் பேஸ்புக் flag பேஜஸ் எப்படி இருக்கும்?

ஒரு யூசர் ஏதேனும் ஒரு பேஸ்புக் பக்கத்திற்குச் செல்லும்போது அதன் உண்மைச் சரிபார்ப்பவர்கள் (fact-checkers) அந்த பக்கத்தை லைக் செய்யக்கோரி உங்களுக்கு மீண்டும் மீண்டும் பிளாக் செய்யும்போது, பேஸ்புக் போர்டல் “இந்தப் பக்கம் பலமுறை தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளது” என்ற ஒரு உடனடித் தகவலைக் அந்த குறிப்பிட்ட யூசருக்கு அனுப்பும். யூசர்கள் மேலும் அறிய அந்த வரியில் கிளிக் செய்யலாம்.

ALSO READ | கருக்கலைப்பு செயல்முறையை எத்தனை வாரத்தில் செய்யலாம்? திருமணமாகாதவர்கள் செய்யலாமா?

அதில், அந்த பக்கத்தால் பகிரப்பட்ட சில பதிவுகள் தவறான தகவல்கள் என்பது குறித்தும் மற்றும் உண்மைச் சரிபார்ப்பவர்கள் கூறியது உட்பட, உண்மைச் சரிபார்ப்பு திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கான இணைப்பு ஆகியவை அடங்கும். இது குறித்து பேஸ்புக் கூறுகையில், மக்கள் ஒரு பேஜ்ஜை போலோ செய்ய விரும்புகிறீர்களா என்பது குறித்து தகவலறிந்த முடிவை எடுக்க இந்த அம்சம் உதவும்." என்று குறிப்பிட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு விதிக்கப்படும் புதிய அபராதங்கள் யாவை?

பேஸ்புக்கில் ஒரு நபர் அதன் உண்மைச் சரிபார்ப்பு கூட்டாளர்களில் (fact-checking partners) ஒருவரால் மதிப்பிடப்பட்ட பதிவுகளை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொண்டால், அந்த நபருடைய கணக்கின் நியூஸ் ஃபீடில் உள்ள அனைத்து பதிவுகளின் விநியோகத்தையும் நிறுவனம் குறைக்கும். தற்போது, ​​ஒரு பதிவு டீபன்க்டு செய்யப்படும் போது நியூஸ் பீடில் அந்த பதிவின் வரம்பை நிறுவனம் குறைக்கிறது.

ALSO READ | கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பிரபலமாகும் Buy now, pay later திட்டம் - இதில் இருக்கும் சிக்கல் என்னென்ன?

முன்னதாக, பேஸ்புக் பக்கங்கள், குரூப்ஸ், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் தவறான தகவல்களைப் பகிரும் டொமைன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. இப்போது, ​​தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகளுக்கும் அபராதத்தை விதிக்க இந்த அம்சத்தை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

உண்மை சரிபார்க்கப்பட்ட (fact-checked) தகவல்களைப் பகிர்வதற்கான அறிவிப்புகளை பேஸ்புக் எவ்வாறு மறுவடிவமைப்பு செய்கிறது?

தற்போது, ​​ஒரு உண்மைச் சரிபார்ப்பாளர் (fact-checker) பின்னர் மதிப்பிடும் பதிவுகளை பகிரும்போது பேஸ்புக் மக்களுக்கு அறிவிக்கிறது. அந்த புதிய அறிவிப்பில், உரிமைகோரலைத் துண்டிக்கும் உண்மை-சரிபார்ப்புக் கட்டுரை மற்றும் கட்டுரையைப் பகிர உடனடி அறிவுறுத்தல் ஆகியவை அடங்கும்.

ALSO READ | இன்ட்ரா டே டிரேடிங் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!

தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் தங்கள் இடுகைகளை நியூஸ் பீடில் குறைவாக நகர்த்தக்கூடும் என்ற அறிவிப்பும் இதில் அடங்கும். எனவே மற்றவர்கள் fact-checker வெளியிடும் பதிவுகளை பார்ப்பது மிக குறைவாக இருக்கும்.

எந்த உண்மைச் சரிபார்ப்பவர்களுடன் (fact-checkers) பேஸ்புக் ஈடுபட்டுள்ளது?

உலகளவில், பேஸ்புக் பல உண்மைச் சரிபார்ப்பு கூட்டாளர்களை (fact-checkers partners) ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பேஸ்புக் ஒன்பது உண்மைச் சரிபார்ப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அவை ஏ.எஃப்.பி-ஹப், பூம், ஃபேக்ட் கிரெசெண்டோ, ஃபேக்ட்லி, இந்தியா டுடே ஃபேக்ட் செக், நியூஸ் செக்கர், நியூஸ்மொபைல் ஃபேக்ட் செக்கர், தி க்வின்ட் மற்றும் விஸ்வாஸ்.நியூஸ் ஆகியவை ஆகும்.

ALSO READ | காலரா முதல் கொரோனா வைரஸ் வரை - தொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்?

இதேபோல், அமெரிக்காவில், பேஸ்புக் மூன்றாம் தரப்பு உண்மை சரிபார்ப்பு திட்டத்தில் 10 கூட்டாளர்களை உள்நுழைந்துள்ளது. அவை ஏ.எஃப்.பி-ஹப், அசோசியேட்டட் பிரஸ், செக் யுவர் ஃபேக்ட், தி டிஸ்பாட்ச், ஃபேக்டெக்.ஆர்க், லீட் ஸ்டோரீஸ், பாலிடிஃபாக்ட், சயின்ஸ் பீட்பேக், ராய்ட்டர்ஸ் ஃபேக்ட் செக் மற்றும் யுஎஸ்ஏ டுடே ஆகியவை ஆகும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: