Home /News /explainers /

பெங்களூருவை புரட்டிப்போட்ட கனமழை.. கர்நாடகாவில் தொடர்மழை பெய்வதற்கான கரணம் என்ன?

பெங்களூருவை புரட்டிப்போட்ட கனமழை.. கர்நாடகாவில் தொடர்மழை பெய்வதற்கான கரணம் என்ன?

பெங்களூரு வெள்ளம்

பெங்களூரு வெள்ளம்

பருவமழையின் போது தாழ்வு மண்டலங்கள், சுழற்சிகள், புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகுவது போல் வெட்டு மண்டலமும் ஒரு சாதாரண நிகழ்வு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India
ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெங்களூருவில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இரவு பகலாக பெய்யும் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

செவ்வாய்க்கிழமையும் மாநிலத்தின் பலபகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மேலும் IMD ஆனது தன் தினசரி வானிலை அறிவிப்பில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

பெங்களூரு நகரில் திங்கள்கிழமை இரவு 13 சென்டிமீட்டர் மழை பெய்தது, இது மாநிலத்தில் இந்த மழை காலத்தின் அதிகபட்ச அளவாகும். தென் கர்நாடகாவின் 16 மாவட்டங்களில் பருவமழை செயல்பாடு தீவிரமடைந்தது. அதே நேரத்தில் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருந்தது என்று வானிலை மையம் குறிப்பிடுகிறது.

கர்நாடகாவில் ஏன் இவ்வளவு கனமழை பெய்கிறது?

தென்மேற்கு பருவக்காற்று ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வீசும். இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் உருவாகும் காற்று  இந்திய நிலப்பரப்பிற்கு வரும் போது இரண்டு கிளைகளாக பிரியும், ஒன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி ராஜஸ்தான் வரை செல்லும். மற்றொரு கிளை வங்காள விரிகுடா பக்கம் திரும்பி வடகிழக்கு மாநிலங்கள் வழியே வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதியை வந்தடையும்

பெங்களூரு மழை வெள்ளத்தால் 5 மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்த ஊழியர்கள்.. ரூ.225 கோடி இழப்பு என நிறுவனங்கள் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை சங்கிலி தொடராய் உயர்ந்து நிற்பதால், ஈரப்பதம் ஏந்தி வரும் காற்று இந்த மலையில் மோதி அங்குள்ள பகுதியில் மழையாக பொழியும். அதனால் தான் தென் இந்தியாவின் மற்ற பகுதிகளை விட கேரளா, கர்நாடகம், மும்பை, மகாராஷ்டிரா பகுதிகள் அதிக மழை பெறுகிறது.

 வெட்டு மண்டலம்:

கர்நாடகா ஒட்டிய பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4.5-5.8 கிலோமீட்டர் உயரத்தில் உருவாகியுள்ள ஒரு வெட்டு மண்டலம் காரணமாக, பெங்களூரு உட்பட கர்நாடகாவின் தெற்கு உள்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

வெட்டு மண்டலம் என்பது பருவமழை காலநிலை அம்சமாகும், இது அந்த மண்டலத்தில் கடுமையான மழையை குவிக்கும் எதிரெதிர் காற்றுகளால் நிரப்பப்பட்ட பகுதி.

பசிபிக் கடலில் மிதக்கும் 90% குப்பைகளுக்கு இந்த 6 நாடுகள்தான் காரணம்..

மேலும் மழை வரும்
நேற்று மாநிலத்தில் குறைந்த மற்றும் மிதமான மழை வந்த அதே வேளையில், அடுத்த சில நாட்களுக்கு நகரத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு-தெற்கு பள்ளத்தாக்கு, வட உள் கர்நாடகம் முதல் குமரி வரையிலும், உள் தமிழக பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை பெய்வதால், மாநிலத்திலும் குறிப்பாக பெங்களூருவிலும் நிலைமை இப்போது இருப்பதை விட மிக மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தின் பெரும் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து, தண்ணீர் தேங்கிய தெருக்கள் மற்றும் நீரில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகளாக உள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bangalore, Flood, Heavy rain

அடுத்த செய்தி