Explainer : கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? பெற்றோர்களின் அச்சங்களுக்கான விளக்கங்கள்..!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் வழிமுறைகளை குழந்தைகளையும் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன், நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு அவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • Share this:
  • Dr Niket Rai MD, Associate Professor, Maulana Azad Medical College
கொரோனா வைரஸ் முதல் அலை முதியவர்களை அதிகளவில் பாதித்தது. இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரும், இளைஞர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். 2 அலையில் குழந்தைகளிடையே பாதிப்பு காணப்பட்டாலும், மிக மிக சொற்ப அளவிலேயே இருந்தது. ஆனால், 3வது அலையில் 18 வயதுக்குட்பட்டோரை அதிகளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் முந்தைய அலைகள் ஏன் குழந்தைகளை பாதிக்கவில்லை? அடுத்த அலை அவர்களை பாதிக்கும் என கூறப்படுவதற்கான காரணம் என்ன? கொரோனா வைரஸ் குறித்து குழந்தைகள் அச்சம் கொள்ளத் தேவையில்லையா? போன்ற பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் நாள்தோறும் இருக்கின்றன. இதற்கான விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

1. இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிவயற்றில் இருக்கும் நாசோபார்க்கன்ஸ் (nasopharynx) உயிரணுக்களில் இருக்கும் ACE2 என்சைம் உடன் பிணைப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரலில் இருக்கும் எபிதீலியம் மற்றும் ACE2 ஆகியவை வயதுக்கு ஏற்றார்போல் செயல்படுபவை என்பதால், குறைவான வயதுடையவர்களை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்குகின்றன. வயதானவர்களின் உடலில் ACE2 என்சைமுக்குள் கொரோனா நுழையும்போது, அவற்றின் ஆற்றலைப் பொறுத்து பாதிப்பு ஏற்பட்டு மற்ற நோய்களுக்கும் வித்திடுகின்றன.

2. ரத்த நாளங்களின் உட்புற அடுக்கான எண்டோடெலியம் மற்றும் குழந்தைகளின் ரத்த உறைவு தன்மை என்பது வயது மூத்தவர்களிடம் இருந்து முழுவதும் வேறுபட்டது. இவை மாரடைபு மற்றும் பக்கவாதம் போன்ற த்ரோம்போடிக் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை குறைக்கின்றன.



3. ஏற்கனவே இருக்கும் மனித கொரோனா வைரஸூக்கு எதிரான ஆன்டிபாடிகள், பெரும்பாலனோருக்கு குழந்தை பருவத்திலேயே உருவாகிவிடுகிறது. கொரோனா வைரஸின் திரிபுகள் இதுபோன்று பரவ தொடங்கும்போது, உடலில் இருக்கும் அன்டிபாடிகள் எளிதாக கொரோனா வைரஸ் பாதிக்கும் பகுதியாக மாறிவிடுகின்றன. இந்த ஆன்டிபாடிகள் குழந்தைகளுக்கு இருக்காது என்பதால், அவர்களை கொரோனாவின் உருமாறிய திரிபு அதிகம் பாதிக்காது.

4. வயதாவது என்பது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலதின் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கிறது என்பதன் அறிகுறி. குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, வயதானவர்களுக்கு வலுவான உள்ளார்ந்த தகவமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும்.

5. குழந்தைகளுக்கு இதயம் மற்றும் நீரிழிவு நோய்கள், சிறுநீரக பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பதில்லை. வயதானவர்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் கொரோனா வைரஸ் பாதிக்கும்போது அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.



6. நோய் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்றத்துக்கு வைட்டமின் டி மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கிறது. வயதானவர்களிடம் வைட்டமின் டி குறைப்பாடு இருப்பதால், திரிபு கொரோனா வைரஸ் எளிதாக தாக்குகிறது.

7. சுவாச பாதைகள் மற்றும் குடல் இயக்க பாதைகள் குழந்தைகளுக்கு சரியான தகவமைப்பில் அமைந்திருக்கும். அவை வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பில் போராடுவதற்கு உதவும். ஆனால், வயதானவர்களுக்கு இவை வலுவாக இருக்காது என்பதால், கொரோனா பாதிப்பை எதிர்கொள்கின்றன.

Coronavirus : கொரோனா ரிசல்ட் பாசிடிவா? உடனே இந்த 10 டெஸ்ட் எடுத்துவிடுங்கள்..!

8. மெலடோனின் ஹார்மோன்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடன்களுக்கான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை. இவை குழந்தைகளிடம் அதிகம் இருப்பதுபோல் வயதானவர்களிடம் இருக்காது.



9. குழந்தைகள் பி.சி.ஜி மற்றும் சில தடுப்பூசிகளை அண்மையில் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், அவை இதுபோன்ற தொற்றுகளிடம் இருந்து பாதுகாப்பதில் சிறியளவிலாவது பங்காற்றும் என கருதப்படுகிறது.

10. பயணம், வேலை பளு போன்றவை குழந்தைகளுக்கு இருக்காது. வயதானவர்களுக்கு இவை தவிர்க்க முடியாது என்பதால் அவர்களை கொரோனா வைரஸ் எளிதாக தாக்குகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

இப்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா வைரஸ் வழிமுறைகளை குழந்தைகளையும் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன், நெரிசல் நிறைந்த பகுதிகளுக்கு அவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருப்பது மட்டுமே தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி.

 
Published by:Sivaranjani E
First published: