ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

நிதி மேலாண்மை முதல் முதலுதவி வரை... டீனேஜ் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வு ஏன் அவசியம்?

நிதி மேலாண்மை முதல் முதலுதவி வரை... டீனேஜ் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வு ஏன் அவசியம்?

நேர மேலாண்மைக்கு இணையாது அல்லது ஒருபடி மேலானது நிதி மேலாண்மை. பொறுப்புடன் பணத்தை கையாள வேண்டும் என்பதை டீன் ஏஜ் பருவத்தினருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

நேர மேலாண்மைக்கு இணையாது அல்லது ஒருபடி மேலானது நிதி மேலாண்மை. பொறுப்புடன் பணத்தை கையாள வேண்டும் என்பதை டீன் ஏஜ் பருவத்தினருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

நேர மேலாண்மைக்கு இணையாது அல்லது ஒருபடி மேலானது நிதி மேலாண்மை. பொறுப்புடன் பணத்தை கையாள வேண்டும் என்பதை டீன் ஏஜ் பருவத்தினருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெற்றோராக இருக்கும்பட்சத்தில் குழந்தைகளுக்கு நேரிடக்கூடிய அனைத்து ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கும். உண்மையில் அது சாத்தியமா? என்றால் இல்லை. வீட்டை விட்டு வெளியே போகும் அவர்களுடன் எப்போதும் உங்களால் கூட இருக்க முடியாது. ஆனால், தனியாக இருக்கும்போது எந்த சூழலையும் எதிர்க்கொள்ளுமளவிற்கு அவர்களை உங்களால் முன்கூட்டியே தயார்படுத்த முடியும்.

டெக்னிக்கல் அறிவை பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுக்கொள்ளும் அவர்கள் வாழ்க்கைப் பாடத்தை உங்கள் மூலமாகவே கற்றுக்கொள்வார்கள். அதனைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் உள்ளது. அந்த வகையில் அவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய சில அடிப்படையான விஷயங்கள் என்னவென்பதை இங்கே பார்க்கலாம்.

சமையல் கலை:

வீட்டில் இருக்கும் குழந்தைளுக்கு நீங்கள் சுவையாக சமைத்துக் கொடுத்துவிடுவீர்கள். டீன் ஏஜ் வயதை அடைந்த அவர்கள் தங்களுடைய கனவை, இலக்கை நோக்கிப் போகும்போது அத்தகைய உணவுகள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அந்த சூழலில் பிறரின் உதவியை அல்லது ஹோட்டல்களைத் தேடி அலையவேண்டிய நிலையில் உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். அதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும்போதே சமையல் கலையைக் கற்றுக்கொடுத்துவிடுங்கள். சுவையாக சமைக்க கற்றுக்கொடுக்காவிட்டாலும், வயிற்று பசியை போக்கிக்கொள்ளுமளவிற்கான சமையல் வித்தையை கற்றுக்கொடுத்தால் கூட போதும்.

நேர மேலாண்மை:

குழந்தையாக இருக்கும்போது அவர்களுக்கான தேவையை பெற்றோராகிய நீங்கள் செய்து கொடுத்துவிடுவீர்கள். வளர்ந்த டீன் ஏஜ் பயனாக இருக்கும் மகன் அல்லது மகளுக்கு சரியான நேரத்துக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்வதையும், எந்த வேலைகளுக்கு எந்த நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்தால், வாழ்க்கையில அவர்களுக்கு வெற்றி தேடி வரும்.

இதையும் படிங்க | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

நிதி மேலாண்மை:

நேர மேலாண்மைக்கு இணையாது அல்லது ஒருபடி மேலானது நிதி மேலாண்மை. பொறுப்புடன் பணத்தை கையாள வேண்டும் என்பதை டீன் ஏஜ் பருவத்தினருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வீண் செலவு, தேவையான செலவு எது என்பதை, வேறுபடுத்தி பார்க்கும் அறிவை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். வயதுகள் கூடும்போது தேவைகளும் அதிகரிக்கும். இதில், எதற்கு செலவு செய்ய வேண்டும் என அவர்களுக்கு தெரிந்திருந்தால், தேவையற்ற கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்காது.

சுத்தம் மற்றும் சலவை:

வீட்டில் இருக்கும் வரை நீங்கள் துணிகளை சுத்தம் செய்தும், சலவை செய்தும் வைத்துவிடுவீர்கள். ஆனால், தனியாக செல்லும் இடத்திலும் அவர்கள் அவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், வீட்டில் இருக்கும்போதே அதனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த துணிகளை எப்படி துவைக்க வேண்டும் என பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், நல்ல துணிகளில் சாயம் பிடித்து, மீண்டும் உபயோகப்படுத முடியாத நிலை ஏற்படும்.

முதலுதவி:

சளி, காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அனைவருக்கும் பொவான ஒன்று. உங்களை விட்டு தனியாக இருக்கிறார்கள் என்றால், காய்ச்சல் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும்போது அதனை சமாளிப்பது மற்றும் மருத்துவரை அணுகுவது குறித்து சொல்லிக் கொடுங்கள். உடல் குறித்து தேவையற்ற பயத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்துங்கள்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Teenage