Home /News /explainers /

தேசிய கொடியை ஏற்றும்போது இதையெல்லாம் செய்யக் கூடாது..

தேசிய கொடியை ஏற்றும்போது இதையெல்லாம் செய்யக் கூடாது..

தேசிய கொடி

தேசிய கொடி

தேசியக் கொடியின் பயன்பாடு, இந்தியக் கொடி குறியீடு , ஜனவரி 26, 2002 மற்றும் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நாளை நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம். நாடு முழுவதும் இந்தத் திருநாளுக்காகத் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றி தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே சமயம் தங்கள் தொழில் சார்ந்த பொருட்களை வைத்து மூவர்ணக்கொடி அமைப்பைக் கொண்டு வருகின்றனர்.
ஹோட்டலில் மூவர்ண உணவு பரிமாறுவது, கண்களில் தேசியக்கொடியை வரைவது, வீட்டுக்கு தேசிய கொடி நிறம் அடிப்பது என்று பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர். இச்சூழலில் கொடியை எப்படி கையாள வேண்டும், கொடியை எப்படி கையாளக் கூடாது என்று தெரிந்துகொள்வோம்.

தேசியக் கொடியின் பயன்பாடு, இந்தியக் கொடி குறியீடு , ஜனவரி 26, 2002 மற்றும் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

விண்வெளியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 75ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தி!

இந்திய தேசியக் கொடியின் பயன்பாடு, காட்சிப்படுத்தல் மற்றும் நாட்டில் ஏற்றுவது தொடர்பான சட்டங்கள் மற்றும் மரபுகளை
இந்தியக் கொடிக் குறியீடு கொண்டுள்ளது . கொடி குறியீடு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு தனியார், பொது மற்றும் அரசு நிறுவனங்கள் தேசியக் கொடியை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கூறுகிறது .

இந்தியக் கொடியின் தயாரிப்பில் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தலாம்?

பாலியஸ்டர் அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட கொடிகள் முன்பு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் டிசம்பர் 30, 2021 அன்று, அரசாங்கம் அதை அனுமதிக்கும் வகையில் கொடிக் குறியீட்டை மாற்றியது. எனவே பாலியஸ்டர், பருத்தி, கம்பளி, பட்டு அல்லது காதி போன்றவற்றில் தேசியக் கொடியை உருவாக்கலாம். கையாலும் இயந்திரத்தாலும் நெய்யப்படலாம். நெகிழிப் பொருட்களால் தயாரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

எங்கு ஏற்றலாம்?

பொது, தனியார் அமைப்பு அல்லது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், கொடியின் கண்ணியம் மற்றும் மரியாதையைப் பின்பற்றி, சடங்குகள், அனைத்து நாட்களிலும், சந்தர்ப்பங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

 யார் ஏற்றலாம்?
தேசியக்கொடியை எந்த பாகுபாடும் இன்றி யார் வேண்டுமானாலும் ஏற்றலாம். சேதமடைந்த கொடிகளை ஏற்றக் கூடாது.

கொடியின் உயரம்?
தனித்துவமான இடத்தில் தனியாக தேசியக் கொடியை ஏற்றலாம். மற்றக் கொடிகளோடு ஏற்றும் போது, அதை விட உயரமான கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். சமமாகவோ அதை விடக் கீழாகவோ ஏற்றக் கூடாது. கம்பத்தின் உச்சியில் ஏற்ற வேண்டும்.

எப்போது ஏற்றலாம்?

அரசாங்கம் சமீபத்தில் செய்த திருத்தத்தின்படி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் கொடிகளை ஏற்ற அனுமதிக்கிறது. இதற்கு முன்பு சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

கொடியின் அளவு?

தேசியக் கொடி எந்த அளவிலும் இருக்கலாம். ஆனால் எப்போதும் செவ்வக வடிவில் இருக்க வேண்டும், நீளம் மற்றும் உயர விகிதம் 3:2 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் தெரியுமா?

வாகனத்தில் தேசியக் கொடியை யார் கட்டலாம்?

அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் மட்டுமே தங்கள் வாகனங்களில் தேசியக் கொடியை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்,  குடியரசு துணைத் தலைவர், , இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,ஆளுநர்கள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்தியத் தூதரகத் தலைவர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் போன்றோர் மட்டுமே தங்கள் வண்டிகளின் முன்னால் தேசியக் கொடியைக் கட்ட அனுமதிக்கப்படுவர்..

தேசியக் கொடியை அப்புறப்படுத்துவது எப்படி?

சேதமடைந்த தேசியக் கொடியானது தனிப்பட்ட முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அதன் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் எரிக்கப்படலாம். காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை குடிமக்கள் தரையில் வீழும் படி விடக்கூடாது. தண்ணீரில் மிதக்கும்படி விடக்கூடாது.

தேசியக்கொடி பயன்பாட்டில் செய்யக்கூடாதவை…
தேசியக்கொடியை ஆடைகளில் குத்திக்கொள்ளலாம். ஆனால், இடுப்புக்குக் கீழான ஆடைகளில் பயன்படுத்தக் கூடாது.
கைக்குட்டை, தலையணை போன்ற பொருட்களில் தேசியக்கொடியை அச்சிடக்கூடாது.
தேசியக்கொடியைத் திரைச் சீலையாக பயன்படுத்தக்கூடாது.
எழுதவோ அச்சிடவோ கூடாது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Independence day, India, Law

அடுத்த செய்தி