லிட் என்சைம் ஒரு லிப்போபுரோட்டீனை உருவாக்குகிறது. இது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் செயல்பட்டு, பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
“எது உங்களைக் கொல்லவில்லையோ, அது உங்களை வலிமையாக்குகிறது” - ஃபிரெட்ரிக் நீட்சேவின் உலக அளவில் பிரபலமான இந்த மேற்கோள் பாக்டீரியாவிற்கும் பொருந்தும்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் பாக்டீரியாவைக் கொல்ல முடியாமல் போவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன். முதலாவது, பாக்டீரியா இயற்கையான எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இரண்டாவது, நோயாளிகள் பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொள்ளாததால், பாக்டீரியா ஆண்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்குகிறது. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு என்பது பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் மிகப்பெரிய நெருக்கடிகளில் ஒன்றாகும். ஏனென்றால், பாக்டீரியாவை நம்மால் கொல்ல முடியாவிட்டால், அவை நம்மைக் கொன்றுவிடும்.
ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு எதிராக போர் நடந்து கொண்டிருக்கிறது, அதிலே விஞ்ஞானிகள் மிகப்பெரிய ஒரு சாதனையை செய்துள்ளனர். அயர்லாந்தில் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேச ஆய்வாளர்கள் குழு ஒன்று, ஒரு பாக்டீரியா என்சைமின் ப்ளூபிரிண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. தொற்றுநோய்களின் போது, தொற்று பாதித்தவரின் உடலில் நோயெதிர்ப்பு ரெஸ்பான்சை “குளிர்விக்கிறது” என்பதைக் காட்டுகிறது.
லிட் (லிபோபுரோட்டீன் இன்ட்ராமோலிகுலர் டிரான்ஸாசிலேஸ்) என்ற என்சைம், நோயெதிர்ப்பு ரெஸ்பான்சை குறைப்பதன் மூலம், “சந்தேகத்திற்கிடமான” முறையில் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். லிட் என்சைம் ஒரு லிப்போபுரோட்டீனை உருவாக்கி, இது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஈடுபடுகிறது. நோயெதிர்ப்பு ரெஸ்பான்சை ‘குளிர்வித்து’, தொற்றால் பாதிக்கப்பட்ட உடலில், பேக்டீரிய தனக்கென்று ஒரு இடத்தைப் பெறுவதற்கு இந்த என்சைம் உதவுகிறது.
லிபோபுரோட்டின்கள் பாக்டீரியா உயிரணுக்களில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன – அதிலே, அவற்றை உயிருடன் வைத்திருப்பது முதல் அவர்களின் இலக்கான நோயெதிர்ப்பு ரெஸ்பான்ஸில் ஈடுபடுவது வரை அடங்கும். மாலிகுளர் அளவில் இந்த என்சைம் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைப் புரிந்துகொள்வது, விஞ்ஞானிகள் அதை எதிர்த்துப் போராடுவதற்கான உத்திகளை உருவாக்க உதவும். இப்போது விஞ்ஞானிகள் ஹை-ரெசல்யூஷன் கிரிஸ்டல் அமைப்பு மற்றும் என்சைமின் வரைபடத்தை உருவாக்கியுள்ளதால், என்சைம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய விரிவான புரிதல் அவர்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய முன்னேற்றம்.
விஞ்ஞானிகளின் அறிக்கை படி, என்சைம் ஒரு வைரஸ் காரணியாக இருக்க வாய்ப்புள்ளது - இது ஒரு நோய்க்கிருமியால் கடுமையான தொற்றுநோயை உருவாக்கும் ஒரு அமைப்பாகும். இந்த ஆய்வின் மூத்த எழுத்தாளர் மார்ட்டின் காஃப்ரே கருத்துப்படி, லிட் என்சைம் மிகவும் நெருக்கடியில் தேவைப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்குவதற்கான “ஒரு முக்கியமான இலக்காக” இருக்கக்கூடும். அது மட்டுமின்றி, ஆண்டிபயாட்டிக் எதிர்ப்பு நம்முடைய சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து வருகிறது என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லிப்போபுரோட்டீன் தயாரிக்கும் மற்றும் பிராசஸ் செய்யும் மற்ற என்சைம்களை, ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும், பாக்டீரியா தன்னுடைய எதிர்ப்பை வலுவாக உருவாக்க முடியாத வாறு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பலவீனமான இலக்குகளைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.