• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • கொரோனாவின் பேராபத்தான அழற்சி ஏன்? ரத்தம் உறைதல் ஏன்?

கொரோனாவின் பேராபத்தான அழற்சி ஏன்? ரத்தம் உறைதல் ஏன்?

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

கொரோனா வைரஸ் நம் உடலைத் தாக்கியவுடன் நுரையீரல் பகுதியில் அழற்சி ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல் ரத்தம் உறைதலால்தான் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

  • Share this:
    கொரோனா வைரஸ் நம் உடலைத் தாக்கியவுடன் நுரையீரல் பகுதியில் அழற்சி ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல் ரத்தம் உறைதலால்தான் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

    கொரோனா வைரஸுக்கு ரத்தம் உறைதலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டால் இதற்கான விடை கிடைக்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுவோரில் 30% நோயாளிகளுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

    கரோனா வைரஸ் உடலைத் தாக்கும்போது நம் உடலின் வெள்ளை அணுக்கள் அவற்றுடன் போராடுகின்றன இந்தப் போராட்டத்தின் இயல்பான ரியாக்‌ஷன் தான் ரத்தம் உறைதல் மற்றும் அழற்சியாகும். இதனால் உடலிலிருந்து பல வேதிப்பொருட்கள் வெளியேறுகின்றன.

    நம் உடலின் ரத்தக்குழாய் சுவர்கள் Endothelium எனும் திசுவால் ஆனதே. வைரஸ், பாக்டீரியா தாக்குதலினால் இந்த எண்டோதீலியம் திசு ஆங்காங்கே கிழிந்து விடுகிறது.

    உடலில் காயம் ஏற்படும் போது ரத்தம் உறைதல் என்பது மிகவும் இயற்கையான ஒரு செயல், ஏனெனில் ரத்தம் பெரிய அளவில் வெளியேறுவதை இது தடுக்கிறது. உடலின் பல வேதி எதிர்வினைகள் இதனை சாத்தியப்படுத்துகின்றன.

    இது ரத்தநாளங்களில் சில வேளைகளில் தற்காலிகமாக வந்து போவதோடு நீண்ட காலமாக தங்கி விடுவதும் உண்டு, இதனால் உடலின் பிறபகுதிகளுக்கு ரத்த ஓட்டம் பாதிப்படையும். சில வேளைகளில் இந்த ரத்தக்கட்டு வேறொரு இடத்துக்கு மாறும் இது எம்போலஸ் த்ராம்பஸ் என்று பெயர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஆங்காங்கே ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, இரண்டாம் - மூன்றாம் வாரத்தில். நுரையீரல் ரத்தக் குழாய்களில் உறைவு ஏற்படுவது (Pulmonary Thrombo embolism) மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.

    இந்த எம்போலஸ் இருதயம், நுரையீரல், மூளைக்குச் செல்லும்போது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. கொரோனாவை பொறுத்தவரை அது எண்டோதீலிய செல்களைத் தாக்கும்போது ரத்தக்குழாய்கள் புரோட்டீன்களை வெளியிடும். இது ரத்தக்கட்டை உருவாக்குகிறது. அதனால்தான் கொரோனா வந்தவுடன் ஆர்.டி.பிசிஆர் டெஸ்ட்டுடன் ரத்தபரிசோதனை செய்து சி-ரியாக்டிவ் புரோட்டீன் அதாவது சிஆர்பி சோதனை மேற்கொள்வர்.

    நுரையீரலின் சிறுசிறு ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்படும்.

    ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. சி.டி. ஸ்கேனில் நுரையீரல் பாதிப்பு என அளவிடுவது, இந்த ரத்த உறைதலால் ஏற்படும் பாதிப்பையே. ஆகவே ரத்த உறைவுக்கு எதிரான மருந்துகள் கொடுக்கப்படும்.

    மார்புக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைதல் நிகழ்ந்தால் அது மாரடைப்புக்கும், மூளைக்குச்செல்லும் ரத்தக்குழாய்களில் தீவிர ரத்தக் கட்டு ஸ்ட்ரோக்கிற்கும் இட்டுச் செல்கின்றன.

    இதனையடுத்து ரத்த உறைவைத் தடுக்க ரத்தம் நீர்த்துப் போவதற்கான மருந்துகள் கொடுக்கப்படும், இருதய நோயாளிகள் பலர் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு கொரோனா வந்தாலும் சிலவேளைகளில் மரணம் நிகழாமல் கூட தப்பித்துள்ளனர். காரணம் ஆஸ்பிரின் ரத்தத்தை கட்டு ஏற்படாமல் நீர்க்க வைத்திருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனாலும் சில வேளைகளில் நுரையீரல் ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்தக் கட்டு அல்லது ரத்தம் உறைதல் புரியாத புதிராக இன்னமும் கூட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: