ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

தீபாவளி 2022: மாசுபாட்டிற்கு பசுமை பட்டாசுகள் தான் புதிய மாற்றா? அவற்றை எப்படி அடையாளம் காண்பது?

தீபாவளி 2022: மாசுபாட்டிற்கு பசுமை பட்டாசுகள் தான் புதிய மாற்றா? அவற்றை எப்படி அடையாளம் காண்பது?

பசுமை பட்டாசுகள்

பசுமை பட்டாசுகள்

அறிக்கையின்படி, பசுமை பட்டாசுகள் வழக்கமானவற்றை விட 30% குறைவான மாசுபாட்டை வெளியிடுகின்றன. பசுமைப் பட்டாசுகள் வழக்கமான 160 டெசிபல்களில் இருந்து சுமார் 110 டெசிபல்கள் வரை குறைந்த சத்தத்தை ஏற்படுத்துகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

டெல்லி அரசு ஜனவரி 2023 வரை அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ள நிலையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் இந்த தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதித்துள்ளன.

தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) காற்றின் தரம் மிதமான அல்லது மோசமாக இருக்கும் நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே அனுமதிக்கிறது. பசுமை பட்டாசுதான் புதிய மாற்றா ? இது காற்று மாசுபாட்டை அதிகரிக்காதா? என்ற கேள்விகளுக்கு பதில் காண்போம்

பசுமை மற்றும் பாரம்பரிய பட்டாசுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு:

பாரம்பரிய பட்டாசுகளைப் போல, பசுமை பட்டாசுகளில் அலுமினியம், பேரியம், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது கார்பன் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு சுகாதார அபாயங்கள் மற்றும் மனிதர்களுக்கு அச்சுறுத்தல்களை குறைக்கிறது.

விதி மீறி பட்டாசு வெடித்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை கமிஷனர் அறிவிப்பு!

ஒரு அறிக்கையின்படி, பசுமை பட்டாசுகள் வழக்கமானவற்றை விட 30% குறைவான மாசுபாட்டை வெளியிடுகின்றன. பசுமைப் பட்டாசுகள் வழக்கமான 160 டெசிபல்களில் இருந்து சுமார் 110 டெசிபல்கள் வரை குறைந்த சத்தத்தை ஏற்படுத்துகின்றன.

பாரம்பரிய பட்டாசுகள் :

பாரம்பரிய பட்டாசுகள் வெள்ளை நிறத்திற்காக அலுமினியம், மெக்னீசியம் மற்றும் டைட்டானியம் போன்ற ரசாயனங்களை, ஆரஞ்சு நிறத்திற்கு கார்பன் அல்லது இரும்பு பயன்படுத்துகிறது.

இதேபோல், மஞ்சள் நிற ஒளி வருவதற்கு சோடியம் கலவைகள், நீலம் மற்றும் சிவப்பு நிலத்திற்கு செப்பு கலவைகள் மற்றும் ஸ்ட்ரோண்டியம் கார்பனேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பசுமை நிறத்திற்கு பேரியம் மோனோ குளோரைடு உப்புகள், பேரியம் நைட்ரேட், பேரியம் குளோரேட் பயன்படுத்துகிறது.

இந்த இரசாயனங்களால் ஏற்படும் சேதம்:

பட்டாசு வெடிப்பதால் உருவாகும் அடர் புகை,  சிறு குழந்தைகளின் சுவாச மண்டலத்தை பாதிக்கும். கண், மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். தீங்கு விளைவிக்கும் புகைகள் கருச்சிதைவுக்கு கூட வழிவகுக்கும்.பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வண்ணங்களில் தீங்கு விளைவிக்கும் மற்றும் கதிரியக்க கூறுகள் உள்ளன. இது மக்களுக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

பெருங்களத்தூர தாண்டுவ நீ..? இணையத்தில் வைரலாகும் தீபாவளி மீம்ஸ்

பட்டாசுகளில் உள்ள ஈயம் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதே நேரத்தில் தாமிரம் சுவாச பாதை எரிச்சலை தூண்டுகிறது. சோடியம் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் மெக்னீசியம் மன உமிழும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பசுமை பட்டாசுகள்:

பசுமை பட்டாசுகளில் இந்த ரசாயனங்கள் மிக குறைந்த அளவுகளில் பயன்படுத்த படுகிறது. அதோடு புகையை குறைக்கும் வழிகளும் உள்ளிடப்படுகிறது.பசுமை பட்டாசுகள் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட இடங்களில் கிடைக்கும். அவை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் (CSIR) தயாரிக்கப்படுகின்றன.

பசுமை பட்டாசுகளை எவ்வாறு கண்டறிவது?

பசுமை பட்டாசுகளை CSIR-NEERI மற்றும் PESO இன் தனித்துவமான பசுமை வண்ண லோகோ மற்றும் விரைவான QR குறியீடு மூலம் அடையாளம் காணலாம். கூடுதலாக, பசுமை பட்டாசுகளில் மூன்று வகைகள் உள்ளன:

SWAS (பாதுகாப்பான நீர் வெளியீடு): இது காற்றில் உள்ள நீராவியை வெளியிடுவதன் மூலம் தூசியை அடக்குகிறது. இதில் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கந்தகம் இல்லை, மேலும் 30% குறைவான துகள்களை வெளியிடும்.

STAR (பாதுகாப்பான தெர்மைட் கிராக்கர்): இதில் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கந்தகம் இல்லை, குறைவான துகள்களை வெளியிடுகிறது மற்றும் ஒலி தீவிரத்தை குறைக்கிறது.

SAFAL : இது அலுமினியத்தின் குறைந்தபட்ச பயன்பாட்டைக் கொண்டுள்ளது, அதற்கு பதிலாக மெக்னீசியம் அதிகமாக உள்ளது. பாரம்பரிய பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது இது குறைந்த ஒலியை உருவாக்குகிறது.

பசுமை பட்டாசுகளை தெருவோர வியாபாரிகளிடம் வாங்காமல் உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் வாங்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Deepavali, Diwali, Diwali festival, Fire crackers