Explainer : தோல்வி பயம் இருக்கு... ஆனால்? சிக்னல் செயலி நிர்வாக இயக்குநர் பிரையன் ஆக்டன் ஓபன் டாக்!

சிக்னல் ஆப்

வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கிய பிரையன் ஆக்டன், மார்க் சூகர்பெர்க்குடன் ஏற்பட்ட மோதலால் அந்த நிறுவனத்தில் இருந்து 2017ம் ஆண்டு வெளியேறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
யூசர் டேட்டாவை பாதுகாப்புக்கு சிக்னல் செயலி அதிக முன்னுரிமை கொடுப்பதாக அந்த செயலியின் நிர்வாக இயக்குநர் பிரையன் ஆக்டன் கூறியுள்ளார்.

வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கிய பிரையன் ஆக்டன், மார்க் சூகர்பெர்க்குடன் ஏற்பட்ட மோதலால் அந்த நிறுவனத்தில் இருந்து 2017ம் ஆண்டு வெளியேறினார். பின்னர், சிக்னல் பவுண்டேஷன் உருவாக்கியிருந்த சிக்னல் செயலியில் 50 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்த அவர், வாட்ஸ்ஆப் -க்கு மாற்றாக சிக்னல் செயலியை பிரபலப்படுத்தினார். அண்மையில் வாட்ஸ் ஆப் செயலி கொண்டுவந்த பிரைவசி பாலிசி, தனிநபர் டேட்டாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் ஆப் யூசர்கள் உடனடியாக சிக்னல் செயலிக்கு மாறத்தொடங்கினர்.

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பலரும் சிக்னல் செயலிக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்தியாவில் சிக்னல் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து. இந்நிலையில், சிகனல் செயலியின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்தும், வாட்ஸ் ஆப் பிரைவசி பாலிசி குறித்தும் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பிரையன் ஆக்டன் கொடுத்த பதிலை பார்க்கலாம்.

1. சிக்னல் செயலியை ஜனவரி 1 முதல் 9ம் தேதிக்குள் இந்தியாவில் மட்டும் 1.8 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும் பதிவிறக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு எலான் மஸ்க் -கின் ஆதரவும் காரணம் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக, அந்த டிவீட்டிற்கு பிறகு சிக்னல் செயலியின் பதிவிறக்கம் அதிகரித்ததை ஒப்புக்கொள்கிறோம். அதற்காக, எலான் மஸ்க் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பலருக்கு நாங்கள் நன்றி கடமைப்பட்டுள்ளோம்.

2. நீங்கள் உருவாக்கிய வாட்ஸ் ஆப் செயலியின் நீண்டகால நோக்கம் என்னவாக இருந்தது?

வாட்ஸ் ஆப் செயலி தனித்து இயங்கக்கூடிய அளவுக்கு போதுமான வருவாயை ஈட்டியது. இருப்பினும் அது அவர்களுக்கு தெரியவில்லை அல்லது புரியவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப் செயலியை வாங்குவதற்கு முன்பு கூட கணிசனமான வளர்ச்சியில் வாட்ஸ் ஆப் இயக்கிங் கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் மாற்று வழியில் சிந்திக்க தொடங்கினார்கள். பேஸ்புக் நிறுவனம் வருவாயை ஈட்டுவதற்காக செயல்படுகிறது. விளம்பரத்தையும், வணிக உறவுகளை அவற்றுக்கு தேவைப்படுவதால், வாட்ஸ் ஆப்-ஐ அதற்காக பயன்படுத்த தொடங்கினார்கள். வணிக நோக்கத்துக்கு வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை பொறுத்தவரையில் தகவல்கள் தொடர்புகள் பாதுகாப்பானதாக, எளிதானதாக, நம்பகமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

3. வாட்ஸ் ஆப் செயலியை நிர்வகிக்க நீங்கள் வைத்திருந்த பணமாக்குதல் திட்டம் நீண்டகாலத்துக்கு போதுமானதாக இருந்ததா?

நிச்சயமாக இருந்தது. நீங்கள் நம்புகிறீர்களோ? இல்லையோ?. நீங்கள் புத்திசாலி என்றால், பொறியியலில் திறமையானவர் என்றால், செலவுகளை கட்டுபடுத்த தெரியும் என்றால் இது சாத்தியம். மற்றவர்கள் நினைப்பதுபோல் இந்த செயலியை இயக்குவதற்கு பெருந்தொகை செலவாகாது. எங்களின் திட்டப்படி, ஒவ்வொருவரிடமும் வசூலிக்கும் ஒரு டாலர் கட்டணத்தை வைத்து வாட்ஸ் ஆப் செயலியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்க முடியும்.

4. வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி அல்லது பேஸ்புக்குடன் அந்த செயலிக்கு இருக்கும் தொடர்பு என்ன?

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பிரைவசி பாலிசி சேவையின் அடிப்படையில் சுவாரஸ்யமானது என்றாலும் உண்மையில் அது மிகவும் சிக்கலானது. நீங்கள் கவனமான பிரைவசி பாலிசியை படிக்க வேண்டும். ஆழ்ந்து படிக்கும்போது மட்டுமே உங்களால் அதனை புரிந்து கொள்ள முடியும். மிகச்சிறிய ஊசியின் வழியே நூலை கோர்த்து பணமாக்க திட்டமிட்டுள்ளது. உண்மையில் அதில் எனக்கு விருப்பமில்லை. சிக்னல் செயலியை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களின் டேட்டா குறித்து பயப்பட வேண்டியதில்லை. பிரைவசி பாலிசி நேரடியானதாக இருக்கிறது. சிக்னலில் உங்களின் டேட்டா எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் யூசர்களுக்கு துளியும் இருக்க தேவையில்லை.

5. தனிநபர் டேட்டாவை எடுப்பதன் மூலம் வாட்ஸ் ஆப் செய்கிறது? டேட்டா பிரைவசி தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உங்களின் மனோ நிலைக்கு ஏற்ப வணிகத்தை இயக்க முடியும். மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கேற்ப தகவல்கள், விளம்பரங்கள் இடம்பெறும். சோகமாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கேற்ப மெசேஜ்கள் உங்களுக்கு காண்பிக்கும். சில நேரங்களில் உங்களை அவை ஆச்சரியப்படுத்துபவையாக இருக்கும். உங்கள் அனுமதியுடன் உங்கள் தகவல்களை மறைமுகமாக சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். தனிநபர் பிரைவசியை கொண்டு வியாபாரம் செய்வதை நான் விரும்பவில்லை. முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். சிக்னல் செயலியில் உங்கள் தரவுகள் உங்களைத் தவிர வேறுயாரும் பயன்படுத்த முடியாது. இது மிக மிக முக்கியமான அம்சம்.

6. வாட்ஸ் ஆப்- லிருந்து விலகி சிக்னல் செயலியில் பந்தயம் கட்டி பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க வேண்டுமென்றால், நிதி மூலதனம் அவசியம் தேவைப்படும். அதற்காக என்ன செய்துள்ளீர்கள்?

இப்போது, டேட்டா பிரவைசியில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறோம். நீங்கள் சொல்வதுபோல் தொலைநோக்கு பார்வைகளும் இருக்கிறது. மக்களின் ஆதரவை நாடுவதை விரும்புகிறோம். நன்கொடைகள் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து, நீண்ட கால சேவையை வழங்க முடியும் என நம்புகிறோம்.

Also read... சிக்னல் செயலியில் புதிய மாற்றம் - அப்டேட் வெர்சன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த வசதி!

7. டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

டெலிகிராம் செயலி, பணக்குமாக்குவதற்காக எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடப்போகிறார்கள் என்பது குறித்து தெளிவான திட்டம் ஏதும் இல்லை. வாட்ஸ் ஆப் செயலியைப் போல் டெலிகிராம் செயலியும் வணிக நோக்கம் கொண்ட ஒன்றுதான். இருப்பினும் ஒரு நிச்சயமற்ற தன்மை தெரிகிறது. இவற்றில் இருந்து சிக்னல் செயலி முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. டெலிகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகள் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு வாழ்த்துகள். ஆனால், அவர்கள் தங்களின் போட்டியாளர்கள் என்பது மறுப்பதற்கில்லை.

8. சிக்னல் செயலியின் தோல்வி குறித்து உங்களுக்குள் பயம் இருக்கிறதா?

உண்மையாக சொல்லவேண்டுமென்றால் உள்ளது. தொழில்நுட்ப துறையில் நீங்கள் ஒருபோதும் மன நிறைவுடன் இருக்க முடியாது. எப்போதும், கடுமையான போட்டி இருந்து கொண்டே இருக்கும். எங்களுக்கும் இருக்கிறது. தற்போது, வெளிப்படையாக செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. யூசர்கள் விரும்பும் அம்சங்களை உருவாக்கவும், அவர்களின் தகவல் தொடர்பு மற்றும் டேட்டாவை பாதுகாக்கவும் நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். இவ்வாறு பிரையன் ஆக்டன் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: