ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

10 ராணுவ வீரர்களின் உடலை வைத்து யார் என அடையாளம் காணமுடியவில்லை... டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க முடிவு... அப்படி என்றால் என்ன?

10 ராணுவ வீரர்களின் உடலை வைத்து யார் என அடையாளம் காணமுடியவில்லை... டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க முடிவு... அப்படி என்றால் என்ன?

டிஎன்ஏ பரிசோதனை என்றால் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

டிஎன்ஏ பரிசோதனை என்றால் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

டிஎன்ஏ பரிசோதனை என்றால் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

  • 2 minute read
  • Last Updated :

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேரின் உடல்கள் தீவிர ஆய்வுக்கு பின்னரே அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 4 உடல்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த காட்டேரி பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 4 பேரில் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 80% தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் 9 பேரின் உடல்கள் இருந்த நிலையில் 4 பேரின் உடல்கள் சிதறிக் கிடந்தன. 4 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்த நிலையில் சேகரிக்கப்பட்டதால் உடல்களை அடையாளம் காண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர பரிசோதனைக்குப் பின்னரே எலும்புகளை வைத்து ஆண் மற்றும் பெண் என உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக எலும்பு மற்றும் ஸ்கேன் சோதனைக்குப் பிறகு 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எலும்பு, முடி ஆகியவற்றை டிஎன்ஏ சோதனை செய்வதன் மூலம் வயதை கணிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எலும்புகளை வைத்து இறந்தவர் ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் செல்வக்குமார் கூறும்போது, Deoxyribonucleic acid எனப்படும் டிஎன்ஏ ஒவ்வொரு உடலில் தனித்துவத்துமாக இருப்பதாகும். சிவப்பணுக்கள் தவிர உடலில் எல்லா செல்களிலும் இந்த டிஎன்ஏ உள்ளது.

இந்த டிஎன்ஏவை உயிரோடு இருப்பவரிடமிருந்தும் எடுக்க முடியும். இறந்தவர் உடலிலிருந்தும் எடுக்க முடியும். ரத்தம், தசை, எலும்பு, முடி, பல், வியர்வை என எல்லாவற்றிலும் டிஎன்ஏ உள்ளது.

உயிரோடு இருப்பவரிடமிருந்து பொதுவாக ரத்த மாதிரிகளே சேகரிக்கப்படும். இறப்பின் தன்மை பொறுத்து இறந்தவர் உடலிலிருந்து மாதிரிகளை எடுக்க முடியும்.

உடல் கருகி இறந்திருந்தால் பொதுவாக கடவாய் பல்லின் pulp எனப்படும் பகுதியை எடுக்கலாம். ஏனென்றால் அது எளிதில் சேதமடையாது. உடல் தசைகள் ப்ரோடீனால் ஆனது. எனது அவை எரியும் போது சேதமடைந்திருக்கும்.

எலும்புகள் சேதமடையாமல் இருந்தால் எலும்பு மஜ்ஜையிலிருந்தும் டிஎன்ஏ எடுக்கலாம்.

ஒரு செல்லின் மையக்கருவில் ( nucleus) நூல் இழை போன்ற க்ரோமோசோம்கள் இருக்கும். அந்த க்ரோமோசோனின் உட்பகுதி தான் டிஎன்ஏ. இந்த டிஎன்ஏவை உடலின் மாதிரிகளிலிருந்து எடுத்து முறையாக பதப்படுத்தி அதன் அமைப்பு எவ்வாறு உள்ளது என ஆய்வகத்தில் பரிசோதித்து பார்க்க முடியும். பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாதிரி எந்தவித சேதம் இல்லாமல் அனுப்ப வேண்டும்.

அடையாளம் தெரியாத இறந்த நபர் யார் என கண்டறிய அவரது பிள்ளை அல்லது பெற்றோரின் மாதிரிகள் எடுத்தால் துல்லியமான முடிவுகள் கிடைக்கும்.

இரண்டு மாதிரிகளின் டிஎன்ஏ அமைப்புகளை கண்டறிந்து அவை ஒன்றாக இருக்கின்றனவா வெவ்வேறாக இருக்கின்றனவா என மென்பொருள் கொண்டு ஒப்பிட்டு பார்க்க முடியும். அதன் மூலம் ஒருவர் யாருடைய பெற்றோர் அல்லது பிள்ளை என கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also read: மற்ற வேரியன்ட்களை விட ஓமைக்ரான் கடுமையானதா? தற்போதைய தடுப்பூசிகள் பலனளிக்குமா? 

First published: