முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? - கற்பிதங்களும் உண்மையும்! - ஓர் அலசல்!

பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? - கற்பிதங்களும் உண்மையும்! - ஓர் அலசல்!

பல்லிகள் இல்லை என்றால் மனித வாழ்க்கை என்னவாகும்?. மனிதர்கள் பல்லிகளைக் கண்டு அஞ்சுவதற்கு அவர்களது மரபணுக்களே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பல்லிகள் இல்லை என்றால் மனித வாழ்க்கை என்னவாகும்?. மனிதர்கள் பல்லிகளைக் கண்டு அஞ்சுவதற்கு அவர்களது மரபணுக்களே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பல்லிகள் இல்லை என்றால் மனித வாழ்க்கை என்னவாகும்?. மனிதர்கள் பல்லிகளைக் கண்டு அஞ்சுவதற்கு அவர்களது மரபணுக்களே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்லிகள்... உங்கள் விரல் அளவு மட்டும் கொண்ட ஒரு உயிரினத்தின் பெயரைச் சொன்னதும், மனத்திற்குள் தோன்றும் அருவருப்பு, முகத்தில் வெளிப்படுகிறது.

இதற்கு என்ன காரணம்?, பல்லிகளில் எல்லாவகையும் கொல்லக்கூடிய திறன் கொண்டது அல்ல. உலக அளவில் கிட்டத்தட்ட 6000 வகை பல்லிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாம்புகளுக்குக் கால், கை வைத்துப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது பல்லிகள்.

பல்லிகள் மனிதர்கள் வாழும் இடங்களில், பூச்சிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது. அதுவும், துணிகள் மற்றும் மற்றும் நீங்கள் பாதுகாக்கும் பல பொருட்களைப் பூச்சிகளிடம் இருந்து காப்பதில் பல்லிகளின் பங்கு மிக அதிகம்.

Komodo Dragon எனப்படும் பெரிய வகை பல்லி

பல்லிகள் நம்மைச் சுற்றி என்னவாக இருக்கின்றன?

சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் மோதி மனிதர்களால் வெற்றிகொள்ள முடிவதில்லை. எனவே அவற்றிடம் இருந்து தப்பிக்க மனிதர்கள் பல உத்திகளைக் கையாளுகின்றனர். ஆனால் விரல் அளவு கொண்ட பல்லிகளைப் பார்த்து மனிதர்கள் ஏன் அஞ்ச வேண்டும்?. பல்லிகள் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் உடல் அமைப்பு ஒரு வகையில் காரணமாக அமைகிறது. உயிரியலாளராக சார்லஸ் டார்வின் தன்னுடைய கலாபகோஸ் பயணத்தில் கண்ட ஒருவகை பல்லியை “அருவருப்பான மற்றும் முட்டாள்தனமான முகத்தோற்றத்தைப் பல்லிகள் கொண்டுள்ளது” என்று பதிவு செய்துள்ளார்.

"கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்" புத்தகத்திலிருந்து

பல்லிகள் மீதான வெறுப்பு என்பது மரபணு ரீதியில் தொடர்ந்திருக்கலாம் என்று, “கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்” என்ற புத்தகத்தில் எழுத்தாளர் ஜீயோ டாமின் குறிப்பிட்டுள்ளார். “மனிதர்கள் பொதுவாக சக பாலூட்டிகளைக் கண்டோ, பறவைகளைக் கண்டோ வெறுப்பாவதில்லை. பன்றிகள் போன்று சில விலங்குகள் மீது குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வெறுப்பு கொண்டிருந்தாலும், அந்த வெறுப்புணர்வு அவர்களுக்குப் பிறப்பிலேயே ஏற்பட்டதல்ல. கற்பிதங்களால் ஏற்பட்டவை. பெரும்பாலாக மனிதர்களின் வெறுப்பு பூச்சிகள் மீதோ அல்லது பல்லிகள் போன்ற ஊர்வனவற்றின் மீதோதான் இருக்கின்றது. பொதுவாகப் பூச்சிகளும் ஊர்வனவும் மட்டும் நச்சுக்களைக் கொண்டிருப்பதால் நம் மூதாதையரிடமிருந்து அவற்றின் மீதான ஒரு அச்சமும் பயமும் நமக்குக் கடத்தப்பட்டிருக்கக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்லிகள்

பல்லிகள் செதிலுடன் கூடிய ஊர்வன வரிசையை சேர்ந்தது. உலகத்தில் அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும், பல்லிகள் வாழ்கின்றன. சிறிய பூச்சிகளை உண்ணும் பல்லிகளிலிருந்து, பெரிய பெரிய விலங்குகளை வேட்டையாடும் அளவு கொண்ட பல்லிகள் வரை உலகில் உள்ளன. அவற்றிலும், பலருக்கும் தெரிந்ததும், அச்சப்படுவதும் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்காகதான் இருக்கும். நம் வீடுகளுக்கு வெளியே சுற்றிவரும் ஓணான், அரணையும் பல்லி இனத்தை சேர்ந்தவையே.

பல்லிகள் விஷத் தன்மை கொண்டவையா?

வீடுகளில் சுற்றிவரும் பல்லிகள் விஷத்தன்மை கொண்டவை என்ற விம்பம், பல காலமாக இருந்து வருகிறது. உண்மையில் பல்லிகள் விஷத்தன்மை கொண்டவையா என்றால் அதை மறுப்பு தெரிவிக்கிறார்கள் பல ஆய்வாளர்கள். எனில் பல்லி விழுந்த உணவு ஏன் ஆபத்தாகிறது என்பது பற்றி மருத்துவர் சக்ரவர்தியிடம் கேட்டபோது, “பல்லிகள் விழுந்த உணவுகள் எப்போதும் விஷம் கிடையாது. ஆரம்பத்திலிருந்தே பல்லிகள் பற்றி நம் மனநிலை அப்படி இருப்பதால் மன உளைச்சலில் வாந்தி வரலாம். ஒரு சில பல்லிகளின் உடலில் Salmonella என்ற கிருமி இருக்கும் அது பல்லிகள் மூலம், உணவில் கலந்துவிடலாம். அது மனிதர்களுக்கு தொற்றுகளை ஏற்படுத்தலாம். பல்லி விழுந்த உணவை உண்டு யாரும் உயிரிழந்ததாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

இதன் மூலம் பல்லிகள் எப்போதும் ஆபத்தானது இல்லை என்று நாம் புரிந்துக்கொள்ளலாம்.

வீட்டை சுற்றி காணப்படும் அரணை

அரணைகள் ஆபத்தானதா?

வீட்டை சுற்றி இருக்கும் அரணைகள் மற்றும் ஓணான்கள் அதிக அளவில் இருக்கும். அவற்றை பலரும் விஷம் என்று நினைத்து அச்சப்படுவது உண்டு. ஆனால் அந்த அரணைகள் விஷத்தன்மையற்றவை என்று, ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த அரணைகள் சுற்றித்திரியும் இடத்தில் இருக்கும் கிரிமிகளால் தொற்று போன்ற பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Animals, Lizard, Special Facts