நோயிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கை அதற்கான மருந்தை அறிவியல் நமக்கு தந்திருக்கிறது என்பது தான். ஆனால் சமீபத்தில் சில ஆண்டுகளாக பாக்டீரியாக்களை நம்மிடம் இருக்கும் மருந்துகளை கொண்டு அழிக்க முடியவில்லை. அதன் அர்த்தம் அந்த பாக்டீரியாக்களால் உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியவில்லை.
இப்படி நோயை குணப்படுத்த முடியாமல் உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டில் 49.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 204 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் இந்த அதிர்ச்சி தகவல் Lancet என்ற பிரபல மருத்துவ இதழில் கடந்த மாதம் வெளிவந்துள்ளது.
நம்மிடம் இருக்கும் மருந்துக்கு எதிராக பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக் கொள்வதால் நோய்க்கு எதிராக மருந்துகள் வேலை செய்வதில்லை. இதை நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial resistance) என்று கூறுவர். ஆண்டி பயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்துவதாலும், மருத்துவர் கூறிய நாட்களை விட குறைவான நாட்களுக்கு மருந்து உட்கொள்வது போன்ற காரணங்களால் நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial resistance) உருவாகிறது.

மருத்துவர் கவிதா
இந்நிலையில், காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா உட்பட பல பாக்டீரியாக்கள் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கிக் கொண்டுள்ளன. இவற்றை பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். வழக்கமாக கொடுக்கும் மருந்துகளை தவிர்த்து அரிதாக பயன்படுத்தும் மருந்துகளை கொடுத்து நோய் குணப்படுத்த முயற்சி எடுக்கலாம். ஆனால் இதே நிலை தொடர்ந்தால் நம்மிடம் மருந்துகள் எதுவும் வேலை செய்யாமல் போகும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கிறார் நுண் உயிரியல் பேராசிரியர் மருத்துவர் கவிதா.
Must Read : கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்
எதிரியின் ஆயுதம் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் தன்னை தயார் செய்து நிலைப்படுத்திக் கொண்டே இருக்கும் நுண் உயிரிகளுக்கு நடுவில் உயிர்வாழ மனிதனுக்கு அறிவியல் மட்டுமே கை கொடுக்க முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.