Home /News /explainers /

அதிக சம்பளம் கொடுக்கும் வேலையாக இருந்தாலும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கும் ஊழியர்கள்! ஏன் தெரியுமா?

அதிக சம்பளம் கொடுக்கும் வேலையாக இருந்தாலும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கும் ஊழியர்கள்! ஏன் தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து தடையற்ற பணிச்சூழலைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கோவிட் தொற்று பலரது வேலைமுறையை மாற்றி அமைத்து உள்ளது. பெருந்தொற்று துவக்கத்தில் இருந்தே பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களின் வேலை முறையை வசதியாக மாற்றியுள்ளன.

தொற்று கணிசமாக குறைந்திருந்தாலும் கூட தற்போது வரை ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்து வருகின்றன பல அலுவலகங்கள். எனினும் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சில தனியார் அலுவலகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நிறுத்துவதாக அறிவித்து ஊழியர்களை நேரடி வேலை முறைக்கு திரும்ப வர வைத்துள்ளன. ஆனால் பல தனியார் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியாக இருப்பதாக உணர்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து தடையற்ற பணிச்சூழலைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது அதிக சம்பளம் என இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும்படி ஊழியர்களிடம் கேட்டால், அவர்கள் முதலாவதை (வொர்க் ஃப்ரம் ஹோம்) தான் தேர்வு செய்ய விரும்புகிறார்களாம். இது தொடர்பாக ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிறுவனமான CIEL HR சர்வீசஸ் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், வொர்க் ஃப்ரம் ஹோம் முறை கிடையாது, நேரடியாக அலுவலகம் வந்து வேலையே தொடருங்கள் என்று நிறுவனம் கறாராக சொல்லி விட்டால் ஊழியர்கள் குறிப்பிட்ட வேலையை விட்டு வெளியேறவும் தயாராக இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான சர்வேயில் பதிலளித்த 10 பேரில், குறைந்தது 6 பேர் அலுவலகத்திற்குத் திரும்புவதற்கு பதிலாக வேலையையே ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

also read : மார்ச் மாதத்துடன் டெட்லைன் முடியும் முக்கியமான விஷயங்கள்.. மறக்காமல் இதையெல்லாம் செஞ்சு முடிங்க

இதன் மூலம் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்காக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அதிக ஊதியம் பெறும் வேலைகளை தவிர்க்க பல ஊழியர்கள் தயாராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கருத்தை தெரிவித்துள்ள ஊழியர்களில் ஐடி, அவுட்சோர்சிங், டெக் ஸ்டார்ட்அப்ஸ், கன்சல்டிங், BFSI மற்றும் வணிகத்தை செயல்படுத்தும் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் அடக்கம்.

வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊழியர்கள் ஏன் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை இந்த கணக்கெடுப்பு விளக்கி இருக்கிறது. இதன்படி WFH-ஐ தொடர நினைப்பதற்கான பல காரணங்களில் முக்கியமான காரணமாக பணித்திறனைப் பாதிக்காமல் ஒரு சிறந்த வொர்க்-லைஃப் பேலன்ஸை பெற முடிவதாக ஊழியர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர சுமார் 620 நிறுவனங்களில் சுமார் 40% ஊழியர்கள் தற்போது முழுமையாக வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும், 26% பாதி நாள் அலுவலகம் பாதி நாள் WFH-ல் இருப்பதாகவும் கணக்கெடுப்பு எடுத்து காட்டுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Work

அடுத்த செய்தி