Fungal Infection : கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பற்றிய சந்தேகங்களும்..முழுமையான விளக்கங்களும்..!

கருப்பு பூஞ்சை

பூஞ்சைகள் காற்றின் மூலம் பரவக்கூடியவை. நுண்துகள்கள் காற்றில் இருப்பதால் பரவுவதைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

  • Share this:
  • Dr Niket Rai MD, Associate Professor, Maulana Azad Medical College
சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நம் நாடு கொரோனா வைரஸுடன் போராடி வருகிறது. கூடுதலாக இந்த ஆண்டு வைரஸுடன் பூஞ்சை தொற்றும் கைகோர்த்து மக்களின் துன்பத்தை அதிகரித்துள்ளது. ஊடங்கங்கள் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பற்றிய செய்திகள் தான் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனை பற்றி நினைத்து அனைவரும் பயப்படுகிறோம். இருப்பினும் இந்த பூஞ்சை பற்றி பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். அவற்றிக்கான பதில்களை நாம் காணலாம்.

1. கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை என்றால் என்ன?

a. மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை என்பது ஒரு வகை பூஞ்சையால் ஏற்படும் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட திசுக்களில் கருப்பு வண்ணங்களை உருவாக்குகிறது.

b. கேண்டிடா அல்லது வெள்ளை பூஞ்சை என்பது ஒரு வகை பூஞ்சையால் ஏற்படும் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட திசுக்களில் வெள்ளை வண்ணங்களை உருவாக்குகிறது.

2. இந்த பூஞ்சை தொற்று எவ்வாறு பரவுகிறது?

இது முக்கியமாக காற்றில் இருக்கும் பூஞ்சை நுண்துகள்களை உள்ளிழுப்பதன் மூலம் பரவுகிறது. மிக அரிதாக இது சருமத்தில் உள்ள வெட்டுக்கள் மூலமாகவோ அல்லது சில அதிர்ச்சி காரணமாகவோ உடலுக்குள் நுழையக்கூடும்.

3. இவை எங்கிருந்து வருகிறது?

மற்ற நுண்ணுயிரிகளைப் போலவே, அதாவது பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போல நம்மை சுற்றியுள்ள சூழலில் பூஞ்சை உள்ளது. இது பொதுவாக மண், காற்று மற்றும் மூக்கு மற்றும் மனிதர்களின் சளிகளில் கூட காணப்படுகிறது.

4. இது காற்று வழியாக பரவுகிறதா?

இவை காற்றின் மூலம் பரவக்கூடியவை. நுண்துகள்கள் காற்றில் இருப்பதால் பரவுவதைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.



5. பூஞ்சை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுமா?

கட்டாயம் கிடையாது. பூஞ்சை தொற்று மனிதர்கள் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ளாது.

6. பூஞ்சை தோற்றால் எல்லோரும் பாதிக்கப்படுவோமா?

நுண்ணுயிரிகள் (பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை) காற்றில் இருப்பதால் அவை நம் உடலில் நுழைவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் எல்லா நபர்களுக்கும் பூஞ்சை தொற்று ஏற்படாது. நாம் எந்த அளவுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறோம் என்பதை பொறுத்தே தொற்று ஏற்படலாம். அதாவது நம் உடலில் பூஞ்சை பரவுவதை சரிபார்க்க நமது நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு வலிமையானது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு நுண்ணுயிரிகளுடன் அவை நுழையும் இடத்தில் போராடுகிறது மற்றும் அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே நோயெதிர்ப்பு திறன் இருக்கும் நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதில்லை.

7. பூஞ்சை தொற்றுக்கு ஆளாகக்கூடியவர் யார்?

நோயெதிர்ப்பு குறைபாடுகளை கொண்டுள்ள நபர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், அல்லது நீண்டகால கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட கல்லீரல் நோய், சிஓபிடி, ஆஸ்துமா, காசநோய், அல்லது புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீடித்த ஆண்டிபயாடிக் பயன்பாடு, நீண்ட காலமாக மருத்துவமனையில் தங்குவது, மோசமான ஊட்டச்சத்து, புகையிலை மெல்லுதல், புகைத்தல், ஆல்கஹால் பழக்கம் போன்ற வரலாறு இருப்பர்வர்களை எளிதில் பாதிக்கும்.

8. கொரோனா பாதித்த ஒவ்வொரு நோயாளிக்கும் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்படுமா?

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று ஒரு அரிய தொற்று, கொரோனா பாதித்த அனைத்து நோயாளிகளுக்கும் இந்த தொற்று ஏற்படாது.



9. அநேக கொரோனா நோயாளிகளில் இந்த தொற்று ஏன் அதிகரித்து வருகிறது?

a. கொரோனா தோற்று ஒருவரில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. எனவே அவர்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

b. கொரோனா சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டுகள் போன்ற மருந்துகள் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் ஆகும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக நம் உடலைப் பாதுகாப்பதே இதன் செயல்பாடு. இந்த மருந்துகள் வைரஸுக்கு எதிரான தீவிர நோயெதிர்ப்பு சக்தியால் உருவாகும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுகின்றன. ஆனால் லிம்போசைட்டுகளின் குறைக்கப்பட்ட எண்ணிக்கை கோவிட் -19 நோயாளிகளுக்கு சந்தர்ப்பவாத பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கிறது. நோயெதிர்ப்பு சக்தி சரியாக செயல்படாத நோயாளிகளுக்கு மியூகோர்மைகோசிஸ் மற்றும் கேண்டிடா தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

c. இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகள், பூஞ்சையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதோடு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்றன.

d. துத்தநாகத்தின் அதிகப்படியான பயன்பாடும் பூஞ்சை வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுவதால் அதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

e. ஆக்ஸிஜனை நீண்டகாலமாக பயன்படுத்துவதும் (முக்கியமாக தொழில்துறை ஆக்ஸிஜன்) ஒரு காரணமாக இருக்கலாம்.

f. அதேபோல நீராவி பிடிப்பதும் வாய் மற்றும் மூக்கைச் சுற்றி பூஞ்சை வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வழிவகுக்கிறது.

10. பூஞ்சை வளர்ச்சிக்கு காரணமான மேற்கண்ட மருந்துகளை நிறுத்த வேண்டுமா?

மேற்கண்ட மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு உயிர்காக்கும் கருவியாக செயல்படுவதால் அவற்றை நிறுத்துவது உதவாது.

11. அப்படியானால் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது பூஞ்சை தொற்றுநோயைத் தடுப்பது எப்படி?

மருந்துகள் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பிராக்சனரின் (RMP) கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். RMP மருந்துகளை பரிந்துரைப்பதன் பகுத்தறிவை அறிந்திருக்கிறது. அதாவது சரியான நோயாளிக்கு சரியான நேரத்தில் சரியான அளவு, அதிர்வெண் மற்றும் கால அளவுகளில் பொருத்தமான மருந்து வழங்குவது. சுய மருந்துகள் காரணமாக அல்லது குவாக்கின் ஆலோசனையால் இந்த மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவது சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுகள் மற்றும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகின்றன.



12. ‘கஷாயம்’ போன்ற இயற்கை தயாரிப்புகளும் பூஞ்சை தொற்றுக்கு காரணமா?

எதையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம். கஷாயத்தின் உள்ளடக்கங்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஸ்டீராய்டு பண்புகள் உள்ளன. எனவே இது அலோபதி மருந்துகளுக்கு கூடுதலாக பங்களிக்க முடியும். இதுபோன்ற பல இயற்கை பொருட்களில் பூஞ்சை வளர்ச்சிக்கு வினையூக்கியாக செயல்படும் துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

13. கொரோனா இல்லாமல் இந்த தொற்று ஏற்படுமா?

காட்டாயம் வாய்ப்புள்ளது. கொரோனா தொற்று இருந்தாலும் சரி அல்லது இல்லாதிருந்தாலும் சரி எந்தவொரு நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்-க்கும் தொற்று ஏற்படலாம்.

14. கருப்பு பூஞ்சை தொற்று ஆபத்தானதா?

மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை அரிதான தொற்று என்றாலும் அது மிகவும் ஆபத்தானவை.

15. கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் யாவை?

பூஞ்சை பாதிக்கும் சம்பந்தப்பட்ட பகுதியைப் பொறுத்து பல்வேறு அறிகுறிகள் மாறுபடுகின்றன.

ரைனோ ஆர்பிட்டல் செரிபரல் மியூகோர்மைகோசிஸ்: பூஞ்சை நுண்துகளை உள்ளிழுக்கும்போது தொற்று ஏற்படுகிறது. இது மூக்கு, கண் / கண் சாக்கெட், வாய்வழி குழி ஆகியவற்றின் சுற்றுப்பாதையை பாதிக்கிறது மற்றும் மூளைக்கு கூட பரவுகிறது. இதனால் தலைவலி, நாசி நெரிசல், பச்சை நிறத்தில் சளி வெளியேற்றம், சைனஸில் வலி, மூக்கில் இரத்தப்போக்கு, முகத்தில் வீக்கம், முகத்தில் உணர்வின்மை மற்றும் தோல் நிறமாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

பல்மோனரி மியூகோர்மைகோசிஸ்: நுண்துகள்களை சுவாசித்து அவை சுவாச மண்டலத்தை அடையும் போது, அது நுரையீரலை பாதிக்கிறது. இதனால் காய்ச்சல், மார்பு வலி, இருமல் மற்றும் இரத்த இருமல் ஆகியவை அறிகுறிகளாக இருக்கின்றன.

பொதுவாக இந்த பூஞ்சை தொற்று இரைப்பை, தோல் மற்றும் பிற உறுப்புகளையும் பாதிக்கலாம். ஆனால் நோயாளிகள் பொதுவாக பாதிப்டோய கூடிய வடிவம் ரைனோ ஆர்பிட்டல் செரிபரல் மியூகோர்மைகோசிஸ் ஆகும்.

16. கருப்பு பூஞ்சை தொற்றுநோயைக் கண்டறியும் முறைகள் யாவை?

எம்.ஆர்.ஐ போன்ற கதிரியக்க விசாரணைகளைத் தொடர்ந்து மருத்துவ அறிகுறிகளால் கருப்பு பூஞ்சை கண்டுபிடிக்கப்படலாம். நோய்த்தொற்றை உறுதிப்படுத்த, பயாப்ஸி செய்யப்பட வேண்டும். இதில் பூஞ்சை பாதித்த ஒரு சிறிய பகுதி திசுக்கள் பிரிக்கப்பட்டு நுண்ணோக்கின் கீழ் கவனிக்கப்பட்டு அதன் கல்ச்சரில் கருப்பு பூஞ்சையின் காலனியைக் காண்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.



17. இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க முடியுமா?

ஆம்போடெரிசின் மற்றும் போசகோனசோல் போன்ற சில பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதற்கு சிகிசையளிக்கமுடியும். சில சந்தர்ப்பங்களில் அறுவைசிகிச்சை சிதைவு தேவைப்படுகிறது. அதாவது பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றுதல் ஆகும்.

18. வெள்ளை பூஞ்சை தொற்று ஆபத்தானதா?

கேண்டிடியாசிஸ் அல்லது வெள்ளை பூஞ்சை ஆபத்தானது அல்ல.

19. வெள்ளை பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க முடியுமா?

கேண்டிடியாஸிஸ் அல்லது வெள்ளை பூஞ்சை மிகவும் குறைந்த விலை கொண்ட பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளால் முழுமையாக சிகிச்சையளிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

20. பூஞ்சை தொற்றில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

a. மூக்கு மற்றும் வாய் வழியாக நம் உடலில் பூஞ்சை நுண்துகள் நுழைவதைத் தடுக்க சுத்தமான முகக்கவசங்களை அணிவது மிகவும் பயனுள்ள வழியாகும். முகக்கவசங்களை அடிக்கடி துவகைப்பது அவசியம் அதேபோல அதனை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்.

b. வெட்டுக்கள், காயங்கள் அல்லது உடலில் ஏற்படும் வேறு எந்த காயத்தையும் உடனடியாக தண்ணீரில் கழுவவும்.

c. RMP இன் மருத்துவ மேற்பார்வையின் கீழ் COVID சிகிச்சையை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். குவாக்கிற்கு இரையாக வேண்டாம். நீராவி உள்ளிழுத்தல் மற்றும் ‘கஷாயம்’ அல்லது இதுபோன்ற பிற இயற்கை தயாரிப்புகளை வரம்பற்ற காலத்திற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

 
Published by:Sivaranjani E
First published: