காலரா முதல் கொரோனா வைரஸ் வரை - தொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்?

காலரா முதல் கொரோனா வைரஸ் வரை

இதற்கு காலரா, பிளேக், ஸ்பானிஷ் ஃப்ளு உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்கள் அதனால் ஏற்பட்ட பேரழிவுகள் வரலாற்றில் நமக்கு சான்றாக உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
21-ம் நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் அசுர வளர்ச்சி பெற்றுள்ள நவீன காலத்திலேயே கோவிட்-19 என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ் உலக நாடுகளை, மனித குலத்தை அச்சுறுத்தி பல மாதங்கள் வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது என்பதை 1 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.

ஆனால் பல நூறு ஆண்டுகளாகவே இது மாதிரியான தொற்றுகள் வருவதும், மனித குலத்தை அச்சுறுத்தி லட்சக்கணக்கிலான உயிர்களை குடிப்பதும் வழக்கமாகவே இருந்துள்ளது. இதற்கு காலரா, பிளேக், ஸ்பானிஷ் ஃப்ளு உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்கள் அதனால் ஏற்பட்ட பேரழிவுகள் வரலாற்றில் நமக்கு சான்றாக உள்ளன. இதனிடையே சின்மாய் தும்பே என்பவர் எழுதியுள்ள the age of pandemics - தொற்றுநோய்களின் வயது என்ற புத்தகம் இது பற்றி விரிவாக பேசியுள்ளது.

சின்மாய் தும்பே இந்திய மேலாண்மை நிறுவனம் அகமதாபாத்தில் (ஐ.ஐ.எம்-ஏ) பொருளாதாரத் துறையில் பணிபுரிகிறார். இவர் தனது புத்தகத்தில் COVID-19 தொற்று நம்மை வீட்டிலேயே முடக்கி போட்டது. எவ்வாறாயினும், நமது கடந்த கால உண்மைகள் வேறு கதையை சொல்கின்றன என்று கூறி நாட்டை இதற்கு முன் பாதித்த தொற்று நோய்கள் பற்றி கூறி உள்ளார்.

1817 மற்றும் 1920-க்கு இடையில் மக்கள் தொற்றுநோய்களின் யுகத்தில் வாழ்ந்தார்கள். இந்த காலத்தில் இந்த காலரா, பிளேக் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட தொற்றால் உலக மக்கள் தொகை குறைக்கப்பட்டது. உலகளவில் சுமார் 70 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். இடைவிடாத போரில் ஏற்படும் இறப்புகளை விட அதிக அளவிலான உயிரிழப்புகளாக இருந்தன. இந்தியாவில் மட்டும் சும்மர் 40 மில்லியன் பேர் இறந்தனர். ஆனால் இந்த நோய்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நம் நாட்டில், தும்பே குறிப்பிடுவதைப் போல பழைய தொற்று வரலாறுகளை பற்றி நாம் அதிகம் நினைவில் கொள்ளவும் இல்லை.

இந்த மறதிக்கான ஒரு முக்கிய காரணம் என்னவெனில், இன்ஃப்ளூயன்ஸா தொற்றுக்கு (ஸ்பானிஷ் காய்ச்சல்) பிறகு அதாவது சுமார் 100 வருடங்களுக்கு பிறகு இந்த அளவிலான பேரழிவை உலகம் தற்போது தான் பார்க்கிறது. மருத்துவ வளர்ச்சி இந்தியா மற்றும் ஏனைய நாடுகளை இதுவரை பேரழிவுகளிலிருந்து தப்பிக்க வைத்துள்ளன. ஒருவேளை மருத்துவத்துறையின் இந்த அசுர வளர்ச்சி மனிதகுலத்திற்கு ஆணவத்தை தந்துவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது. ஏனினில் கற்பனை நம்பிக்கைகளுடன் யதார்த்தம் என்றும் ஒத்து போகாது. அதை தான் தற்போது கோவிட்-19 நிரூபித்துள்ளது.

Also read... இந்தியாவில் 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது!

உலகளாவிய நிகழ்வுகளின் வரலாறுகள் ஒரு இந்திய கண்ணோட்டத்தில் சொல்லப்படுவது பெரும்பாலும் இல்லை. எனவே இந்திய மக்களின் தொற்று வரலாற்று மறதிக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் தும்பே. மேற்கில் எழுதப்பட்ட வரலாறுகள் இங்கே இருந்தாலும், இந்த பேரழிவுகள் தொழில்துறை, ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவ எதிர்ப்பு சக்திகளின் மிகவும் அறியப்பட்ட சக்திகளிலிருந்து விலகவில்லை. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் வலையமைப்புகள் வழியே உலகம் முழுவதும் வேகமாக பரவின.

நம் நாட்டில் ஆங்கிலேயே காலனித்துவ அரசு அதன் உணர்திறனுக்காக அறியப்படவில்லை. இது தொற்று நோய்களை எதிர்த்து எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் பிரதிபலித்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பும் இந்தியர்களின் சுயராஜ்ய விருப்பத்தை தூண்டி பால் கங்காதர் திலக், சர்தார் படேல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நம் காந்தி கூட முக்கியத்துவம் மற்றும் புகழ் பெற காரணமானது. மருத்துவ வசதி இல்லாத காலத்தில் பரவிய தொற்றால் மக்களின் சராசரி வயது 25 ஆக இருந்தது. இப்போதோ 60 வயது.

ஆனால் கோவிட்-19 பேரழிவு நம்முடைய பலவீனங்களை வெளிக்காட்டி விட்டது. எனவே பழைய வரலாற்றை நினைவுபடுத்தி அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது நல்லது. தொற்றுக்கு பெண்கள் அதிகளவில் இறந்தது எப்படி, குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் சுகாதாரமான குடிநீர் கூட கிடைக்காமல் தொற்றால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக மாண்டது எப்படி என்பது பற்றியெல்லாம் நமக்கு நினைவூட்டும் இந்த காரணத்தினால் தும்பேவின் the age of pandemics அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: