Lambda வேரியண்டால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து? தடுப்பூசி திறனை பாதிக்குமா? - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Lambda Variant

விஞ்ஞானச் சான்றுகளின்படி, லாம்ப்டா மாறுபாடு அதன் ஸ்பைக் புரதங்களில் குறைந்தப்பட்சம் 7 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் அதிக அளவில் பரவும் தன்மையை ஏற்படுத்துகிறது.

  • Share this:
உலகம் முழுவதிலும், கொரோனா வைரஸின் பல மாறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, முன்பைப் போலவே பேரழிவைத் தொடர்ந்த நிலையில், கூடுதலான உயிரிழப்புகள் மற்றும் வைரஸ் பாதிப்பால் இறப்புகள் அதிகரித்துள்ளன. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் அழிவை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ள நிலையில், மற்றொரு மாறுபாடான லாம்ப்டாவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

C.37 என அறிவியல் ரீதியாக அறியப்பட்ட லாம்ப்டா மாறுபாடு, இப்போது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பெரிய  அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. டெல்டா மாறுபாட்டை விட மிகவும் 'ஆபத்தானது' என்று கருதப்படும் இந்த வைரஸ் கூடுதல் வேகத்தில் பரவக்கூடியது, என்று, SARS-COV-2 வைரஸின் புதிய மாறுபாட்டைப் பற்றிய எச்சரிக்கைகளை அறிவியல் ஆய்வாளர்கள் தற்போது வெளியிடுகிறார்கள். இது கூடுதல் கவலைகளை அளிக்கிறது மற்றும் மீண்டும் தொற்று நோய் பாதிப்பின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இந்த மாறுபாடு இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், நாம் எவ்வளவு கவலைப்பட வேண்டும்? நம்மிடம் உள்ள தடுப்பூசிகள் மூலம் கிடைத்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை இது பாதிக்குமா? என்பது குறித்து இங்கு காண்போம்.,

லாம்ப்டா கோவிட்-19 மாறுபாடு மற்றும் அதன் அறிகுறிகள் :

உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் SARS-COV-2 வைரஸின் C.37 பிறழ்வை கொரோனா வைரசின் புதிய மாறுபாடாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக்கும் என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட பின்னர், லாம்ப்டா என அழைக்கப்படும் இந்த மாறுபாடு ஜூன் 14 அன்று முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மாறுபாடு முதலில் பெருவில் கண்டறியப்பட்டது, பிறகு, விரைவிலேயே தென் அமெரிக்க நாடுகளில் பரவியது மற்றும் அங்கு ஒரு பிரதானமான மாறுபாடாக மாறியது.

Also Read:   ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!

லாம்ப்டா மாறுபாடு இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் தாமதமாகவே கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நாடுகள், டெல்டா மாறுபாட்டால் அதிகரிக்கப்பட்ட நோய் தொற்று பாதிப்புக்கு எதிராக போராடி வருகின்றன.

லாம்ப்டா மாறுபாடு இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கண்டறியப்படவில்லை.

எவ்வாறாயினும், லாம்ப்டா மாறுபாடு முற்றிலும் புதிய மாறுபாடு அல்ல. இது முதன்முதலில் ஆகஸ்ட் 2020 இல் பெருவில் கண்டறியப்பட்டது, அங்கு இது 805 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. அதன் பிறகு, அண்டை நாடுகளிலும் பரவி, அதிகபட்ச நோய்தொற்று பாதிப்புக்கு காரணமாக மாறியது. மார்ச் 2021 இல் தான் இந்த மாறுபாடு அதி|வேகமாகப் பரவத் தொடங்கியது, மேலும் சர்வதேச பயணிகளிடையே 25 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் சிறிய எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்டது.

இந்த மாறுபாடு தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா (Variant of Concern - VoC)?

உலக சுகாதார அமைப்பு மற்றும் பல சுகாதார வல்லுநர்கள் SARS-COV-2 இன் லாம்ப்டா மாறுபாட்டினால் தொற்று அதிகமாகப் பரவும் என்று கூறியுள்ளனர். மேலும், பரவுதல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இருப்பினும், VoC ஆக இன்னும் நிறுவப்படவில்லை. தற்போது, இது புதிய வைரஸ் என்றும், கோவிட் வைரஸின் ஏழாவது மாறுபாடு (Variant of Interest - VoI) என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read:    ‘உங்கள் மனைவியை ரொம்ப பிடித்திருக்கிறது..’ கணவரின் கண் எதிரில் எதிர் வீட்டு ரோமியோ செய்த அடாவடி!

VoI என அழைக்கப்படும் இந்த வைரஸ், மரபணு மாற்றங்களால் தொற்றுப் பரவல் மற்றும் வைரஸ் பரவலை பாதிக்கும் பிற காரணிகளை கூடுதலாக பாதிக்கும் என்பதைக் குறிக்கிறது. கணிசமாக சமூக ரீதியான பரவல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் மாறுபாடுக்கும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது.

தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் புதிய கோவிட் மாறுபாடு, எந்த விதமான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த கவலைகளை தீர்க்க போதுமான ஆய்வுகள் அல்லது மருத்துவ ஆராய்ச்சி செய்யப்படாததால் இது பெரியளவில் அச்சுறுத்தக்கூடிய வகையாக இன்னும் நிறுவப்படவில்லை.

இந்த மாறுபாடு ஏன் இவ்வளவு கவலைப்படும் அளவுக்கு உள்ளது?

கோவிட் வைரஸ் லாம்ப்டா மாறுபாடு, இன்னும் பெரிதாக கவலைப்படும் அளவிலான மாறுபாடாக இல்லாவிட்டாலும், அதிக அளவில் பரவக்கூடிய தன்மை மற்றும் அச்சுறுத்தக்கூடிய பிறழ்வான அம்சங்களைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமான அச்சுறுத்தலாக சந்தேகிக்கப்படுகிறது. எங்களுக்குக் கிடைத்த விஞ்ஞானச் சான்றுகளின்படி, லாம்ப்டா மாறுபாடு அதன் ஸ்பைக் புரதங்களில் குறைந்தப்பட்சம் 7 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் அதிக அளவில் பரவும் தன்மையை ஏற்படுத்துகிறது. டெல்டா மாறுபாடு வைரஸும், ஒரு VoC தான் அனால், அதில் மூன்று பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.

லாம்ப்டா மாறுபாடு வைரஸ் அதிக அளவில் தொற்று ஏற்படுத்தக் கூடியதாகவும், வைரஸின் ஆல்பா மற்றும் காமா வகைகளை விட மிகவும் அச்சுறுத்தும் விதமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், எந்த நாடுகளில் எல்லாம் இந்த வைரஸ் மாறுபாடு கண்டரியப்பட்டுள்ளதோ, அந்த இடங்களில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், இது அதிக பரவுதலைக் கொண்டிருந்த போதிலும், இது டெல்டா மாறுபாட்டைப் போலவே சேதத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பதை தற்போது கணிக்க முடியவில்லை.

Also Read:   Paytm பயன்படுத்துகிறீர்களா? ரூ.50 கோடி cashback Offer!

இது தடுப்பூசி திறனை பாதிக்குமா?

மரபணு சோதனை மற்றும் மருத்துவ ஆய்வு தொடர்ந்து நடந்து வரும் வேளையில், லாம்ப்டா மாறுபாட்டின் கனமான பிறழ்வுகள் எளிதில் தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் தடுப்பூசி மூலம் இயக்கப்படும் மற்றும் இயற்கையான ஆன்டிபாடிகளையும் எதிர்த்து இது பரவக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இரண்டாவது அலைகளின் போது மற்றும் டெல்டா மாறுபாட்டுடன் போது நாம் கண்டது போன்ற அதிக அளவில் தொற்று பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

தற்போது, இதையெல்லாம் நிரூபிக்க, சாத்தியமா என்று அறிய மிகக்குறைந்த அளவிலேயே சான்றுகள் உள்ளன. மேலும், தடுப்பூசிகளும் பெரிய அளவில் அனைவரையும் சென்று சேரவில்லை. அதனால், ஆபத்துகளும், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆழமாக எடை போட வேண்டும்.

தொற்று அறிகுறிகளில் வித்தியாசங்கள் உள்ளதா?

லாம்ப்டா மாறுபாட்டின் பரவலின் மையமாக பெரு விளங்குகிறது. அது மட்டுமின்றி, கடந்த ஆண்டு முதல் அதிக தீவிரம் மற்றும் இறப்பு விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இறப்புகள் மற்றும் பாதிப்புகளின் பின்னணியில் மாறுபாடு வைரஸ் இருக்கிறதா? என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

எப்படி இருந்தாலும், தீவிரமான இருமல், அதிக காய்ச்சல், சுவை / வாசனையின் மாற்றங்கள், மூச்சுத் திணறல் மற்றும் உடல் வலி உள்ளிட்ட கோவிட் அறிகுறிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் மக்கள் பொதுவாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் லாம்ப்டா மாறுபாட்டில் தொற்று வீதம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் லாம்ப்டா மாறுபாடு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதா? நமக்கு பாதிப்பு ஏற்படுமா?

இதுவரை, லாம்ப்டா மாறுபாடு பாதிக்கப்பட்ட நபர்கள், இந்தியா அல்லது அண்டை நாடுகளில் யாரும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது ஒரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அதன் ஆபத்துகளை குறைவாக மதிப்பிடக் கூடாது. மேலும், மோசமான இரண்டாவது அலைக்குப் பின்னர் இந்தியா இப்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

எனினும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் கோவிட் தொற்றில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வது அவசியம்.
Published by:Arun
First published: