ஹோம் /நியூஸ் /Explainers /

டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா? உடனே இதை செய்யுங்கள்!

டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா? உடனே இதை செய்யுங்கள்!

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

வீட்டில் இருந்த படியே ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் பெறலாம். அதற்கான வழிமுறை இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உங்கள் டிரைவிங் லைசன்ஸ் (ஓட்டுநர் உரிமம்) தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே 1 மாதத்துக்குள் டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸை பெறலாம். அதற்கான வழிமுறைகள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு கண்டிப்பாக ஒவ்வொருவரிடமும் டிரைவிங் லைசன்ஸ் இருக்க வேண்டும். வெறும் வாகனங்களை இயக்க மட்டுமில்லை பல இடங்களில் அடையாள சான்றிதழாகவும் டிரைவிங் லைசன்ஸ் தேவை. இதனாலே பலரும் ஒரிஜினல் லைசன்ஸ் காப்பியை கையிலே வைத்துக் கொள்கின்றனர். இதனால், சில சமயங்களில் தவறுதலாக அது தொலையவும் வாய்ப்புண்டு. அது போல், உங்களது டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால் கவலைக் கொள்ளாதீர்கள். வீட்டில் இருந்தப்படியே உடனே டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸூக்கு அப்ளை செய்ய முடியும்.

ரேஷன் கார்டு இருக்கா? அப்ப இந்த அப்டேட்டுகளை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது!

அதற்கு நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் (RTO) செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்த படியே ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் பெறலாம்.அதற்கான வழிமுறை இதோ. முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது ஆன்லைன் செயல்முறையாகும்.

1. https://parivahan.gov.in/parivahan/ என்ற வெப்சைட்டில் சென்று online services என்ற பிரிவின் கீழ் driving licence related services என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. பின்பு நீங்கள் அதில் தமிழகம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. அதில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து வசதிகளும் இருக்கும். அதில் சென்று டூப்ளிகேட் லைன்சன்ஸ் பெறுவதற்கு ஈஸியாக விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த ஆன்லைன் செயல்முறைக்குப் பிறகு அதற்கான ரசீது உங்களுக்கு கிடைக்கும். இதனை பத்திரப்படுத்திக் வைக்கவும்.

அட்சய திரிதியை அன்று ரூ.15,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது சில ஆவணங்களை நீங்கள் சமர்பிக்க வேண்டும். அவை

வாக்காளர் அடையாள அட்டை

ரேஷன் கார்டு

ஆதார் அட்டை

வருமான வரி சான்றிதழ்.

எப்போதுமே ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். லைசன்ஸ் தொலைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அதை மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள். லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து அதிகாரிகளிடம் சிக்கினால் பிரச்சினைதான். அபராதம் தொடங்கி சிறைத்தண்டனை பெறவும் வாய்ப்புண்டு.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Driving License, Govt Scheme