ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழு- மத்திய அரசு அறிவிப்பு !

மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழு- மத்திய அரசு அறிவிப்பு !

மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய குழு

மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய குழு

மதம் மாறியவர்களுக்கு SC அந்தஸ்து வழங்குவதன் தகுதிகள், பிற SC சமூகங்கள் மீது இத்தகைய நடவடிக்கையின் தாக்கங்கள் மற்றும் மதமாற்றத்தால் ஏற்படும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை இந்த குழு ஆராயும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு 'பட்டியலிடப்பட்ட சாதி' அந்தஸ்துடன் சலுகைகளை  வழங்குவது தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க மறுத்தது.  பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர். இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் ஐஏஎஸ் (ஓய்வு) ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் யுஜிசி உறுப்பினர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தலித் இனத்தவர்களில் மதம் மாறியவர்களுக்கு SC அந்தஸ்து வழங்குவதன் தகுதிகள், பிற SC சமூகங்கள் மீது இத்தகைய நடவடிக்கையின் தாக்கங்கள் மற்றும் மதமாற்றத்தால் ஏற்படும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை இந்த குழு ஆராயும்.

அரசியலமைப்பின் 341 வது பிரிவின் கீழ் ….

ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் 'இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை' அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

மத்திய அரசு வெளியிடப்போகும் டிஜிட்டல் நாணயங்கள்... அம்சம், பயன்பாடு குறித்த வரைவு வெளியீடு!

முந்தைய அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட கமிஷன்கள்:

நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.

இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது.

பூமியில் 5 பெருங்கடல்கள் இருப்பது தெரியும்... ஆறாவது கடல் எங்கு இருக்கு தெரியுமா?

மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது.

சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை.

தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

Published by:Ilakkiya GP
First published:

Tags: Central government, Scheduled caste, Supreme court