Explainer: எலான் மஸ்க் - ஜெப் பெசோஸ் சந்திப்பு - வைரலாகும் புகைப்படம்!

எலான் மஸ்க் - ஜெப் பெசோஸ்

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்ற இருவரும், தங்களின் எதிர்கால திட்டம் குறித்து விவாதித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இருவரும் 17 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து கொண்ட புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இருவருக்கும் இடையில் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. மல்டி பில்லியனர்களாக இருக்கும் இருவரும் திடீரென சந்தித்துக் கொண்டால், அந்த புகைப்படம் வைரலாகாமல் இருக்குமா?. ஆனால், இருவரும் சந்தித்துக்கொண்டது இப்போது அல்ல. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்ற இருவரும், தங்களின் எதிர்கால திட்டம் குறித்து விவாதித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பத்திரிக்கையாளர் திரங் பகான் (Trung Phan) தனது டிவிட்டர் பக்கத்தில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், "எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸூம் மதிய உணவுக்காக உணவு விடுதியில் சந்தித்துகொண்டனர். அப்போது, விண்வெளி துறை குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் இருவரும் சந்தித்துக்கொண்ட அரிதான புகைப்படங்களுள் இதுவும் ஒன்று" என பத்திரிக்கையாளர் திரங் பகான் எழுதியிருந்தார்.

அமேசான் நிறுவனரான ஜெப் பேசோஸூக்கு, அமேசான் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இருந்து விண்வெளி துறை மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. அமேசான் தொடங்கிய பிறகும் விண்வெளி துறை மீதான ஆர்வத்தை விடாமல் இருந்த ஜெப் பெசோஸ், 2000ம் ஆண்டில் ப்ளூ ஆர்ஜின் (Blue Orgin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன்மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப அவர் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அந்த முயற்சியை பாதியில் கைவிட்டு அமேசான் நிறுவனத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.

Also read... Explainer: தென்கிழக்கு ஆசியாவில் முதல்முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விர்ச்சுவல் பிரதே பரிசோதனை!

அதேபோல், எலான் மஸ்க், பே பால் (PayPal) நிறுவனத்தை ஈ பே (eBay) நிறுவனத்துக்கு விற்பனை செய்தபிறகு, அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டார். இதற்காக, 2004 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸை சந்தித்து எலான் மஸ்க் ஆலோசனை நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. பத்திரிக்கையாளர் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் வைரலான நிலையில், அவருக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், இந்த சந்திப்பு நடந்து 17 ஆண்டுகள் ஆகிறது என்பதை தன்னால் நம்ப முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பல தருணங்களில் இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க், இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார். அண்மைக் காலத்தில் அசுர வேகத்தில் உயர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கடந்த வாரத்தில் திடீரென 6.9 விழுக்காடு சரிந்தது.

இதனால், 11 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அவர் இழக்க நேரிட்டது. மஸ்கின் சொத்து மதிப்பு குறைந்ததையடுத்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மீண்டும் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியில் முதல் 50 இடத்தில் கூட இல்லாத எலான் மஸ்க், ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி கண்டு உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடம் வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: