Home /News /explainers /

வெப்ப அலை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது

வெப்ப அலை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது

வெப்ப அலை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது

வெப்ப அலை என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது

வடமாநிலங்களில் நிலவும் எதிர் -சூறாவளி (Anti- Cyclone) வெப்ப அலையின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் வெப்ப அலையின் தீவிரத்தன்மை அதிகரித்து வருகிறது.

தேசிய தலைநகர் டெல்லியில் ஏப்ரல் மாதத்தின் சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை 43°5 C. இது, இயல்பை விட அதிகம். கடந்த 12 ஆண்டுகளுக்கு டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

உடலியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை வெப்ப அலை ஏற்படுத்துகிறது. 1992 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில், வெப்ப அலைக்கு கிட்டத்தட்ட 25000 பேர் பலியானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக ஏப்ரல்/மே 2015 வெப்ப அலை இந்தியாவின் பல்வேறு இடங்களில் 2000க்கும் மேலானவர்களை கொன்றது.

மேலும், காலநிலை மாற்றம் காரணாமாக வெப்ப அலை வீசும் சூழல் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.    வெப்ப அலை என்றால் என்ன?   

சமவெளிப் பகுதியில், குறைந்தது இரு நாட்களுக்கு  40°C அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30°C அல்லது அதற்கு மேலாகவும், கடலோர பகுதிகளில் 37°C அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாக கருதப்படும். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 8 வெப்ப  அலைகள் ஏற்பட்டுள்ளன.

வெப்ப அலை தீவிரத்துக்கான காரணம் என்ன? 

வெப்ப அலைகள் பொதுவாக காற்றில் சிக்கிக்கொண்ட வெப்பத்தின் (Trapped Air) விளைவாகும்காற்றில் உள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைகாலம் நீடிக்கிறது. அப்போது, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பம் 45- 50°c வரை உயர்கிறது. இந்த காலங்களில் மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbance) காரணமாக வடமாநிலங்கல் குறுகிய கால மழைப் பொழிவை பெறுவது வழக்கம் (Pre Monsoon Showers). இதனால், வடமேற்கு மற்றும் வடமாநிலங்களில்  வெப்பம் குறைந்து காணப்படுகிறது. ஆனால், சமீபத்திய காலங்களில் இந்த மேற்கத்திய இடையூறுகள் வலுவிழந்து காணப்படுகிறது. இந்தாண்டு, மார்ச் மாதம் வடமாநிலங்களில் மிகவும் வறட்சியான வானிலை காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறகின்றனர். 

நன்றி - civilsdaily


வடமாநிலங்களில் நிலவும் எதிர் -சூறாவளி (Anti- Cyclone) வெப்ப அலையின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். பொதுவாக, சூரிய வெப்பம் காரணமாக, கடல் மேற்பரப்பில் உள்ள காற்று சூடாகி விரிவடைந்து மேலே செல்கிறது. மேலே, செல்லும் காற்று நீராவியாக மாறி மழைதரும் முகில்களை உருவாக்கிறது. இந்த நிகழ்வே சூறாவளி (சைக்ளோன் -  சூழல் வடிவத்தில் குவியும் காற்று) என்றழைக்கப்படுகிறது.மாறாக, எதிர் -சூறாவளியின் போது, வழிபண்டலத்தில் உள்ள காற்று  கீழ்நோக்கி பூமி மேற்பரப்பை அடைகிறது. தாழ்வு காற்றை அழுத்துவதன் மூலம் வெப்பப்படுத்துகிறது. கீழ்நோக்கி வருகின்ற போது, அமுக்கம் (Compression) காரணமாக காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. பூமியின் மேற்பரப்பை அடைந்த வெப்பக்காற்று எங்கும் செல்லமுடியாமல் அங்கேயே தங்கி விடுகின்றன.

அதன் பனி புள்ளிக்கு மேல் உயரும் போது இருக்கும் எந்த மேகங்களும் விரைவாக ஆவியாகின்றன. இந்த காரணத்திற்காக, ஆன்டிசைக்ளோன்கள் பொதுவாக சிறந்த, வறண்ட மற்றும் நிலையான வானிலை, குறிப்பாக கோடையில் கொண்டு வருகின்றன.

இந்த உள்ளூர் வானிலைத் தன்மையுடன் சேர்ந்து, எல் நினோ  (ELNino) போன்ற உலகளாவிய வானிலை நிகழ்வு வெப்ப அலையின் தீவிரத்தை அதிகரிக்கின்றன. 

பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவது எல்நினோ விளைவாகும்.


அவசரக்கால சிகிச்சை முறைகள்   

வெப்பத்தாக்கத்தால் பாதிக்கப்படின் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதிக்கு அழைக்கவும். மேலும், உதவி வரும் வரை பின்வரும் முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

பாதிக்கப்பட்டவரை சமமான இடத்தில் தரையில் படுக்க வைக்கவும்.

அவரது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, முடியும் பட்சத்தில் நிழலான / குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்லவும்.

குளிர்ச்சியான பொருட்களை அவர் மீது படும்படி வைத்து ஒத்தடம் தரவும். இதன் மூலம் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.

குளிர்ச்சியான நீரை அவர் மீது தெளித்தும், ஈரமான துணியால் சுற்றியும், மின்விசிறியின் கீழ் அவரை கிடத்தியும் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.

மயக்கம் தெளியும் பட்சத்தில் திரவ உணவுகளை வழங்கலாம்.

தயவு செய்து ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்க வேண்டாம்.
Published by:Salanraj R
First published:

Tags: Heat Wave

அடுத்த செய்தி