உங்கள் துணையின் உடல் தேவைகளைப் புரிந்துகொள்ள எந்த ராக்கெட் விஞ்ஞானமும் தேவையில்லை. பாலியல் உறவை முதலில் தொடங்க உங்கள் துணையைத் தடுப்பது எது என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும். பாலியல் உறவை முன்னெடுக்க உங்கள் துணையைத் தடுத்து நிறுத்துவதற்கான பொதுவான காரணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பாலியல் உறவை நான் தொடங்கினால் எனது துணை பதிலளிப்பாரா? உதாசினப்படுத்துவாரா? என்கிற எண்ணம்:
அதிக ஈகோ உணர்வு கொண்ட பெண்கள் தங்களின் படுக்கையறையில் பாலியல் உறவைத் தொடங்குவது கடினம். ஏனெனில் தங்களின் துணையின் மீதான நிராகரிப்பு பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கும்.
நிபுணர் விளக்கம்: “காதலில் மிகவும் எளிமையான விதி ஒன்று உள்ளது. அது என்னவென்றால், உங்கள் ஈகோவை வீட்டின் வெளியே விட்டு விடுங்கள். நிராகரிப்பால் பயப்படுவது பெண்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் ஆண்களும் அவ்வாறே உணர்கிறார்கள். எனவே முதலில், உங்கள் துணை உங்களுக்காக சிலவற்றை கைவிடுகிறார் என்றால், அதற்கு பதிலளிக்கத் தொடங்குங்கள். உங்கள் துணை முன்வந்து உங்களை முத்தமிட்டாலும் அதற்கு சமமான உணர்ச்சியுடன் பதிலளிக்க தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மிகவும் பிஸியாக இருந்தாலும் உங்கள் துணையின் தேவைகளையும் ஏக்கங்களையும் புறக்கணிக்காதீர்கள்.”
உண்மையில் உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா?
நிபுணர் விளக்கம்: “பெரும்பாலான பெண்கள் நம்பும் ஒரு பொதுவான விஷயம், ஆண்கள் எப்போதும் தங்கள் மனதில் பாலியல் உறவு குறித்தே நினைத்து கொண்டிருக்கின்றனர் என்பது. ஆனால், உண்மையில் பெண்களை விட ஆண்கள் தங்கள் பாலியல் ஆசைகளைப் பற்றி அதிகம் வெளிப்படையாக பேசுவார்கள். இதுதான், அவர்கள் எப்போதும் பாலியல் உறவைத் தொடங்குவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
பாலியல் உறவில் பெரும்பாலும் ‘வாங்கிக் கொள்ள’ விரும்புகிறார்கள். குறிப்பாக பெண்கள். எனவே, நீங்கள் சில சுய கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்ய வேண்டும். ஓரிரு நாட்களுக்கு, நீங்கள் பாலியல் உறவில் எப்போதும் போல் செய்யும் செயல்கள் உங்கள் துணையை கவர்ந்திழுக்கலாம். உங்கள் துணை விரும்பும் வாசனை திரவியத்தை பயன்படுத்துங்கள், மென்மையான முத்தமிடுதல் ஆகியவற்றால் உங்கள் துணை ஈர்க்கப்பட்டு முழுமையான பாலியல் உறவில் அவர் ஈடுபடுவார் என்பதை நீங்கள் உணரலாம்.”
உங்கள் ஆண் துணை உங்களை கேலி செய்வாரோ என்ற எண்ணம்:
சில ஆண்கள் பாலியல் உறவு என்று வருகையில் சில விஷயங்களை முக்கியமாக பின்பற்றுவார்கள். அதிலும் சில ஆண்கள் படுக்கையறையில் தங்களின் துணை அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என நினைப்பர்.
நிபுணர் விளக்கம்: “ஒவ்வொருவருக்கும் அவரவர் கம்ஃபொர்ட் ஃசோன் (Comfort zone) உண்டு. உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவில் தெளிவில்லை எனில் அவரை கேலி செய்வதை விட, உங்கள் பாலியல் உறவின் நுட்பங்களை சொல்லிக்கொடுங்கள். உங்களின் பெண் துணை உங்களுக்கு எவ்வாறான பாலியல் இன்பம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதே விகிதத்தில் அவருக்கு அன்பு செலுத்துங்கள். பாலியல் உறவில் உங்கள் பெண் துணையை விமர்சிப்பது புண்படுத்த மட்டும் செய்யுமே தவிர, உங்கள் இருவருக்கும் அது உதவாது. நீங்கள் சரியாக நடந்து கொள்ளாவிட்டால், உங்களை திருப்திப்படுத்த உங்கள் பெண் துணை புதிதாக எதையும் முயற்சிக்கத் துணிய மாட்டார் என்பதே நிதர்சனம்.”
Must Read | 20, 30, 40… வயதிற்கு ஏற்ப மாற்றம் காணும் பெண்ணுறுப்பு… நிச்சயம் அறிய வேண்டியவை..!
பாலியல் உறவின்போது பெண்ணுக்கு ஏற்படும் வலி:
பாலியல் இன்பத்தின் உச்சம் பெறுவது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்.
நிபுணர் விளக்கம்: “உடலுறவின் போது வலியை எதிர்கொள்வது பெரும்பாலான தம்பதிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். ஆனால், இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது அவசியம். சில நேரங்களில் ஃபோர்ப்ளே எனப்படும் பாலியல் உறவில் இன்பம் அனுபவித்துவிட்டு பின் உறவில் உச்சம் கொள்வது பெண்ணிற்கு வலியை தவிர்க்க உதவும். ஆனால் சில சமயங்களில் இந்த வலி தொடர்ந்தால் நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டியிருக்கும். ஏனெனில் உங்கள் துணை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே, பொறுப்புடன் செயல்பட்டு, உங்கள் வாழ்வின் பாதியான உங்கள் துணையை தொந்தரவு செய்வதை தவிருங்கள்.”
Must Read | பிராவின் வரலாறு தெரியுமா? நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருப்பதற்கான 5 அறிகுறிகள்!
‘இன்றைக்கு வேண்டாமே…’ என்று தள்ளிப்போடுவது:
இதை எத்தனை முறை கேட்கிறீர்கள்? ஆனால் உங்கள் துணை பாலியல் உறவுகொள்ளும் மனநிலையில் இல்லை என்று குற்றஞ்சாட்டுவது நியாயமில்ல.
நிபுணர் விளக்கம்: “உங்கள் துணையின் பாலியல் ஆர்வம் கணிசமாகக் குறைந்துவிட்டால், அதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். இது மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு என்றால், அந்த மனஅழுத்தத்தை நீக்குவதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். விடுமுறை நாட்களை ஒன்றாக செலவிடுவது, ஒரு இரவு உணவில் நீண்ட நேர உரையாடல் போன்றவை உங்கள் துணையின் மனதை வாழ்க்கையின் சில அபாய விஷயங்களிலிருந்து விலக்க உதவும் வழிகளாகும்.”
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Explainer, Healthy Life, Healthy sex Life