முகப்பு /செய்தி /Explainers / Explainer : H10N3 பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு எளிதில் பரவுமா? பாதுகாப்பாக இருப்பது எப்படி!

Explainer : H10N3 பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு எளிதில் பரவுமா? பாதுகாப்பாக இருப்பது எப்படி!

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல்

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் (Jiangsu), 41 வயது நபர் ஒருவருக்கு H10N3 பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கே ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிவு தெரியாத நிலையில், சீனாவில் உலகிலேயே முதல் முதலாக H10N3 என்ற பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் (Jiangsu), 41 வயது நபர் ஒருவருக்கு H10N3 பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவே H10N3 பறவைக் காய்ச்சலின் உலகில் முதல் மனித பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவலை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (NHC) தெரிவித்துள்ளது. மேலும் அந்த நபரின் நெருங்கிய தொடர்புகளிடம் செய்யப்பட்ட மருத்துவ கவனிப்பின் மூலம், புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங்கில் வசிக்கும் குறிப்பிட்ட நபருக்கு கடந்த ஏப்ரல் கடைசியில் காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் காணப்பட்டன.

தொடர்ந்து அவர் சிகிச்சை மற்றும் ஆய்வுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், கடந்த மே 28 அந்த நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சீன தரப்பு கூறி உள்ளது. எனினும் அந்த 41 வயதான நபருக்கு இந்த பரவி காய்ச்சல் எப்படி பரவியது என்பது பற்றிய தகவல்களை சீனா இதுவரை வெளியிடவில்லை.

இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியதா? H10N3 பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு

*H10N3 பறவை காய்ச்சல் ஒப்பீட்டளவில் கடுமை குறைவான அல்லது குறைந்த நோய் கிருமியாகவே குறிப்பிடப்படுகிறது. அதாவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. , இது பெரிய அளவில் பரவுவதற்கான மிகக் குறைந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது என்று NHC தெரிவித்துள்ளது.

*அந்த வைரஸின் முழு மரபணு பகுப்பாய்வு அது ஏவியன் வம்சாவளியை (avian origin) சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய பரிசோதனைகள் என்ன?

*உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, H10N3 பறவைக் காய்ச்சல் மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

*பறவை காய்ச்சலின் H10N3 திரிபு இந்த வைரஸின் பொதுவான திரிபு அல்ல.

*உலகளவில் இந்த வைரஸால் மனிதர்களுக்கு ஏற்கனவே நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக இதற்கு முன் எந்த பதிவும் இல்லை. இதுவே முதல் முறை

*பொதுவாக பறவை காய்ச்சல் வைரஸ்கள் கோழிகளில் காணப்படுவதால், மனிதர்களில் தொற்று ஏற்படுவது என்பதை தவிர்க்க முடியாது.

பறவை காய்ச்சல் வைரஸ்களிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது..?

* கோழி வளர்ப்பு மற்றும் கோழி பண்ணை சார்ந்த துறையில் பணிபுரியும் மக்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த பறவைகளுடன் நேரடி தொடர்பை தவிர்ப்பதன் மூலம் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* ஏற்கனவே இருக்கும் கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் மாஸ்க் அணிந்து சுய பாதுகாப்பு விழிப்புணர்வோடு இருக்கும் அதே நேரத்தில் கூடுதலாக உணவு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு மக்களை NHC அறிவுறுத்தி உள்ளது.

First published:

Tags: H10N3 Bird Flu