முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / என்95, கேஎன்95 முகக்கவசங்களை எத்தனை முறை மீண்டும் பயன்படுத்தலாம்? நிபுணர்கள் சொல்வது என்ன?

என்95, கேஎன்95 முகக்கவசங்களை எத்தனை முறை மீண்டும் பயன்படுத்தலாம்? நிபுணர்கள் சொல்வது என்ன?

சர்ஜிக்கல் மாஸ்க்

சர்ஜிக்கல் மாஸ்க்

N95 : பாதிக்கப்பட்ட நபர் மாஸ்க் இல்லாமல் இருந்தால் மற்றும் இரண்டாவது நபர் சர்ஜிக்கல் மாஸ்க்கை அணிந்திருந்தால், தொற்று 30 நிமிடங்களில் பரவுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு என்95 மாஸ்க்கை எத்தனை முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்கிற கேள்விக்கு, அது பயன்படுத்தப்படும் முறையை பொறுத்தது என்பதே மேலோட்டமான பதில். ஒருவேளை நீங்கள் ஒரு ஆழமான பதிலை தேடினால், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றை நீங்கள் அறிவது நல்லது. அது என்னவென்றால், நீங்கள் என்95 மற்றும் கேஎன்95 முக கவசங்களை சில முறை மட்டுமே பயன்படுத்த முடியும். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் என்95 மாஸ்க்கை ஐந்து முறை வரை அணியலாம்.

ஆனால் நிபுணர்கள் கூறுகையில், சராசரியாக ஒரு நபர் எத்தனை முறை குறிப்பிட்ட மாஸ்க்கை அணிகிறார்கள் என்பது, அது எவ்வாறு பாதுகாப்பாக அணியப்படுகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும்.

உதாரணமாக, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடைக்கு செல்லும் நோக்கத்திற்காக நீங்கள் ஒரு மாஸ்க்கைப் பயன்படுத்துவதும், வேலை செய்ய செல்லும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் ஒரு மாஸ்க்கை அணிவதும் - மிகவும் வேறுபடும்.

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாஸ்க்குகள் மற்றும் ஏரோசோல்களை (masks and aerosols) பற்றி படிக்கும் ரிச்சர்ட் ஃப்ளாகன் கூறுகையில், ஒரு மாஸ்க் எவ்வளவு முறை அடிக்கடி அணியப்படுகிறது என்பதை விட அது எவ்வளவு நேரம் அணியப்படுகிறது என்பது தான் முக்கியம்.

இதையும் படியுங்கள் :  WHO எச்சரிக்கை..! ஓமிக்ரான் தொற்றில் இருந்து துணி மாஸ்க்குகள் உங்களை பாதுகாக்காது

மேலும் அவர் ஒரு என்95 மாஸ்க்கின் பயன்பாட்டை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குக் கட்டுப்படுத்துமாறும் பரிந்துரைக்கிறார்.

ஒரு என்95 மாஸ்க் வழியாக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்தின் விளைவாக, அந்த முகக்கவசத்தில் துகள்கள் குவிந்துவிடும் என்று ரிச்சர்ட் ஃப்ளாகன் கூறுகிறார். முக கவசத்தில் நிறைய துகள்கள் சிக்கியிருக்கும் பட்சத்தில், அது சுவாசிப்பதை கடினமாக்கும். இது தொடரும் பட்சத்தில், மாஸ்க்கின செயல்திறன் குறையும் என்றும் ரிச்சர்ட் ஃப்ளாகன் கூறுகிறார்.

குறிப்பாக தொடர்ந்து ஒரே மாஸ்க்கை பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட மாஸ்க்கில் உள்ள எலாஸ்டிக் பேண்ட் தேய்ந்துவிடும், இதனால் மாஸ்க் உங்கள் முகத்தைச் சுற்றி இறுக்கமாக பொருந்தாது, இப்படியாக ஒரு மாஸ்க் பலவீனமாகும்.

இதையும் படியுங்கள் :  ஒரே முகக்கவசத்தை அடிக்கடி பயன்படுத்துவது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? ஓர் அலர்ட் பதிவு

மேலும் உங்கள் மாஸ்க் அழுக்காகவோ அல்லது ஈரமாகவோ கூட ஆகலாம், குறிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அதைப் பயன்படுத்தினால்.

உங்கள் மாஸ்க்கில் மேற்கண்ட மாற்றங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தாலும் கூட, அது சில மணிநேரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மாஸ்க் ஆக இருந்தாலும் கூட, அதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

மேலும் என்95 மாஸ்க்குகளை கழுவ முடியாது என்பதால், அவற்றை நீங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அதை தூக்கி எறிய வேண்டும்.

இதையும் படியுங்கள் :  விதவிதமான முகக்கவசங்களால் குழப்பமா? முகக்கவசங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறியவேண்டுமா? இதைப் படியுங்கள்..

தற்போது வரை, என்95 மாஸ்க்குகள் தான் கோவிட்-19 பரவுவதற்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன என்று நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அவதானிப்புகள் கூறுகின்றன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) கூற்றுப்படி, கோவிட்-19 தொற்றுள்ள ஒருவர் மாஸ்க் அணியாத பட்சத்தில், அவரை சுற்றி 6 அடிக்குள் நீங்கள் இருந்தால், 15 நிமிடங்களில் உங்களுக்கும் தொற்று ஏற்படலாம்.

ஒருவேளை பாதிக்கப்பட்டவரும் நீங்களும் துணியால் ஆன மாஸ்க்குகளை அணிந்திருந்தால், தொற்று பரவும் நேரம் 27 நிமிடங்களாக அதிகரிக்கிறது; அதே சமயம் நோய்த்தொற்று இல்லாத ஒரு நபர், துணியால் ஆன மாஸ்க்கை அணிந்திருந்தால், மறுகையில் பாதிக்கப்பட்டவர் மாஸ்க் அணியாமல் இருந்தால் தொற்று பரவும் நேரம் 20 நிமிடங்களாக குறைகிறது.

இதேபோல், பாதிக்கப்பட்ட நபர் மாஸ்க் இல்லாமல் இருந்தால் மற்றும் இரண்டாவது நபர் சர்ஜிக்கல் மாஸ்க்கை அணிந்திருந்தால், தொற்று 30 நிமிடங்களில் பரவுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நபர்கள் என்95 மாஸ்க்குகளை அணிந்திருந்தால், வைரஸ் பரவுவதற்கு 25 மணிநேரம் ஆகும்.

First published:

Tags: Face mask, Surgical Mask