பிங்க் பந்து vs சிவப்பு பந்து - இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியுமா?

பிங்க் பந்து vs சிவப்பு பந்து - இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியுமா?

Pink ball vs Red ball

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள எஸ்.ஜி நிறுவனம் இந்த பந்துகளை தயாரித்து கொடுக்கிறது. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் பிங்க் நிறப் பந்துக்கும், சிவப்பு நிறப்பந்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

  • Share this:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் (இளம் சிவப்பு) நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள எஸ்.ஜி நிறுவனம் இந்த பந்துகளை தயாரித்து கொடுக்கிறது. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் பிங்க் நிறப் பந்துக்கும், சிவப்பு நிறப்பந்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

பிங்க் மற்றும் சிவப்பு பந்துகளின் வேறுபாடு :

மற்ற பந்துகளைப் போலவே கார்க், கம்பளி, ரப்பர் ஆகியவற்றைக் கொண்டு பிங்க் நிற பந்தும் தயாரிக்கப்படுகிறது. சிவப்பு பந்துடன் ஒப்பிடுகையில் பிங்க் பந்தின் நிறம் மற்றும் பளபளப்பு நீடித்து நிலைக்க கூடுதலாக ஒரு பூச்சு பூசப்படுகிறது. ஒரு பிங்க் பந்தில் அதன் சரியான வழவழப்புத் தன்மையை கொண்டுவர 4-5 நாள்கள் ஆகும். 22.5 செ.மீ இருக்கும் பிங்க் பந்தில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும். சிவப்பு பந்தில் வெள்ளை நூலில் தையல்களும், பிங்க் பந்தில் கறுப்பு நூலில் தையல்களும் போடப்பட்டு இருக்கும். சிவப்பு பந்தில் வழுவழுப்பு தன்மைக்காக மெழுகு பூச்சு இருக்கும்.

விளையாடத் தொடங்கும்போது மெழுகைப் பந்து இழுத்துக் கொண்டுவிடும் என்பதால், ரிவர்ஸ் ஸிங் செய்ய பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருக்கும். ஏதாவது ஒருபக்கத்தை மட்டும் தேய்வதுபோன்று பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவார்கள். ஆனால், பிங்க் பந்தில் மெழுகு பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக பியு எனப்படும் பந்துகளுக்கான பாலிஷ் பயன்படுத்தப்படும். இதனால் 40 ஓவர்கள் வரை பிங்க் பந்தின் நிறம் குறையாமல் இருக்கும். சிவப்பு, பிங்க், வெள்ளைப் பந்துகளில் 6 வரிசை தையல்கள் இருக்கும். இதில் டியூக்ஸ், எஸ்ஜி பந்துகளில் கையால் 6 வரிசை தையல்கள் இருக்கும். கூக்கபுரா பந்தில் உட்புறத்தில் மட்டும் இரு தையல்கள் கையால் போடப்பட்டு இருக்கும்.

பந்துவீச்சாளர்கள்

சிந்தடிக், லிலன்(சணல்) கலவை தயாரிக்கும் பிங்க் பந்து நீண்ட நேரம் பொலிவை இழக்காமல் இருக்கும் என்பதால் வேகப்பந்துக்கு சூப்பராக ஒத்துழைக்கும். கூடவே அதிக ஸ்விங் ஆகும். அதனால், ஸ்பின்னர்களையும் முன்கூட்டியே அழைக்கலாம். பகல் நேரத்தில் பந்துவீசும் போது உதவியாக இருக்க சிந்தடிக்கும், இரவுநேரத்தில் பனிப்பொழிவின் போது பந்தை இருக்கமாகப் பிடிக்க லினன் பயன்படும். லினன் இரவுநேரத்தில் பனியை உறிந்துகொள்ளும். பொதுவாகச் சிவப்பு பந்தில் விளையாடும் போட்டி சூரியன் மறைவுக்குள் முடிந்துவிடும். ஆனால், பிங்க் பந்து நண்பகலுக்குப்பின் தொடங்கி, இரவுவரை நடக்கும் என்பதால் பந்து தயாரிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அகமதாபாத் பிட்ச்சில் பயன்படுத்தப்பட்ட பிங்க் பந்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் 30க்கு 28 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பேட்ஸ்மேன்கள்

பிங்க் பந்தில் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். பந்துவீச்சாளர்கள் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், பந்து தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையே வேகம் அதிகமாக இருக்கும். இதனால் பந்தை கணித்து ஆடுவதில் சிரமம் இருக்கும். இது பந்துவீச்சாளர்களுக்கு சாதமான அம்சமாகும். அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா - இங்கிலாந்து பகலிரவு டெஸ்ட் போட்டியில் கூட பந்துவீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தியது கண்கூட பார்க்க முடிந்தது. மற்ற பந்துகளைப்போல் விளையாடுவது அல்லாமல், நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே அதிக ரன்களை எடுக்க முடியும்.

பிங்க் பந்து போட்டி முடிவுகள்

பிங்க் நிற பந்தில் சர்வதேச அளவில் முதன்முறையாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற 16 போட்டிகளில் 2 போட்டிகள் 2 நாட்களுக்குள் நிறைவடைந்துள்ளது. 4 போட்டிகள் 3 நாட்களில் முடிவு கிடைத்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: