இந்திய ராணுவத்தில், ஒப்பந்த முறை மூலம் வீரர்களை பணியமர்த்த இந்திய அரசு தயாராகி வருகிறது. இதன்மூலம், பாதுகாப்புத் துறையில் ஆயுதப்படைப் பணியாளர்களுக்கான ஓய்வூதிய செலவினங்கள் பெருமளவு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
'Tour of Duty' என்றழைக்கப்படும் இத்திட்டம் தற்போது முழு அளவில் தயாராகி கொண்டிருப்பதாகவும், உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து
ஆயுதப்படை பணியாளர்களின் (அதிகாரிகள் தவிர்த்து ) சேர்க்கையும் இத்திட்டத்தின் கீழ் அமையும் என்றும் கூறப்படுகிறது. திட்ட முன்மொழிவின் படி, 25% படை வீரர்கள் 3 ஆண்டுகால ஒப்பந்த முறையின் கீழும், 25% வீரர்கள் 5 ஆண்டுகால ஒப்பந்த முறையின் கீழும் பணியமர்த்தப்பட உள்ளனர். மீதமிருக்கும் 50% வீரர்கள், பணி ஓய்வு வயது வரும் வரை பணியாற்றவுள்ளனர்.
காரணம் என்ன?
மத்திய அமைச்சகத்தில் அதிக அளவிலான பணியாட்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் கொண்டிருக்கிறது.
Service |
அதிகாரிகள் |
எண்ணிக்கை . |
% of Total |
ராணுவம் |
Officers |
42,913 |
3.0 |
சிப்பாய்கள் (PBOR) |
11,85,146 |
82.4 |
மொத்தம் |
12,28,059 |
85.4 |
கப்பல் படை |
அதிகாரிகள் |
10,979 |
0.8 |
மாலுமிகள் |
58,073 |
4.0 |
மொத்தம் |
69,052 |
4.8 |
விமானப்படை |
அதிகாரிகள் |
12,159 |
0.8 |
ஏர்மென் |
1,29,447 |
9.0 |
மொத்தம் |
1,41,606 |
9.8 |
மொத்த அதிகாரிகள் |
66,051 |
4.6 |
வீரர்கள் |
13,72,666 |
95.4 |
மொத்த பணியாட்கள் |
14,38,717 |
100.0 |
தரவுகள்: IDSA (India’s Defence Expenditure: A Trend Analysis)
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாதுகாப்புத் துறையில் உள்ள சீருடை பணியாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 14,38,717 ஆக உள்ளது. இது, அனுமதிக்கப்பட்ட பணியாட் தொகையை விட (15,15,878) ஐந்து சதவிகிதம் குறைவாகும். ஒட்டுமொத்த பணியாட் தொகுதியில், இராணுவத்தில் 85 சதவிகிதனரும், விமானப்படையில் 10% னரும், கடற்படையில் 5% வினரும் உள்ளனர். மேலும், 2017- 18 ஆண்டு நிலவரப்படி, தற்போது சிவில் பாதுகாப்பு பிரிவில் 3,98,422 பணியாட்கள் உள்ளனர். இதில், அனுமதிக்கப்பட்ட தொகை எண்ணிக்கை 5,85,476. கிட்டத்தட்ட 35% பணியிடங்கள் காலியாக உள்ளன.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 33,09,430 ஆகா உள்ளது. இது, மத்திய அரசு ஓய்வூதியப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 51% ஆகும். அதாவது, பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் 65% சதவிகிதம் தனியாள் சம்பளம் மட்டும் கொடுப்பனவுகள், ஓய்வூதியம், இலவச வைத்திய வசதிகள்,உணவக வசதிகள், காப்புறுதி வசதிகள், வீடு அல்லது வாகனத்திற்கான கடன் வசதிகள் போன்ற காரணங்களுக்கு செலவிடப்படுகிறது.
இதன் காரணமாகவும், ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்துவது, மூலதனச் சொத்தை உருவாக்குவது (defence acquisition), ஆராய்ச்சி மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி போன்றவைகளுக்கான செலவீனங்கள் குறைந்து காணப்படுகிறது.
2022-23 மத்திய நிதிநிலை அறிக்கையில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மொத்த பட்ஜெட்டில் 13.31 சதவீதம். இதில் பாதுகாப்புத்துறை ஓய்வூதியத்திற்கு ரூ.1.19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டு பாதுகாப்புத்துறை ஒதுக்கீட்டை விட, இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.46,970 (9.82 சதவீதம்) கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாதுகாப்பு படைகளின் நவீனமயமாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனியாளர் சம்பளம், ஓய்வூதியம் போன்ற செலவீனங்களை குறைக்க வேண்டிய தேவை அரசுக்கு எழுந்துள்ளது. இதன்காரணமாக, ஒப்பந்த முறையில் வீரர்களை பணியமர்த்த பாதுகாப்புத் துறை முடிவெடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.