Explainer: 'நாடாளுமன்ற நடவடிக்கைகளை' இந்திய அரசு எப்படி நேரடியாக ஒளிபரப்புகிறது தெரியுமா?

Explainer: 'நாடாளுமன்ற நடவடிக்கைகளை' இந்திய அரசு எப்படி நேரடியாக ஒளிபரப்புகிறது தெரியுமா?

கோப்புப்படம்

மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியிம், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிகளை இணைத்து சன்சாத் டிவியில் என்ற புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவின்படி சன்சாத் டிவி என்னும் பெயரில் ஒரே டிவியாக இயங்க உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் குறித்த நிகழ்வுகள் இனி ஒரே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இந்த பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது.

    மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியிம், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும். அதே வேளையில், இரு அவைகளின்ன் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி இந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சோம்நாத் சாட்டர்ஜியின் யோசனை:

    Rajya Sabha Television மற்றும் Sansad TVஐ விட Lok Sabha Television மிகவும் பழமையானது. Lok Sabha Television ஜூலை 24, 2006 அன்று இயங்கத் தொடங்கியது. சேனலின் வலைத்தளத்தின்படி, “பாராளுமன்ற மாளிகையின் நேரடி நடவடிக்கைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்த்தல்” என்பது தான் சேனலின் நோக்கம். ஏனென்றால், “நாடாளுமன்ற சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்" இதன்மூலம் “குடிமக்கள் தங்கள் ஜனநாயக கடமைகளை சரியாக செய்ய இது நிச்சயம் உதவும்" என்று வலைத்தளம் கூறுகிறது.

    முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் சிந்தனையாக எல்.எஸ்.டி.வி இருந்தது. சேனல் அமைக்கப்பட்ட சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்கள், அப்போதைய மாநிலங்களவை தலைவர் பைரன் சிங் ஷெகாவத், சாட்டர்ஜியின் முன்மொழிவை உண்மையில் நம்பவில்லை என்று கூறினார்கள். ஷெகாவத்தின் வாரிசான ஹமீத் அன்சாரி இருந்த காலத்தில்தான், லோக் சபைக்கான தனி சேனல் உருவானது.

    சேனல்களுக்கு முன்...

    LSTV ஒரு சேனலாக செயல்படத் தொடங்குவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் டிசம்பர் 20, 1989 முதல் ஒளிபரப்பப்பட்டன. முதன் முதலாக ஆண்டின் முதல் அமர்வின் முதல் நாளில் நடைபெறும் கூட்டு அமர்வுக்கான குடியரசுத்தலைவரின் உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    மக்களவைக்கான டிவி...

    ஏப்ரல் 18, 1994 அன்று, மக்களவையின் முழு நடவடிக்கைகளும் படமாக்கத் தொடங்கின. அதே ஆண்டு ஆகஸ்டில், ஒரு லோ பவர் டிரான்ஸ்மிட்டர் (Low Power Transmitter – LPT) அமைக்கப்பட்டு, பாராளுமன்ற வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. டிசம்பர் 1994 முதல், இரு அவைகளிலும் கேள்வி நேரம் தூர்தர்ஷனில் மாற்று வாரங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. “தூர்தர்ஷனில் ஒரு சபையின் கேள்வி நேர ஒளிபரப்பின் போது, மற்ற அவையின் கேள்வி நேரம் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது” என்று மக்களவையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறுகிறது. டிடி நியூஸ் சேனல் தொடங்கப்பட்டபோது, இரு அவைகளிலும் கேள்வி நேரம் ஒரே நேரத்தில் டிடி சேனல்களில் ஒளிபரப்பத் தொடங்கியது. ஆனால், ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, டிசம்பர் 2004-ம் ஆண்டு, இரு அவைகளின் நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பிற்காக ஒரு தனி செயற்கைக்கோள் சேனல் அமைக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில், எல்.எஸ்.டி.வியின் மூலம் லோக் சபையின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியது.

    Also read... சுற்றுச்சூழல் ஆய்வு - இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் மக்கள் நினைப்பது என்ன?

    மாநிலங்களவைக்கான டிவி...

    2011-ம் ஆண்டு ராஜ்ய சபா டி.வி தொடங்கப்பட்டது. மாநிலங்களவையின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதைத் தவிர, இது பாராளுமன்ற விவகாரங்களின் பகுப்பாய்வுகளையும் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தது. மேலும், அறிவு சார்ந்த திட்டங்களுக்கு இந்த சேனல் ஒரு தளத்தை வழங்கியது. ஆர்.எஸ்.டி.வி கணிசமான எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. 2017-ல் வெங்கையா நாயுடு மாநிலங்களவையின் தலைவரானபோது, ஆர்.எஸ்.டி.வி 4.6 லட்சம் யூடியூப் பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கை இப்போது 5 மில்லியனாக உள்ளது.

    ஆர்.எஸ்.டி.வி சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அதன் பட்ஜெட் எல்.எஸ்.டி.வியை விட பெரியது. மத்திய அரசின் இந்த சேனல்களை இயக்குவதற்கு மத்திய பட்ஜெட் நிதியையும் ஒதுக்குகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: