Home /News /explainers /

டாடா குழுமத்தின் டாடா குடும்பம் அல்லாத முதல் தலைவர்-சைரஸ் மிஸ்திரி

டாடா குழுமத்தின் டாடா குடும்பம் அல்லாத முதல் தலைவர்-சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

Cyrus Mistry: தமிழ்நாட்டில் 106 மெகாவாட் மின் திட்டம், ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து ஹைதராபாத் அருகே இந்தியாவின் மிகப்பெரிய பயோடெக் பூங்கா ஆகியவற்றை உருவாக்கினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் வழியில் பால்காரில் அவர் பயணித்த மெர்சிடிஸ் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதில் காலமானார்.

சைரஸ் மிஸ்திரி இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்தார். கட்டுமான நிறுவனமான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து 2012 இல் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். ரத்தன் டாடாவுக்குப் பிறகு, டாடா குடும்பத்தில் இருந்து வராத முதல் தலைவர் இவர் தான்.

படிப்பு:

மிஸ்திரி (54) மும்பையில் பார்சி குடும்பத்தில் ஜூலை 4, 1968 இல் பிறந்தார். அவர் 1990 இல் லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் மெடிசின் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 1996 இல் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மிஸ்திரியின் மனைவி ரோஹிகா சாக்லா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்

பணி :

சைரஸ் மிஸ்திரி 1991 இல் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தில்  சேர்ந்தார். 1995 இல் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கட்டமைப்பை உருவாக்குவதற்கு சைரஸ் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டில் 106 மெகாவாட் மின் திட்டம், ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து ஹைதராபாத் அருகே இந்தியாவின் மிகப்பெரிய பயோடெக் பூங்கா ஆகியவற்றை உருவாக்கினார்.

பெங்களூரு மழை வெள்ளத்தால் 5 மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்த ஊழியர்கள்.. ரூ.225 கோடி இழப்பு என நிறுவனங்கள் தகவல்

மிஸ்திரியின் கீழ் ஷபூர்ஜி பல்லோன்ஜியின் கட்டுமான வணிகம் பன்மடங்கு வளர்ந்தது. நிறுவனங்கள் தூய்மையான கட்டுமானத்தில் இருந்து வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் EPC விநியோக முறைகளின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவது, கடல், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் இரயில் துறைகளில் சிக்கலான திட்டங்களை செயல்படுத்துவது என்று பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்.ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் விவசாயம் மற்றும் உயிரி எரிபொருளுக்கான முயற்சியும் இவரால் கண்காணிக்கப்பட்டது.

ரத்தன் டாடா சாம்ராஜ்யத்தின் டாடா குடும்பம் அல்லாத முதல் தலைவர் :

மிஸ்திரியின் தந்தை  டாடா குழுமத்தில் பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்ற பின்னர், செப்டம்பர் 2006 இல் டாடா சன்ஸ் குழுவில் மிஸ்திரி பணியில் சேர்ந்தார். முன்னதாக, சைரஸ் மிஸ்திரி பல டாடா நிறுவனங்களில் நிர்வாகமற்ற பதவிகளை வகித்துள்ளார்.

நவம்பர் 2011 இல் மிஸ்திரி டாடா குழுமத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு முதல் குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து சைரஸ் மிஸ்திரி 2012 இல் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். நிறுவனத்தின் வரலாற்றில் டாடா குடும்பத்தின் இரத்த உறவினராக இல்லாத முதல் தலைவர் ஆனார்.

ஸ்டார்பக்ஸின் புதிய CE0-வாக பதவியேற்கும் லக்ஷ்மன் நரசிம்மன்.. பின்னணி என்ன?

சைரஸ் மிஸ்திரி, 2016 வரை நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். டாடா டிரஸ்ட் கூட்டத்தில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அறக்கட்டளை டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை வைத்திருந்தது மற்றும் ரத்தன் டாடாவால் கட்டுப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 2016 இல், சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு மிஸ்திரி குடும்ப ஆதரவு முதலீட்டு நிறுவனங்கள் டாடா சன்சீன் தவறான நிர்வாகத்தைக் குற்றம் சாட்டி, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (NCLAT) நாடியது. பிப்ரவரி 2017 இல், டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் குழுவில் இருந்து மிஸ்திரி இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

டாடா நிறுவனத்தில் இருந்து சைரஸை நீக்குவது சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் 2021 இல் தீர்ப்பளித்தது. சிறுபான்மை பங்குதாரர்களின் உரிமைகள் குறித்த டாடா சன்ஸ் விதிகளையும் இது உறுதி செய்தது. டாடாஸில் பணிபுரிந்த பிறகு, மிஸ்திரி தனது புதிய துணிகர மூலதன நிறுவனமான மிஸ்ட்ரி வென்ச்சர்ஸ் எல்எல்பியை நிறுவினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: TATA

அடுத்த செய்தி