மார்ச் முதல் மே வரை வெப்பநிலை எப்படி இருக்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாதிரி படம்

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடப்பாண்டு கோடையில் வழக்கத்துக்கு மாறாக வட மாநிலங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஒப்பீட்டளவில் தென்னிந்திய மாநிலங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என கூறியுள்ளது.

கோடை வெப்பத்தின் அளவு

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள சில பகுதிகளில் அதிக வெப்பநிலை இருக்கும் எனக் கூறியுள்ளது. இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சில நகரங்கள் மற்றும் வட கிழக்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் பருவகால வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும் என கணித்துள்ளது. மத்திய மற்றும் பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களில் இயல்பை விட குறைவான வெப்பநிலை பதிவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது.

அதிக வெப்பநிலை பதிவாகும் நகரங்கள்

பஞ்சாப், சண்டிகர், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உட்சபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக 0.71 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என கூறியுள்ளது. இதேபோல், ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிராவில் உள்ள கொன்கன் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். குறிப்பாக, 0.25 டிகிரி செல்ஷியஸ் முதல் 0.86 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் இரவு நேரங்களில் இயல்புக்கு மாறான வெப்பநிலை இருக்கும் எனவும் கூறியுள்ளது. பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் புழுக்கம் இருக்கும். மத்திய பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான வெப்ப இரவுகள் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Also read... சுற்றுச்சூழல் ஆய்வு - இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் மக்கள் நினைப்பது என்ன?

வெப்ப அலைக்களுக்கு வாய்ப்பு

உலகில் வெப்ப அலைகள் ஏற்படும் பகுதிகளுள் ஒன்றாக இந்தியாவும் மாறி வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்படுவது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புவியியல் அடிப்படையில் வெப்ப அலைகள் எப்போது ஏற்படும் என முன்கூட்டியே கணிக்க முடியாது என கூறியுள்ளது. கடந்த காலங்களில் பதிவான தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு கோடையிலும் கோர் ஹீட்வேவ் மண்டலம் (CHZ) பகுதிகளில் வெப்ப அலைகள் பொதுவானவை என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிராவின் விதர்பா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகள் கோர்ஹீட்வேவ் மண்டலங்களாக அறியப்படுவதால், அங்கு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

லா - நினாவின் பங்கு

பசிபிக் கடற்பகுதியில் மிதமான லா-நினா தாக்கம் இருப்பதாகவும் ஐஎம்டி கணித்துள்ளது. இது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சற்றே தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளது. லா-நினா நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: