Explainer: இன்ட்ரா டே டிரேடிங் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!

மாதிரி படம்

படித்தவர்கள் மட்டுமே பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
100 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில் 2 முதல் 3 விழுக்காட்டினர் மட்டுமே பங்குசந்தை முதலீட்டில் வர்த்தகம் செய்கின்றனர். ஏராளமானோர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து பெரும் வருவாயை ஈட்டியுள்ளனர். பொதுவாக, காலம்காலமாக பங்குச் சந்தைகள் பாதாள கிணறு என்றும், அதில் விழுந்தால் எழ வாய்ப்பே இல்லை என்பது போன்ற தகவல்கள் மக்களிடையே அதிகம் பரப்பப்பட்டுள்ளன. இதனால், பெரும்பான்மையான மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

மற்றொரு முக்கிய காரணம், பங்குச்சந்தைகள் குறித்து போதிய புரிதல் இல்லாமை எனலாம். படித்தவர்கள் மட்டுமே பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. உண்மையில், பங்குச் சந்தையைப் பற்றிய புரிதல் இருந்தால் கூட இதில் வெற்றிபெறலாம். பங்குச் சந்தையில் நுழைய விருப்பம் இருப்பவர்களாக இருந்தால், அடிப்படை விஷயங்களில் ஒன்றான இன்ட்ரா டே (Intraday trading) வர்த்தகம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த இன்ட்ரா டே வர்த்தக்கம் என்பது பங்குகளை வாங்கி, விற்பது ஒரே நாளில் நிறைவடைந்துவிடும். ஆங்கிலத்தில் இதனை ஸ்கொயர்டு ஆப் (squared-off). இந்த வர்த்தகத்தில் ஓனர்ஷிப்கோர முடியாது. இன்ட்ரா டே டிரேடிங் என்பது ஒரு காலத்தில் தொழில்முறை வர்த்தகர்கள் மற்றும் படித்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், டிஜிட்டல் பயன்பாட்டில் யார் வேண்டுமானாலும் இன்ட்ரா டே டிரேடிங்கில் ஈடுபடலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

பங்குகள் வித்தியாசம்

வழக்கமான வர்த்தகத்துக்கும், இன்ட்ரா டே வர்த்தக்கத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. இன்ட்ரா டே பங்கு வர்த்தகத்தில் ஒரே நாளில் உங்களின் நிலையை அறிந்து கொள்ளமுடியும். பங்குகளை வாங்குவதும், விற்பனை செய்வதும் ஒரே நாளில் நிறைவடைந்துவிடும். இதில், பங்குகளின் ஓனர்ஷிப்பில் மாற்றம் இருக்காது. வழக்கமான பங்குகளில் நீங்கள் தேவையான நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை செய்து கொள்ளலாம்.

இன்ட்ரா டே யார் செய்யலாம்?

இன்ட்ரா டே பங்குசந்தை செய்ய விரும்புவர்கள், ரிஸ்க எடுக்க தயாராக இருப்பவர்களாக இருக்க வேண்டும். சந்தை நிலவரத்தை உன்னிப்பாக மற்றும் தினசரி கவனிப்பவராக இருப்பவர்கள் மட்டுமே இந்த டிரேடிங்கில் ஈடுபட முடியும். இன்ட்ரா டே டிரேடிங்கை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் பணத்தை இழந்தவர்களாகவே உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் பங்குச் சந்தை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், மற்றொருவரின் பேச்சைக் கேட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதால், பணத்தை இழக்கின்றனர். அதிக ஆபத்து இருக்கும் அதேவேளையில், பம்பர் பரிசு அடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இன்ட்ரா டே-வில் இருக்கும் ஆபத்து

மிகமிக அதிக ஆபத்து நிறைந்த வர்த்தகம் இன்ட்ரா டே பங்கு வர்த்தகம் ஆகும். உங்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் அதிக ரிட்டன்ஸ் வருதற்கும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், பங்கு டெலிவரியில் அதிக ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. பகல் நேரத்தில் நீங்கள் வேறொரு பணியில் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இன்ட்ரா டே டிரேடிங் சரியாக இருக்காது. சந்தை நிலவரத்தை மிக மிக உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். மேலும், சரியான நேரத்தில் பங்குகளை விற்பனை செய்வது குறித்த புரிதல் மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் முடிவு எடுக்கத் தவறினால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும்.

இன்ட்ரா டே எப்படி செய்யலாம்?

இன்ட்ரா டே வர்த்தகத்தில் தேர்ந்த நபராக இருக்கும் இடைத்தரகர் உதவியுடன் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். அவரிடம் இருந்து டெக்னிக்கல் உதவிகளை பெற்றுகொண்டால், சரியான முடிவெடுக்க உங்களுக்கு வசதியாக இருக்கும். தற்போது, இன்ட்ரா டே வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு என்று சில தொழில்நுட்ப செயலிகள் சந்தையில் உள்ளன. அவற்றில் சரியானவற்றை தேர்தெடுத்து உங்கள் வழிகாட்டல்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

எந்த பங்குகளை தேர்தெடுக்கலாம்?

இன்ட்ரா டே வர்த்தகத்தை ஒரே நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்பதால், அதிக விற்பனையாகும் அல்லது நல்ல உயர்வை சந்திக்கும் பங்குகளை வாங்குவது நல்லது. இருந்தாலும், அந்த பங்குகளை டெலிவரி செய்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. மற்ற பங்குகளை வாங்கு மிகப்பெரிய சரிவை சந்திப்பதைக் காட்டிலும், அதிக விற்பனையாகும் பங்குகளை வாங்கும்போது ரிஸ்க் குறைவு.

முடிவெடுத்தல்

இன்ட்ரா டே வர்த்தகத்தில் நேரம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களை மிகப்பெரிய இழப்புக்கு கொண்டு செல்லும் அல்லது லாபத்தை இழக்கச் செய்யும். பெரும்பாலான வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால், வர்த்தகம் தொடங்கும் முதல் ஒரு மணி நேரத்துக்குள் முடிவெடுப்பது என்பது ஆபத்துக்கான முக்கிய காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்ட்ரா டே- வில் இருக்கும் நன்மைகள்

1. முதலீட்டாளர்களைக் காட்டிலும் அதிக லாபம் கிடைக்கும்
2. இடைத்தரகர் கட்டணம் மிகமிக குறைவு
3. சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் உத்திகள் உடனடி பலனைக் கொடுக்கும்

இருப்பினும், ஆபத்துகளை அறிந்து களத்தில் இறங்குவது சிறந்தது. உங்களால் ஆபத்தை எதிர்கொள்ளும் துணிவிருந்தால், நிச்சயம் இன்ட்ரா டே வர்த்தகம் கைகொடுக்கும்.

எப்படி தொடங்குவது?

முதலில் டீ மேட் அக்கவுண்ட் (demat account) தொடங்க வேண்டும். ஏற்கனவே உங்களிடம் அக்கவுண்ட் இருந்தாலும், இன்ட்ரா டேவுக்காக மற்றொரு கணக்கை தொடங்க வேண்டும். பின்னர், இன்ட்ரா டே வர்த்தகத்துக்காக இருக்கும் சரியான செயலிகளை தேர்தெடுத்து, அதன் வழியாக டெக்னிக்கல் உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள். சில செயலிகள் வரிவிலக்கு தொடர்பான தகவல்களையும் உங்களுக்கு கொடுத்து உதவுகின்றன. நாள்தோறும், சந்தையை முழுமையாக கவனியுங்கள். TradeSmart அல்லது KEAT ProX செயலிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

நிபுணர்களின் 80% விதிமுறை

1. இன்ட்ரா டேவில் விரைவாக பங்குகளின் வேல்யூ ஏரியாவை கணிப்பது முக்கியம். அந்தவகையில், முந்தைய நாள் வர்த்தகத்தில் 70 விழுக்காடு விலையில் இருக்க வேண்டும். இதனை பார்த்தவுடன், பங்கின் விலை எங்கு தொடங்குகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

Also read... உங்கள் பங்கீடு இல்லையென்றாலும் PF கணக்கில் உங்களால் தொடர்ந்து சம்பாதிக்க முடியுமா? விவரங்கள் உள்ளே!

2. விலை வரம்புக்கு கீழே பங்கின் வர்த்தகம் தொடங்கி முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக விலை அங்கேயே இருந்தால் 80% வாய்ப்புகள் உள்ளன.

3. அதேநேரத்தில் பங்கின் வேல்யூக்கு மேலாக வர்த்தகம் தொடங்கி அரைமணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே இருந்தால் விலை குறையவும் வாய்ப்புகள் உள்ளது

4. இன்ட்ரா டே பங்குவர்த்தகத்தின் மிக முக்கியமான அடிப்படை விஷயம் என்னவென்றால், பங்கின் மதிப்பு மேலே தொடங்கி அங்கேயே இருந்தால் வேல்யூவில் இருந்து ஒரு ஷார்ட்டை (short position) எடுக்கலாம்.
5. பங்கின் மதிப்பு கிழே தொடங்கி அரை மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே இருந்தால் லாங் பொஷிஷனை எடுக்கலாம்.

6. பங்கின் வேல்யூ ஏரியாவில் 20 விழுக்காடு கூட ஈடு செய்யவில்லை என்றால், stop-loss-ஐ செட் செய்ய மறந்து விடாதீர்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: