Explainer: கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் EPFO கொடுக்கும் சலுகைகள் என்ன?

EPFO

வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்யும் ஒருவர், பணிக்காலத்தில் இறந்துவிட்டால் EDLI -யின் கீழ் நாமினி அல்லது குடும்பத்தினர் காப்பீடு தொகைக்கோரி விண்ணப்பிக்க முடியும்.

  • Share this:
    கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த மிகப்பெரிய உதவி தேவைப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பணியாற்றுபவர் என்றால், அவர் வருங்கால வைப்பு நிதியில் (EPFO) பங்களிப்பு செய்திருப்பார். அதில் கிடைக்கும் பயண செலவு மற்றும் பொழுதுபோக்கு செலவு தெரிந்திருக்கும் பலருக்கும் EDLI காப்பீடு பற்றி தெரிந்திருப்பதில்லை. PF கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும். அதில், நிறுவனம் நமக்கு அளிக்கும் PF பங்களிப்பில் 8.33 சதவீதம் பென்ஷனுக்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் பங்களிப்புக்கும் செல்கிறது. மேலும், 0.51 சதவீதம் EDLI காப்பீட்டுக்கும், 0.85% ஈபிஎப் அட்மின் கட்டணங்கள் மற்றும் 0.01% EDLI கட்டணங்களாகச் செலுத்தப்படுகிறது.

    காப்பீடு சலுகை

    வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்யும் ஒருவர், பணிக்காலத்தில் இறந்துவிட்டால் EDLI -யின் கீழ் நாமினி அல்லது குடும்பத்தினர் காப்பீடு தொகைக்கோரி விண்ணப்பிக்க முடியும். 1976ம் ஆண்டு முதல் இந்த காப்பீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையில் தற்போது மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள பி.எப் நிறுவனம், கொரோனா வைரஸால் இறந்தவர்களுக்கு காப்பீடின் அதிகபட்ச தொகையை 7 லட்சமாக உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச தொகை 2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எப் பங்களிப்பு செய்யும் அனைவருக்கும் EDLI காப்பீடு கட்டாயம் உண்டு. எனினும், காப்பீடுகோரி விண்ணப்பிக்கும் தொகையானது கடைசி 12 மாதங்களில் வாங்கிய ஊதியத் தொகையின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குறைந்தபட்ச தொகை நிர்ணயம்

    12 மாதங்கள் தொடர்ந்து பி.எப் பங்களிப்பு செய்திருந்தாலே குறைந்தபட்ச தொகையான 2.5 லட்சம் காப்பீட்டு தொகைக்கோரி விண்ணப்பிக்க தகுதி உண்டு. நாமினியாக நியமிக்கப்பட்டவர் அந்த தொகையை முறையாக சான்றுகளை சமர்பித்து பெற்றுக்கொள்ளலாம். நாமினி இல்லையென்றால், அங்கீகரிக்கப்பட்ட குடும்பத்தினர் அதற்கான சான்றுகளை அளித்து குறைந்தபட்ச காப்பீடு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

    Also Read:   கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த வில்லங்க மாமியார்!

    சான்றுகள்

    இறந்தவர் கடைசியாக பணிபுரிந்த நிறுவனத்தில், பணிபுரிந்தார் என்பதற்கான சான்று இருக்க வேண்டும். இறப்புச் சான்றிதழ் மற்றும் நாமினி அல்லது அங்கீகரிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான சான்று, கேன்சல் செய்யப்பட்ட செக் படிவம் ஆகியவற்றை எடுத்துச் சென்று காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

    Also Read:   3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியாக திகழும் டெல்லி மருத்துவமனைகள்!

    பி.எப் அட்வான்ஸ்

    நாட்டில் நிலவும் கொரோனா வைரஸால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கணக்கில் மீண்டும் செலுத்த தேவையில்லாத தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று மாத அடிப்படை சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை அளவுக்கு முன்பணம் எடுக்கலாம் அல்லது மொத்த இருப்பில் 75 சதவீதம் எடுக்கலாம். இதில், எது குறைவோ அந்தத் தொகையை பெற முடியும்.
    Published by:Arun
    First published: