20 ஆண்டுகளில் 8 முதல்வர்கள் - என்ன தான் நடக்கிறது உத்தரகண்ட் அரசியலில்?

திரிவேந்திர சிங் ராவத்

2002 முதல் 07ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த நாராயன் தத் திவாரி முதல்வராக 5 ஆண்டுகாலம் இருந்தார். இவர் தான் அந்த மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வராக இருந்தார். இவரை தவிர்த்து இதுவரை யாரும் அங்கு 5 ஆண்டு காலம் முழுமையாக முதல்வராக பதவி வகித்தது இல்லை.

  • Share this:
இமயமலைத் தொடரில் அமைந்திருக்கும் உத்தரகண்ட், உச்சகட்ட அரசியல் குழப்பநிலை நிலவும் மாநிலமாக மாறியுள்ளது. முதலமைச்சர் பதவியை திரிவேந்திர சிங் ராவத் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட 20 ஆண்டுகளில் இதுவரை 8 முதல்வர்களை பார்த்துவிட்டது. 2,000ம் ஆவது ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தனியாக பிரித்து உத்தரகண்ட் மாநிலம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது.

பாஜக ஆளும் மாநிலமான உத்தரகண்டின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் , கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த நிலையில் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமாசெய்தார். அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் தான் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார் எனவும் தகவல்கள் கூறுகின்றனர். இதனிடையே வரும் மார்ச் 17ம் தேதியுடன் முதல்வர் பதவியை ஏற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்ய இருந்த நிலையில், திடீரென பதவியை ராஜினாமா செய்த திரிவேந்திர சிங் ராவத் செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு மிகச்சிறிய கிராமத்தில் இருந்து வந்த இந்த சிறிய தொண்டனுக்கு முதல்வர் பதவி அளித்த பாஜகவுக்கு நன்றி செலுத்துவதாக தெரிவித்தார். கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து திரிவேந்திர சிங் முதல்வர் பதவியை ஏற்றார்.

2002 முதல் 07ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த நாராயன் தத் திவாரி முதல்வராக 5 ஆண்டுகாலம் இருந்தார். இவர் தான் அந்த மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வராக இருந்தார். இவரை தவிர்த்து இதுவரை யாரும் அங்கு 5 ஆண்டு காலம் முழுமையாக முதல்வராக பதவி வகித்தது இல்லை.

நாராயன் தத் திவாரிக்கு முன்னதாக பாஜகவின் பகத் சிங் கோஷ்யாரி முதல் தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் பதவியில் இருந்தார். மீண்டும் 122 நாட்கள் (October 30, 2001- March 1, 2002) அவர் அப்பதவியில் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் பாஜகவின் நித்யானந்த் சுவாமி நவம்பர் 9, 2000, முதல் அக்டோபர் 29, 2001 வரை முதல்வராக இருந்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் 2014 பிப்ரவரியில் முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தார். மார்ச் 2016 வரை அவர் இப்பதவியில் இருந்தார். பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 21, 2016, மீண்டும் முதல்வர் ஆனார். மே 11, 2016, முதல் மார்ச் 18, 2017 வரை அவர் அப்பதவியில் இருந்தார்.

உத்தரகண்டின் முதல் தேர்வு செய்யப்பட்ட பாஜக முதல்வராக பி.சி.கந்தூரி மார்ச் 7, 2007 முதல் ஜூன் 26, 2009 வரை பதவியில் இருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கந்தூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இப்போதைய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் 2 ஆண்டுகளுக்கு முதல்வரானார். இதனிடையே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 2012 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் பதவியை ராஜினாமா செய்தார். 76 வயதான கந்தூரி மீண்டும் மாநில முதல்வரானார். மார்ச் 2012 வரை அவர் பதவி வகித்தார்.

பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் விஜய் பகுகனா முதல்வரானார், 2014 ஜனவரி 31ம் தேதி வரை அவர் பதவியில் இருந்தார். 2013 வெள்ளத்தின் போது அவரது செயல்திறன் மீது விமர்சனம் எழுந்ததால் அவர் பதவி விலக்கப்பட்டு ஹரீஷ் ராவத் மீண்டும் முதல்வரானார்.
Published by:Arun
First published: