ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

பழுப்பு நிற அரிசி நல்லதா அல்லது வெள்ளை அரிசி நல்லதா? ஊட்டசத்து நிபுணர்கள் தரும் கைட்லைன்ஸ்

பழுப்பு நிற அரிசி நல்லதா அல்லது வெள்ளை அரிசி நல்லதா? ஊட்டசத்து நிபுணர்கள் தரும் கைட்லைன்ஸ்

இரத்தத்தில் எவ்வளவு வேகமாக சர்க்கரையின் அளவு உயரம் என்பதை கிளைசெமிக் குறியீட்டை கொண்டு மதிப்பிடுவார்கள்.

இரத்தத்தில் எவ்வளவு வேகமாக சர்க்கரையின் அளவு உயரம் என்பதை கிளைசெமிக் குறியீட்டை கொண்டு மதிப்பிடுவார்கள்.

இரத்தத்தில் எவ்வளவு வேகமாக சர்க்கரையின் அளவு உயரம் என்பதை கிளைசெமிக் குறியீட்டை கொண்டு மதிப்பிடுவார்கள்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவு பொருட்களில் பல சத்துக்கள் இல்லாதவையாகவே உள்ளது. குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் நாம் அதிகமாக துரித உணவுகளை எடுத்து கொள்கிறோம். உணவு உற்பத்திக்கு என்று ஒரு குறிப்பிட்ட கால அளவு உள்ளது. ஆனால் அதை தவிர்த்து உடனடியான முறையில் உணவுகளை பெரும்பாலும் உற்பத்தி செய்கிறோம். தமிழ்நாட்டில் நமது முதன்மை உணவு பொருளாக இருப்பது அரிசி தான்.

இப்போதெல்லாம் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியை தான் நாம் அதிகம் சாப்பிடுகிறோம். ஆனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் இது போன்று வெள்ளை அரிசியை அதிக அளவில் சாப்பிடவில்லை. மாறாக பழுப்பு நிற அரிசியை சாப்பிட்டு வந்தார்கள். உண்மையில் பழுப்பு நிற அரிசி நல்லதா அல்லது வெள்ளை அரசி நல்லதா என்பதை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெள்ளை அரிசி:

வெள்ளை அரிசி என்பது நாம் நினைப்பது போன்று நேரடியாக வெள்ளையாக உற்பத்தியாவது கிடையாது. பொதுவாக அரிசியின் மேல் புறத்தில் பழுப்பு நிறத்தில் தோல் போன்ற ஒன்று இருக்கும். அதை உமி என்று சொல்வார்கள். அதை நீக்கி பாலிஷ் செய்து நமக்கு வெள்ளை அரிசியாக வருகிறது. இந்த தோல் பகுதியில் அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. இன்று பழுப்பு நிற அரிசி என்று விற்கப்படும் அனைத்துமே வெள்ளை அரிசியை போன்று பாலிஷ் செய்யப்படாத அரிசி வகை.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

கிளைசெமிக் குறியீடு:

இரத்தத்தில் எவ்வளவு வேகமாக சர்க்கரையின் அளவு உயரம் என்பதை கிளைசெமிக் குறியீட்டை கொண்டு மதிப்பிடுவார்கள். அந்த வகையில் வெள்ளை அரிசியின் கிளைசெமிக் குறியீடு 70+ ஆக உள்ளது. இது அதிகப்படியான கிளைசெமிக் குறியீடு ஆகும். இதுவே பழுப்பு நிற அரிசியில் கிளைசெமிக் குறியீடு 50 ஆக உள்ளது. இது மீடியம் அளவில் இருக்கிறது. இதன் மூலம் வெள்ளை அரிசியை காட்டிலும் பழுப்பு நிற அரிசியை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாது என்பது தெரிய வந்துள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பழுப்பு நிற அரிசி நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நார்சத்து:

நமது உடலுக்கு நார்சத்து அவசியம் தேவையானது. தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் நார்சத்து குறைவாக இருந்தால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் உண்டாகும். நமது பெரும்பாலான உணவுகள் அனைத்தும் அரிசியை சார்ந்து இருப்பதால், தினசரி உடலுக்கு தேவைப்படும் 25 முதல் 30 கிராம் நார்சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே ஊட்டசத்துக்கள் இல்லாத கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்து கொள்ளாதீர்கள். எனவே பாலிஷ் செய்யாத பழுப்பு நிற அரிசியை சாப்பிடுவது நல்லது. இதன் சுவை சற்று மாறி இருந்தாலும் பிடித்த ரெசிபிக்களை இதில் செய்து சாப்பிட்டு வரலாம்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

பெரி பெரி நோய்:

1900-களில் வைட்டமின் பி1 குறைபாட்டால் பலருக்கு பெரி பெரி என்கிற நோய் வந்தது. இதற்கு முக்கிய காரணமாக பழுப்பு நிற அரிசியை தவிர்த்து வெள்ளை அரிசியை மக்களிடம் கொண்டு வந்தது தான் காரணம். குறிப்பாக அரிசி பிரதான உணவாக சாப்பிட்டு வந்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதன் மூலம் பழுப்பு நிற அரிசியே நல்லது என்று அறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த பழுப்பு அரிசியில் தான் ஆரோக்கிய பயன்கள் உள்ளது.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Rice, White Rice