சூயஸ் கால்வாயில் 2 லட்சம் டன் எடைகொண்ட ராட்சச கப்பல் சிக்கியது எப்படி? சர்வதேச வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது ஏன்?

சூயஸ் கால்வாயில் 2 லட்சம் டன் எடைகொண்ட ராட்சச கப்பல் சிக்கியது எப்படி? சர்வதேச வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது ஏன்?

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியது எப்படி?

சூயஸ் கால்வாய் என்றால் என்ன? அது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? உலகின் பிஸியான வர்த்தக வழித்தடமான சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியது எப்படி? கப்பலை மீட்க எத்தனை நாட்கள் ஆகும்? சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதால் சர்வதேச வர்த்தகம் எப்படி பாதிப்புக்குள்ளாகும்? இதற்கு முன்னர் சூயஸ் கால்வாயில் கப்பல்கள் சிக்கியிருக்கின்றனவா?

  • Share this:
சூயஸ் கால்வாய் நீர்வழிப்பாதையில் சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களுடன் நெதர்லாந்து நோக்கி பயணித்த எவர்கிவ்வன் (Evergiven) என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதியபடி கடந்த செவ்வாய்கிழமையன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாய் என்றால் என்ன? அது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?

ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும். இது 1869ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச் செல்ல வேண்டியதை தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தை குறைக்கும் சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது. இந்த கால்வாய் எகிப்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1956ம் ஆண்டில் இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் முனைப்புடன் எகிப்தை ஆக்கிரமிக்க முயன்றன. பின்னர் அம்முயற்சியை கைவிட்டனர்.

சூயஸ் கால்வாய் என்றால் என்ன?


2015ம் ஆண்டில் இந்த கால்வாய் புணரமைக்கப்பட்டது. உலகின் 12% வர்த்தகம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது.

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியது எப்படி?

சரக்கு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கும் பொருட்டு சூயஸ் கால்வாயின் குறுகிய பரப்பை ஒவ்வொன்றாகவே கடந்து செல்கின்றன.

400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான இந்த எவர்கிவ்வன் சரக்கு கப்பல் அன்று மணல் புயல் ஏற்பட்டதால் அதில் சிக்கி நிலை மாறியதாக கூறப்படுகிறது.

இந்த கால்வாயில் கடக்க தேவையான அதிகபட்ச அளவில் எவர்கிவ்வன் கப்பல் இருந்துள்ளது. தைவான் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் ஜப்பானியருக்கு சொந்தமான இக்கப்பலின் பணிபுரிந்து வரும் 25 சிப்பந்திகளுமே இந்தியர்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியது எப்படி?


மீட்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது?

கப்பல் தரை தட்டி நிற்கும் பகுதிகளில் குவிந்துள்ள மணலை அள்ளுவதற்கான சிறப்பு படகுகள் கப்பலின் இருபுறமும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. மீட்பு பணிகளுக்கு மிக சிறிய அளவில் பலன் உள்ளது என்றாலும், அது நேரத்தை விரயமாக்கும் பெரிய விஷயம் எனவும் சொல்லப்படுகிறது.

மீட்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது?


நெதர்லாந்தில் இருந்து வல்லுநர் குழு எகிப்திற்கு விரைந்துள்ளது. கப்பலில் உள்ள எரிபொருள் மற்றும் கண்டெய்னர்கள் சிலவற்றை எடுப்பதன் மூலம் கப்பலின் எடையை ஓரளவு குறைக்கமுடியும், அதன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாகலாம் என்பதால் அதற்காக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இக்கப்பலை முழுமையாக நகர்த்த ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்பது அச்சம் தரும் செய்தியாக அமைந்துள்ளது.

சர்வதேச வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது ஏன்?

சூயஸ் கால்வாயில் உலகின் 12% வர்த்தகம் நடைபெறுவதால் உலக பொருளாதார நடவடிக்கைகளின் நேரடி தொடர்பு இதற்குள்ளது. சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டது என்பதால் கடந்த புதன்கிழமை கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்து பின்னர் குறைந்தது.

சர்வதேச வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது ஏன்?


எவர்கிவ்வன் கப்பல் சிக்கியிருப்பதால் அதன் பின்னால் 237 கப்பல்கள் வரிசை கட்டி நிற்கின்றனவாம். காத்துக்கொண்டிருக்கும் கப்பல்களில் உயிரினங்கள் தொடங்கி இயற்கை எரிவாயு வரை என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் என்று புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கப்பல் விபத்து நடைபெற்றிருக்கிறதா?

மிக சமீபத்தில் 2017ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பழுதாகி நின்றது. இருப்பினும் அந்த கப்பலை ஒரு சில மணிநேரங்களிலேயே அப்புறப்படுத்தினர்.

இதனிடையே எவர்கிவ்வன் சரக்கு கப்பலில் பணிபுரிந்து வரும் 25 சிப்பந்திகளுமே இந்தியர்கள் என்று கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனமான Bernhard Schulte தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published: