ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

EPFO அப்டேட்: ஆன்லைன் மூலம் உங்கள் EPF கணக்கின் நாமினியை எளிதாக மாற்றலாம்!

EPFO அப்டேட்: ஆன்லைன் மூலம் உங்கள் EPF கணக்கின் நாமினியை எளிதாக மாற்றலாம்!

EPFO

EPFO

இனி சந்தாதாரர் அவரின் PF நாமினியை மாற்றுமாறு EPFO அலுவலக அதிகாரியை கேட்க வேண்டிய அவசியமில்லை. புதிய PF நாமினேஷன் தாக்கல் செய்வதன் மூலம் PF கணக்கு வைத்திருப்பவர் சொந்தமாக இதைச் செய்யலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக இருக்கிறீர்களா? அப்படியானால் EPF உறுப்பினர்கள் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்யலாம். EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம், ஏற்கனவே உள்ள நிமினேஷனை ஒரு EPF உறுப்பினர் மாற்றலாம் மற்றும் புதிய நாமினேஷனை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என்று EPFO ​​அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை EPFO ​​தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "EPF உறுப்பினர்கள் தற்போதுள்ள EPF/EPS நாமினேஷனை மாற்ற புதிய வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்" புதிய EPF/EPS நாமினேஷன் தாக்கல் செய்தவுடன் ஏற்கனவே இருக்கும் நாமினேஷன் பெயர் மாற்றப்படும் என்றும் மேலும் புதிய நாமினேஷன் EPFO ​​ஆல் இறுதியான ஒன்றாகக் கருதப்படும் என்பதையும் ஒருவர் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு pf உறுப்பினர்களின் கணக்கிலும் உள்ள குடும்ப உறுப்பினர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக EPFO ​​இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் PF நாமினேஷன் செய்யும் வசதி வழங்கப்படுவதாக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது போல், EPFO ​​உறுப்பினர் அதிகாரப்பூர்வ EPFO ​​இணையதளத்தில் உள்நுழைவதன் மூலம் டிஜிட்டல் முறையில் EPF, EPS நாமினேஷனை சமர்ப்பிக்கலாம். எனவே, இனி சந்தாதாரர் அவரின் PF நாமினியை மாற்றுமாறு EPFO அலுவலக அதிகாரியை கேட்க வேண்டிய அவசியமில்லை. புதிய PF நாமினேஷன் தாக்கல் செய்வதன் மூலம் PF கணக்கு வைத்திருப்பவர் சொந்தமாக இதைச் செய்யலாம்.

Also read:  முப்பதாண்டுகளில் 6 லட்சம் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்த திருச்சி தாமோதரன்

EPF நாமினியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

* அதிகாரப்பூர்வ EPFO ​​இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது epfindia.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

* இதற்குப் பிறகு 'சேவை' (Service) விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'ஊழியர்களுக்கான' (For Employees) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* 'உறுப்பினர் UAN/ ஆன்லைன் சேவை (OCS/OTP) என்பதைக் கிளிக் செய்யவும்.

* உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் உள்நுழைய வேண்டும்.

also read:  சமூக மாற்றத்திற்காக அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடிய திருநங்கை!

* அதில் உள்நுழைந்த பிறகு, 'மேனேஜ் டேப்' என்பதன் கீழ் காணப்படும் 'இ-நாமினேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* இதற்குப் பிறகு 'விவரங்களை வழங்கு' (Provide Details) டேப் திரையில் தோன்றும், அதில் 'சேமி' (Save) என்பதைக் கிளிக் செய்யவும்.

* குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க, 'ஆம்' (Yes) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் 'குடும்ப விவரங்களைச் சேர்' (Add Family Details) என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்கலாம்.

Also read:   இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு அளவு குடிநீர் பயன்பாடு உள்ளது?

* மொத்த பங்கின் தொகையை அறிவிக்க 'நாமினேஷன் விவரங்கள்' (Nomination Details) என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு 'Save EPF Nomination' (Save EPF Nomination) என்பதைக் கிளிக் செய்யவும்.

* கடைசியாக நீங்கள் OTP ஐ உருவாக்க 'E-sign' ஐ கிளிக் செய்து ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

* மேலும், நாமினேஷன் தாக்கல் செய்யும் போது உங்களுக்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும். அவை,

உறுப்பினர்களுக்கான ஆவணங்கள்: செயல்படுத்தப்பட்ட மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட UAN, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் புகைப்படம் மற்றும் முகவரியுடன் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் சுயவிவரம்.

நாமினிக்கான ஆவணங்கள்: ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், ஆதார், வங்கிக் கணக்கு எண், IFSC குறியீடு மற்றும் முகவரி ஆகியவை தேவை.

Published by:Arun
First published:

Tags: Epfo