• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • எறும்புகளை சாப்பிட்டதால் தான் டைனோசர் இவ்வளோ பெரிய உருவம் பெற்றதா ! ஆய்வில் வெளிவந்த உண்மை..

எறும்புகளை சாப்பிட்டதால் தான் டைனோசர் இவ்வளோ பெரிய உருவம் பெற்றதா ! ஆய்வில் வெளிவந்த உண்மை..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சீன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திய சமீபத்திய ஆய்வில் டைனோசர்கள் ஒரு சிறிய கோழி அளவில் இருந்ததாகவும் எறும்புகளை சாப்பிட துவங்கிய பின்பு பெரிய உருவத்தை பெற்றதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
டைனோசர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் மிக உயர்ந்த உயரம் மற்றும் ராட்சத உருவமும் தான். ஆனால் நம் நினைப்பை தவறு என்று நிரூபித்துள்ளது புதிய ஆய்வு ஒன்று. டைனோசர்கள் பிரமாண்ட உருவம் கொண்டவை தான் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அனைத்து வகை டைனோசர்களும் அத்தகைய பிரமாண்ட உருவத்தை கொண்டிருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சில டைனோசர்கள் சிறியவை மற்றும் மிக சிறியவையாகவும் இருந்துள்ளன.

சீன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்திய சமீபத்திய ஆய்வில் அல்வாரெஸ்ஸர் வகை டைனோசர்கள் மிக சிறியதாகவே அதாவது ஒரு கோழியை போன்ற அளவில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி மாணவராகவும், பெய்ஜிங்கில் உள்ள முதுகெலும்பு பாலியான்டாலஜி மற்றும் பேலியோஆன்ட்ரோபாலஜி இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிபவருமான சிச்சுவான் கின் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில், சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எறும்புகளை உண்ணும் விலங்கு வகையாகமாறிய பின், அல்வாரெஸ்ஸர் டைனோசர்களின் உருவ அளவு விரைவாக சுருங்கி விட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நம்ப முடியாத இந்த உருவ மாற்றத்தை கண்டறிய மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் இனங்களின் டஜன் கணக்கான உடல் மாதிரிகளை சிச்சுவான் கின் தலைமையிலான ஆராய்ச்சி குழு பகுப்பாய்வு செய்தது. சீனா, மங்கோலியா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் ஜுராசிக் பிற்பகுதியில் கிரெட்டேசியஸ் வயது வரை (160 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) அல்வாரெஸ்ஸர் வகை டைனோசர்கள் வாழ்ந்துள்ளன. மெல்லிய தேகம் மற்றும் இரண்டு நீளமான கால்களுடன் இந்த வகை டைனோசர்கள் பூமியில் வாழ்ந்துள்ளன. இவை பல்லிகள், ஆரம்பகால பாலூட்டிகள் மற்றும் குழந்தை டைனோசர்களை தங்கள் உணவாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளன.

Also read: 90s கிட்ஸ்களை ஏங்க வைக்கும் திருமண விருந்து மெனு அட்டை-வைரலாகும் புகைப்படம்

இவற்றின் மாதிரியை பகுப்பாய்வு செய்த போது, அது 10 முதல் 70 கிலோ வரை அல்லது தோராயமாக ஒரு பெரிய வான்கோழியின் அளவு முதல் சிறிய நெருப்புகோழி அளவு வரை இருந்திருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்தனர். எவ்வாறாயினும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தை நோக்கி ஆய்வு நகர்ந்த போது, அல்வாரெஸ்ஸர் வகை டைனோசர்களின் உருவ அளவு ஒரு சாதாரண கோழியின் அளவு வரை சுருங்கி விட்டதை உருமாதிரி காட்டியது. இந்த உருவ மாற்றத்திற்கு காரணம் அல்வாரெஸ்ஸர் டைனோசர்கள் எறும்பு தின்னிகளாக மாரி விட்டதே காரணம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.

Photo Gallery: நடிகை பார்வதி நாயரின் செம ஹாட் போட்டோஸ்..

அல்வாரெஸ்ஸர் டைனோசர்கள் எறும்பு தின்னிகளாக மாறுவதற்கு உணவுகளுக்கு ஏற்பட்ட போட்டியின் விளைவு காரணமாக இருந்திருக்கலாம் என்று தாங்கள் கருதுவதாக ஆரய்ச்சியாளர்களில் ஒருவரான மைக்கேல் பெண்டன் குறிப்பிட்டுள்ளார். கிரெட்டேசியஸ் காலத்தில், சுற்றுச்சூழல் வேகமாக வளர்ச்சியடைந்ததாகவும், பூச்செடிகள் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்ததாகவும் ஆர் குறிப்பிட்டார். 145.5 முதல் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலம் கிரெட்டேசியஸ் என வரையறுக்கப்படுகிறது.

டைனோசர்கள் இந்த மலர் செடிகளை உண்ணவில்லை. எனவே அவை எறும்புகள் மற்றும் கரையான்கள் உள்ளிட்ட புதிய வகை பூச்சிகள் உருவாக்க வழிவகுத்தன. சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு கிரெட்டேசியஸ் பிராந்திய புரட்சி என்று அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட மைக்கேல் பெண்டன், இது நவீன பாணி காடுகள் மற்றும் வனப்பகுதிகளின் தோற்றத்தை குறிக்கிறது என்றார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: