உலகளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் குறையத் தொடங்கினாலும், சீனா, ஜெர்மனி போன்ற குற்றிப்பிட்ட நாடுகளில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. முன்னதாக, கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை உலக நாடுகள் கைவிட்டு விட்டது வருத்தமளிப்பதாக தெரிவிப்பதாக உலக சுகாதார மையம், பெருந்தொற்றின் துவக்கக்காலத்தை தான் தாண்டியிருக்கிறோம், வைரஸ் இன்னும் போகவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தது.
மறுபுறம், கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போரில் பூஸ்டர் தடுப்பூசியை முக்கிய ஆயுதமாக உலக நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் இளைஞர்கள் தயக்கம் காட்டி வரும் வேளையில், பூஸ்டர் தடுப்பூசி பற்றிய சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.
இந்தியாவில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை டோஸ் தனியார் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் படி, ஏற்கனவே இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டு
ஒன்பது மாதங்கள் பூர்த்தி அடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ் போட்டுக் கொள்ளலாம்.
இருப்பினும், சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் படி,
ஏப்ரல் 9-14 தேதிகளில் 18-59 வயதுயவர்களில் வெறும் 1,10,212 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை டோஸ் நிலவரம்:
செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை |
சுகாதாரப் பணியாளர்கள்
(2022 ஜனவரி 10, முதல் தொடங்கப்பட்டது) |
முதல் தவணை |
1,04,04,316 |
இரண்டாவது தவணை |
1,00,07,750 |
முன்னெச்சரிக்கை டோஸ் |
45,85,873 |
முன்களப் பணியாளர்கள் |
முதல் தவணை |
1,84,14,253 |
இரண்டாவது தவணை |
1,75,25,215 |
முன்னெச்சரிக்கை டோஸ் |
71,12,025 |
12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (2022 16 மார்ச் அன்று தொடங்கப்பட்டது) |
முதல் தவணை |
2,40,16,391 |
இரண்டாவது தவணை |
57,147 |
15-18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் (2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டது) |
முதல் தவணை |
5,78,45,181 |
இரண்டாம் தவணை |
4,03,05,973 |
18-44வயதுக்குட்பட்ட பிரிவினர் ( 2020, ஏப்ரல் 10 முதல் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்பட்டது) |
முதல் தவணை |
55,52,21,431 |
இரண்டாவது தவணை |
47,22,70,506 |
முன்னெச்சரிக்கை டோஸ் |
24,335 |
45-59 வயதுக்குட்பட்ட பிரிவினர்
( 2020, ஏப்ரல் 10 முதல் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்பட்டது) |
முதல் தவணை |
20,28,45,688 |
இரண்டாவது தவணை |
18,67,02,436 |
முன்னெச்சரிக்கை டோஸ் |
85,877 |
60 வயதுக்கு மேற்பட்டோர்
(2022 ஜனவரி 10, முதல் தொடங்கப்பட்டது) |
முதல் டோஸ் |
12,68,10,089 |
இரண்டாவது டோஸ் |
11,62,97,530 |
முன்னெச்சரிக்கை டோஸ் |
1,32,99,707 |
முன்னெச்சரிக்கை தவணை |
2,51,07,817 |
மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை |
1,86,38,31,723 |
சுகாதார பணியாளர்கள் முன்களப் பணியாளர்கள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டது. எனவே, தற்போது வரை
2,51,07,817 முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9-14 தேதிகளில் நாட்டில் 7.41 லட்சம் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தபபட்டுளளது. இந்த எண்ணிக்கை,ஏப்ரல் 2-8 மற்றும் மார்ச் 26- ஏப்ரல் 1 ஆகிய தேதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். எனவே, 18-59 வயது பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்படும் வேகப்படும் குறைவாக இருக்கிறது என்பது புரிய வருகிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்வோரின் குறைந்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு, காரணம் என்ன?
2021, ஜனவரி மாதம் இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் திறன் சிறப்பாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தடுப்பூசி க்குப் 6 மாதங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலும் இதே மாதிரியான முடிவுகள் வெளியாகியன. இந்நிலையில்,
2021 செப்டம்பர் மாதம் மூன்றாம் தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்களில் மருத்துவமனையில்அனுமதிக்கப்படும் விகிதமும், உயிரிழப்பு விகிதமும் கணிசமாக குறைவதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசியை அறிமுகம் செய்தன.
இந்நிலையில், நான்காவது டோஸ் எடுத்துக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தீவிர கொரோனா பாதிப்பு (ICU CARE) உயிரிழப்பு போன்றவைகள் ஏற்படாமல் இருப்பதாக இஸ்ரேல் ஆய்வாளர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நான்காம் டோஸ் போட்டுக் கொண்டவர்களில் தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது குறைந்து காணப்படுகிறது.
இளைஞர்களுக்கு பூஸ்டர் டோஸ் அனுமதிக்க ஏன் தாமதம்?
தடுப்பூசி அணுகளில் அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் நாடுகளிடையே காணப்படும் இடைவெளி அதிகமாக இருப்பதால் உலக சுகாதார அமைப்பு பூஸ்டர் டோஸ் முயற்சிகளை கைவிடுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியா, கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவம் சாராத குறுக்கீடுகளையும் முதன்மைப்படுத்தி வருகிறது. மேலும், வயது குறைந்த பிரிவினருக்கு கோவிட்-19 பாதிப்பு மிக லேசாக / அறிகுறியற்றவையாக இருந்தன. எத்தனை தடுப்பூசி செலுத்தினால் கொரோனா தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறமுடியும் என்ற கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை. மேலும், பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, மாரடைப்பு, original antigenic sin போன்ற மருத்துவ சம்பவங்கள் ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முற்றிலுமாக வைரஸ் ஒழித்துவிட முடியாது, வைஸுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கூறிக் கொண்டு வந்தது. எனினும், ஓமிக்ரான் போன்ற புதிய வகை தொற்றுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்த காரணத்தினால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.