ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

சென்னை மாநகராட்சி மூலம் கடன்.. யாரெல்லாம் பெற முடியும் முழு விபரம்

சென்னை மாநகராட்சி மூலம் கடன்.. யாரெல்லாம் பெற முடியும் முழு விபரம்

மாநகராட்சி கடன்

மாநகராட்சி கடன்

இந்த கடனை வங்கிகள் மூலமே பெற அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை மாநகராட்சி மூலம் ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது குறித்த முழு விபரம்.

  பொருளாதாரத்தில்; பின் தங்கியவர்கள் , சிறு குறு தொழில் செய்பவர்கள் அல்லது சிறு தொழில் செய்ய உதவி தேடுபவர்கள் சென்னை மாநகராட்சி மூலம் ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை கடன் பெற முடியும்.  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ்  கடனுக்காக நிதியுதவி வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கான விவரங்களை இப்போது பார்க்கலாம்.

  நகர்ப்புறத்தில் வாழும் தனிநபர் ஆண் , பெண் ஆகியோர் சுயதொழில் செய்ய விருபினால் அவர்களுக்கு, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்  மற்றும்  தனியார் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட தனிநபருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

  இந்த கடனை பெற யாருக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படும், என்றால்  தெருவோர வியாபாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பினர். இவர்கள் எளிமையாக இந்த கடன் உதவியை பல்வேறு ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது.

  அதே போல் சுயஉதவி குழுக்களில் இருக்கும் பெண்கள் புதியதாக தொழில் தொடங்கவும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை வங்கிகள் மூலமே பெற அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வங்கி இருப்பை விட நான்கு மடங்கு வரை எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் கடன்களைப் பெறலாம்.

  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகையாக 3% ஒதுக்கப்படும். சிறுபான்மையினர் 15% பயன்பெற முடியும். ஒரே பகுதியைச் சார்ந்த ஒருமித்த தொழில் செய்யும் தெருவோர வியாபாரிகளை கொண்டு (5 முதல் 10 நபர்கள்) பொது ஆர்வக்குழு அமைத்து அவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.

  மேலும்  இது தொடர்பாக விவரங்கள் அறிய 9444094247, 9444094248 அல்லது 9444094249 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து நேரில் சென்று முழு விபரத்தையும் விசாரிக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.  இந்த விவரங்கள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Business, Loan